5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pondicherry Tour: பாண்டிச்சேரியில் பார்வையிட இவ்வளவு இடங்களா..? உடனே ஒரு டூர் போடுங்க!

Travel Tips: பாண்டிச்சேரியானது வடக்கு பகுதியில் சென்னை 150 கி.மீ தொலைவில் உள்ளது. பாண்டிச்சேரி என்றதும் நிறைய பேர் டிரிங்ஸ் அடிக்கதான் செல்வார்கள் சென்று நினைக்கிறார்கள். இங்கு டிரிங்ஸை தாண்டி எத்தனை விஷயங்கள் அழகாக உள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் தாராளமாக பாண்டிச்சேரியில் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Pondicherry Tour: பாண்டிச்சேரியில் பார்வையிட இவ்வளவு இடங்களா..? உடனே ஒரு டூர் போடுங்க!
கோப்பு புகைப்படம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 27 Jul 2024 16:25 PM

பாண்டிச்சேரி டூர்: பாண்டிச்சேரியானது வடக்கு பகுதியில் சென்னை 150 கி.மீ தொலைவிலும், மேற்கு பகுதியில் விழுப்புரம் 40 கி.மீ தொலைவிலும், தெற்கு பகுதியில் கடலூர் 24 கி.மீ தொலைவிலும், திருக்கோவிலூர் 75 கி. மீ தொலைவிலும் உள்ளது. திருமணம் ஆகாத இளைஞர்கள் முதல் திருமணம் ஆன நடுத்தர வயதுடைய ஆடவர்கள் வரை கோவாவிற்கு திட்டமிட்டு எளிய பயணமாக பாண்டிச்சேரிக்கு வந்து சேருவார்கள். பாண்டிச்சேரி என்றதும் நிறைய பேர் டிரிங்ஸ் அடிக்கதான் செல்வார்கள் சென்று நினைக்கிறார்கள். இங்கு டிரிங்ஸை தாண்டி எத்தனை விஷயங்கள் அழகாக உள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் தாராளமாக பாண்டிச்சேரியில் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன. அதனை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Also read: Travel: கோவா செல்ல போகிறீர்களா..? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

பொட்டானிக்கல் கார்டன்:

பாண்டிச்சேரியில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 22 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இது பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலேயே உள்ளது. இதற்குள் பல விதமான காட்சியமைப்புகள் இருப்பதால் சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உண்டு. மர பாலங்கள், மர வீடுகள், இசைக்கு ஏற்ப நடனமாடு நீர் குன்று, சிறுவர்களுக்கான ரயில்கள், மீன் காட்சியகம் உள்ளிட்டவைகளை பார்வையிடலாம்.

புரொமனேட் கடற்கரை:

புரொமனேட் கடற்கரையை ராக் பீச் என்றும் அழைப்பார்கள். இந்த பீச்சில் நீங்கள் மற்ற பீச்களில் உள்ளது போல குளிக்கவோ, கால் நனைக்கவோ முடியாது. இந்த பீச்சில்தான் பாண்டிச்சேரியின் அடையாளமான காந்தி சிலை இருக்கும்.

பிரெஞ்சு கட்டிடங்கள்:

ராக் பீச்சின் எதிராகவே பிரெஞ்சு காலனி உள்ளது. இதில், பழங்கால பிரெஞ்சு கட்டிடங்கள் நிறைய இருக்கும். இங்குதான் பெரும்பாலானோர் புகைப்படங்களை எடுத்து கொள்வார்கள். கட்டிடங்கள் பார்க்கவே அவ்வளவு அழகுடனும், பிரமிப்புடனும் காட்சியளிக்கும்.

மாதிர் மந்திர்:

பாண்டிச்சேரியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது மாதிர் மந்திர். இதை பார்ப்பதற்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது. தினமும் காலை 9 மணிக்கு மாதிர் மந்திர் திறக்கப்பட்டு, மாலை 4 மணிக்கு மூடப்படும். அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும்.

பாரடைஸ் பீச்:

பாண்டிச்சேரியில் முக்கியமான இடங்களில் ஒன்று பாரடைஸ் பீச். இங்கு செல்வதே ஒரு வித்தியாசமான பயணமாக இருக்கும். அதாவது இந்த பீச் செல்வதற்கே, நீங்கள் படகு மூலம்தான் செல்ல முடியும். இங்கு ரெயின் டான்ஸ், மணலில் ஓட்ட கூடிய பைக், ஃபிஸ் ஸ்பா உள்ளிட்ட பலவற்றை நீங்கள் எஞ்சாய் பண்ணலாம்.

புதுச்சேரி துறைமுகம்:

ஒரு அற்புதமான சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் சிறிய ஆழமற்ற நீர் துறைமுகம் உள்ளது. இது பொதுவான சரக்குகளின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது இது மக்களின் பார்வைக்காக தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படுகிறது. இந்த துறைமுகம் பார்க்க முற்றிலும் இலவசம் என்பதால் நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை.

இதுபோக பாண்டிச்சேரியில் அரவிந்தரின் ஆசிரமம், மணக்குள விநாயகர் திருக்கோவில், தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, தூய அமலோற்பவ அன்னை பேராலயம், பாரதியார் வீடு உள்ளிட்ட நிறைய இடங்கள் உள்ளது.

Also read: Chennai Tour: சென்னையில் ஒருநாள் சுற்றுலா.. எங்கெங்கு செல்லலாம்..? இங்கே தெரிஞ்சுக்கோங்க!

Latest News