5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Coimbatore Tour: குதூகலமாக கோவைக்கு ஒரு டூர் போடுங்க.. சுற்றி பார்க்க இவ்வளவு இடம் இருக்கு!

Travel Tips: தமிழ்நாட்டின் அரவணைப்பில் அழகு கொஞ்சும் இடங்களில் ஒன்று கோயம்புத்தூர். செழுமை மற்றும் இயர்கை அதிசயங்களை கொண்ட கோயம்புத்தூரில் ஆன்மீக தலங்களை தவிர இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய உள்ளது. டூர் போக நீங்கள் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்ய விரும்பினால், கோயம்புத்தூர் ஒரு சிறந்த இடமாக இருக்கும். கோயம்புத்தூரில் பல அழகான இடங்கள் உள்ளன. இங்கு குடும்பத்திற்கு ஏற்ற இந்த ஐந்து இடங்கள் மூலம் கோயம்புத்தூரின் அழகை கண்டுகளிக்கலாம்.

Coimbatore Tour: குதூகலமாக கோவைக்கு ஒரு டூர் போடுங்க.. சுற்றி பார்க்க இவ்வளவு இடம் இருக்கு!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 31 Jul 2024 16:35 PM

கோயம்புத்தூர் சுற்றுலா: கோயம்புத்தூர் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு, நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரமானது மக்கள்தொகை அடிப்படையில் சென்னைக்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய இடமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் அரவணைப்பில் அழகு கொஞ்சும் இடங்களில் ஒன்று கோயம்புத்தூர். செழுமை மற்றும் இயர்கை அதிசயங்களை கொண்ட கோயம்புத்தூரில் ஆன்மீக தலங்களை தவிர இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் நிறைய உள்ளது. டூர் போக நீங்கள் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்ய விரும்பினால், கோயம்புத்தூர் ஒரு சிறந்த இடமாக இருக்கும். கோயம்புத்தூரில் பல அழகான இடங்கள் உள்ளன. இங்கு குடும்பத்திற்கு ஏற்ற இந்த ஐந்து இடங்கள் மூலம் கோயம்புத்தூரின் அழகை கண்டுகளிக்கலாம்.

ALSO READ: Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!

ஆதியோகி சிவன் சிலை:

சமீபத்தில் கோயம்புத்தூரில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. ஆதியோகி சிவன் சிலை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தின் அடியில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. சத்குருவால் வடிவமைக்கப்பட்ட, 34 மீட்டர் உயரமுள்ள இந்த சிற்பம் “மிகப்பெரிய மார்பளவு சிற்பம்” என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது. இந்த சிலையை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வருகை புரிந்து, சிவனை தரிசனம் செய்கிறார்கள்.

வெள்ளியங்கிரி மலை:

சமீப காலமாக நீங்கள் அதிகமாக கேள்விபட்ட இடங்களில் வெள்ளியங்கிரி மலையும் ஒன்றாக இருக்கலாம். இந்த மலையானது கோவை மாவட்டத்தின் மைய பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5, 500 அடி உயரத்திற்கு மேல் உள்ளதாக கூறப்படுகிறது. மலையில் உச்சியில் ஒரு சிவன் கோயில் உள்ளதால், சிவனை தரிசிக்க பல்வேறு பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மருதமலை:

மேற்கு தொடர்ச்சி மலையில் சுமார் 500 அடி உயரத்தில் மருதமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. கோவை மைய பகுதியில் இருந்து வடமேற்கு பகுதியில் 15 கிமீ தூரத்தில் இந்த கோயில் உள்ளதால், இங்கு குடும்பத்துடன் சென்று வருவது சிறப்பானதாக இருக்கும். தை பூசம் மற்றும் பிற முருகன் திருவிழாக்களின் போது இக்கோயிலில் கூட்டம் அலைமோதும்.

சிறுவாணி அருவிகள்:

கோயம்புத்தூருக்கு மேற்கே 36 கிமீ தொலைவில் அழகிய சிறுவாணி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த இடம் கோயம்புத்தூர் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட அணையாகும். இங்கு அழகு கொஞ்சும் இடங்கள் அதிகமாக இருப்பதால், இங்கு குடும்பங்களுடன் சென்று வரலாம். இந்த நீர்வீழ்ச்சி ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் கூட்டம் அலைமோதும்.

ALSO READ: Rameswaram Tour: ராமேஸ்வரத்தில் சுற்றி பார்க்க இத்தனை இடங்கள் இருக்கா..? ஜாலியா போயிட்டு வாங்க!

குரங்கு நீர்வீழ்ச்சி:

கோயம்புத்தூரில் இருந்து சரியாக 65 கிலோமீட்டர் தூரத்தில் இந்த குரங்கு நீர்விழ்ச்சி அமைந்துள்ளது. இந்த அருவியில் குளிக்க ஒரு நபருக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். இங்கு குரங்குகள் அதிக இருப்பதால் இந்த பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த அருவிக்கு அருகிலேயே ஆழியார் அணையும் உள்ளது.

Latest News