Feeling Hungry After Eating: சாப்பிட்ட சிறிது நேரத்தில் மீண்டும் பசியா..? இந்த பிரச்சனைகளாக இருக்கலாம்..! - Tamil News | Feeling Hungry After Eating: If you feel hungry again shortly after eating, this is the reason in tamil | TV9 Tamil

Feeling Hungry After Eating: சாப்பிட்ட சிறிது நேரத்தில் மீண்டும் பசியா..? இந்த பிரச்சனைகளாக இருக்கலாம்..!

Published: 

19 Sep 2024 15:20 PM

Health Tips: காலையில் உணவு எடுத்து கொண்ட பிறகு நீங்கள் மதியம் சாப்பிடவில்லை என்றால் பசி நம் வயிற்றை கிள்ள தொடங்கும். சில நேரம் நாம் நன்றாக சாப்பிட்டு இருப்போம், இருப்பினும் சிறிது நேரத்திலேயே நமக்கு பசி ஏற்படும். சாப்பிட்ட உடனே பசி உணர்வு தோன்றினாலோ, நள்ளிரவில் திடீரென பசி எடுத்தாலோ நீங்கள் உடனடியாக சிப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை நோக்கி செல்கிறீர்கள். இருப்பினும், இந்த வகையான அறிகுறிகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Feeling Hungry After Eating: சாப்பிட்ட சிறிது நேரத்தில் மீண்டும் பசியா..? இந்த பிரச்சனைகளாக இருக்கலாம்..!

பசி எடுத்தல் (Image: Image Source/Connect Images/Getty Images and d3sign/Moment/Getty Images)

Follow Us On

பசியுடன் இருப்பது கொடூரமான விஷயம் மட்டுமல்ல, அது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். உதாரணத்திற்கு காலையில் உணவு எடுத்து கொண்ட பிறகு நீங்கள் மதியம் சாப்பிடவில்லை என்றால் பசி நம் வயிற்றை கிள்ள தொடங்கும். சில நேரம் நாம் நன்றாக சாப்பிட்டு இருப்போம், இருப்பினும் சிறிது நேரத்திலேயே நமக்கு பசி ஏற்படும். சாப்பிட்ட உடனே பசி உணர்வு தோன்றினாலோ, நள்ளிரவில் திடீரென பசி எடுத்தாலோ நீங்கள் உடனடியாக சிப்ஸ், பிஸ்கட் போன்ற ஸ்நாக்ஸ்களை நோக்கி செல்கிறீர்கள். இருப்பினும், இந்த வகையான அறிகுறிகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் பசி எடுக்கும்போதெல்லாம் சாப்பிட தொடங்குகிறீர்கள், இந்த பழக்கம் உங்களை அறியாமலேயே உடல் எடையை அதிகரிக்க செய்யும். முதலில் இது போன்ற பிரச்சனைகள் ஏன் ஏற்படுகிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Benefits of kohlrabi: மழை சீசனில் கிடைத்த மகத்துவம் நூக்கல்.. பக்கவாதம் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் அதிசய மருந்து!

சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமை:

பெரும்பாலான மக்கள் காலை சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். சில மதிய உணவை மாலை 3 அல்லது 4 மணிக்கு சாப்பிடுகின்றனர். இரவு உணவானது 10 முதல் 11 மணி கூட ஆகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ளவில்லை என்றாலோ அல்லது அடிக்கடி உணவை தவிர்த்து வந்தாலோ உங்கள் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படும். இந்த ஒழுங்கற்ற உணவு முறை உடலில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்து மீண்டும் மீண்டும் பசி எடுக்கும் பசியை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சாப்பிடுவது அவசியம்.

ஊட்டச்சத்து குறைபாடு:

உடலில் புரோட்டீன் குறைபாடு இருக்கும்போது இது நிகழ்கிறது. புரதத்திற்கு பசியை அடக்கும் ஆற்றல் உண்டு. உணவில் போதுமான புரதம் இல்லாததால், அதிகப்படியான உணவு உண்பதற்கு வழிவகுக்கும். உணவில் போதுமான ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளாதபோது, ​​உடல் சரியாக இயங்காது. உங்கள் உணவில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து குறைவாக இருந்தால், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணரலாம். எனவே பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் எடுத்து கொள்வதன் மூலம் உங்கள் வயிறு முழுமையாக நிரம்பும். இது உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.

மன அழுத்தம்:

நீங்கள் அதிகபடியான மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தாலும், உங்களுக்கு பசி அடிக்கடி ஏற்படும். மன அழுத்தத்தின் போது, ​​​​உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகின்றன, இதன் காரணமாக பசியின் உணர்வு அதிகரிக்கும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக, சிலர் அதிகமாக சாப்பிட தொடங்குவார்கள். எனவே, மன அழுத்தம் உங்கள் இருந்தால் நீங்கள் யோகா, உடற்பயிற்சி அல்லது தியானம் செய்து இவற்றை குறைப்பது நல்லது.

நீரிழப்பு:

பல நேரங்களில் உங்களுக்கு தாகம் காரணமாகவும் பசி எடுக்கும் உணர்வை பெறலாம். தாகத்திற்கும், பசிக்கும் உள்ள வித்தியாசத்தை மூளையால் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாது. இத்தகைய சூழ்நிலையில், உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளை அதை பசியின் சமிக்ஞையாக வெளிப்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீரை நீங்கள் எடுத்து கொள்வது மிக மிக அவசியம்.

தூக்கமின்மை:

நீங்கள் ஒழுங்காக தூங்காதபோது, தூக்கமானது நம் உடலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறைவான தூக்கம் உடலில் பசியைத் தூண்டும் ஹார்மோனின் (கிரெலின்) அளவை அதிகரிக்க செய்கிறது. எனவே, நீங்கள் சரியான தூக்கத்தை பெறவில்லை என்றால் தூக்கமின்மையால் அடிக்கடி பசி எடுக்கலாம். இத்தகைய சூழ்நிலையில், தினமும் 7 முதல் 8 மணி நேரம் நீங்கள் தூங்குவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

ALSO READ: Exclusive: சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக்கூடாது..? டாக்டர் அட்வைஸ்!

துரித உணவை தவிருங்கள்:

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் ஆரோக்கியமான உணவை புறக்கணித்து துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவை நோக்கி படையெடுக்கிறார்கள். இதில், அதிகபடியான கலோரிகள் இருந்தாலும், ஊட்டச்சத்துகள் குறைவாகவே உள்ளது. இது உங்கள் உடலில் விரைவாக ஆற்றலை இழக்க செய்கிறது. இதன் காரணமாக, மீண்டும் மீண்டும் பசி எடுக்கலாம்.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version