Health Tips: பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை சமைக்காதீங்க.. உடலுக்கு தீங்கு விளைவிக்கும்!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் அரிசி, காய்கறிகள் மற்றும் பருப்பு சமைப்பதால் அவற்றின் சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. பிரஷர் குக்கரில் உணவு சீக்கிரம் சமைக்க மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பலர் சொல்வது போன்று பிரஷர் குக்கரில் சமைக்கப்படுவது சரியா தவறா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? பொதுவாக துவரம் பருப்பு, சாதம், கஞ்சி போன்றவை குக்கரில் தினமும் வீடுகளில் சமைக்கப்படுகிறது.
பிரஷர் குக்கர்: இன்றைய காலகட்டத்தில் பிரஷர் குக்கர் ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் தனி இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், சமையலறையில் பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். புரதம், வைட்டமின்கள், ஸ்டார்ச், கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் பென்டோசன் போன்ற ஊட்டச்சத்துகள் பருப்பு வகைகளில் காணப்படுகின்றன. பிரஷர் குக்கரில் அரிசி, காய்கறிகள் மற்றும் பருப்பு சமைப்பதால் அவற்றின் சத்துக்கள் அழிக்கப்படுகின்றன. பிரஷர் குக்கரில் உணவு சீக்கிரம் சமைக்க மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். பலர் சொல்வது போன்று பிரஷர் குக்கரில் சமைக்கப்படுவது சரியா தவறா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? பொதுவாக துவரம் பருப்பு, சாதம், கஞ்சி போன்றவை குக்கரில் தினமும் வீடுகளில் சமைக்கப்படுகிறது. இதில், நீராவியால் உணவு விரைவாக சமைக்கப்படுகிறது. இதனால் அதிலிருந்து சத்துகள் வெளியேறுகிறதா என்பதை இங்கே பார்க்கலாம்.
ALSO READ: Health Tips: உங்களுக்கு அடிக்கடி தலைவலி வருகிறதா? இந்த குறைபாடே அதற்கு காரணம்..!
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சமையல் முறைகளில் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே உள்ளன. குக்கரில் சமைப்பதும் சத்துக்களை அழித்துவிடும். இதனால் உடல் நலமும் பாதிக்கப்படலாம். ஆய்வுகளின்படி, குக்கரில் சமைப்பதால் உணவில் உள்ள இயற்கையான லெக்டின்கள் குறைவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள தாதுக்கள் உறிஞ்சப்படுவதையும் குறைக்கிறது.
அதிக வெப்பநிலையில் குக்கர்களில் இறைச்சியை சமைப்பதால் சத்துக்கள் குறைந்து புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். குக்கர் சமைக்கும்போது உணவுப் பொருட்களில் உள்ள மாவுச்சத்து சில நேரங்கலில் தீங்கு விளைவிக்கும் இரசாயன கூறுகளை வெளியிடுகிறது. இத்தகைய ரசாயனத்தை தொடர்ந்து உட்கொள்வதால் புற்றுநோய், குழந்தையின்மை மற்றும் நரம்பு மண்டல பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், அலுமினியப் பொருட்களால் குக்கர் தயாரிக்கப்படுவதால், அது தயாரிக்கப்படும் உணவில் கலக்கிறது. இது படிப்படியாக மூளையின் நரம்பு மண்டலத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, காற்றுடன் திறந்த பாத்திரத்தில் சமைத்த உணவு ஆரோக்கியத்திற்கு நல்லது.
பருப்பு மற்றும் அரிசி:
பருப்பு மற்றும் அரிசி ஆகியவை பிரஷர் குக்கரில் சமைக்கக் கூடாத உணவுகள். குக்கரில் சமைக்கும்போது பருப்பு மற்றும் அரிசியில் உள்ள ஸ்டார்ச் ரசாயனங்கள் நுரை போல் வெளியிடுகிறது. காற்றோட்டமாக சமைக்கும்போது இந்த நுரையை நீங்கள் எளிதாக நீக்கலாம். ஆனால், இதை குக்கரில் செய்ய முடியாது.
உருளைக்கிழங்கு:
திறந்த பாத்திரத்தில் உருளைக்கிழங்கை வேகவைக்க நேரம் எடுக்கும். இது உண்மையாக இருந்தாலும், பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது அவற்றின் சுவையை அழிக்கிறது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் அறிக்கையின்படி, உருளைக்கிழங்கில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பிரஷர் குக்கரில் வெளியே வராது. இது சாப்பிடும்போது மனித உடலை பாதிக்கலாம்.
நூடுல்ஸ்:
நூடுல்ஸ் மாவுச்சத்து அதிகமாக உள்ளது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். குக்கரில் நூடுல்ஸ் தயாரிக்கும்போது இந்த ஸ்டார்ச் வெளியே வராது. எனவே இது செரிமான அமைப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க, நூடுல்ஸை எப்போதும் கடாயில் சமைப்பது நல்லது.
மீன்:
மீன் உடலுக்கு பல வகைகளில் நன்மைகளை தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கிய ஆதாரமாக மீன் உள்ளது. பிரஷர் குக்கரில் மீனை சமைப்பதால் அதிலிருந்து வெளியாகும் பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும், இது நோய் எதிர்ப்பு சக்திய குறைக்கிறது. எனவே, பிரஷர் குக்கரில் மீன்களை சமைக்கவே கூடாது.
ALSO READ: Health Tips: பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் சுரைக்காய்.. தினசரி உணவில் மறக்காம சேருங்க!
பாஸ்தா:
பாஸ்தா ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பிரஷர் குக்கரில் செய்தால், அது அதிக தீங்கு விளைவிக்கும். இதில் உள்ள மாவுச்சத்து அப்படியே இருக்கும், சுவையும் மாறும். இவற்றை எல்லாம் தவிர்க்க பாஸ்தாவை கடாயில் சமைப்பது நல்லது.