5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!

Goa on Budget: கல்யாணம் ஆகாத இளைஞர்கள் முதல் கல்யாணம் ஆன நடுத்தர வயதினர் வரை ஒருமுறையாவது எப்படியாவது கோவா சென்று சுற்றிபார்த்து வந்துவிட வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். ஆனால், கோவா போவதற்கு எவ்வளவு செலவாகும், என்னென்ன கொண்டு போக வேண்டும் என்பதற்கு யாருக்கு தெரிவதில்லை. அப்படி இருக்க, கோவாவிற்கு எந்தெந்த பட்ஜெட்டில் போகலாம்.? கோவாவில் எங்கெங்கு போய் சுற்றி பார்க்கலாம் உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

Goa Tour: குறைந்த செலவில் கோவா சுற்றுலா.. இதோ தெளிவான டூர் விவரம்!
கோவா டூர்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 26 Jul 2024 11:38 AM

கோவா டூர்: கோவா மாநிலத்தின் எல்லைகள் மகாராஷ்டிராவிலிருந்து வடக்கு தெரேகோல் நதியிலும், கிழக்கு மற்றும் தெற்கில் கர்நாடகா மாநிலத்தாலும், மேற்கில் அரபிக்கடலாலும் பிரிக்கப்படுகின்றன. கோவா இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது மும்பை நகரத்திலிருந்து 594 கிமீ (சாலை வழியாக) தொலைவில் உள்ளது. நண்பர்களிடம் எங்கே டூர் போகலாம் என்று கேட்டால், அவர்களின் வாயில் இருந்து முதலில் வருவது கோவாதான்.  கோவாவில் ஆரம்பிக்கும் பேச்சுவார்த்தை அப்படியே தொடங்கி கடைசியில் குற்றாலம், கொடைக்கானல், ஊட்டி என வந்து முடியும். கல்யாணம் ஆகாத இளைஞர்கள் முதல் கல்யாணம் ஆன நடுத்தர வயதினர் வரை ஒருமுறையாவது எப்படியாவது கோவா சென்று சுற்றிபார்த்து வந்துவிட வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர். ஆனால், கோவா போவதற்கு எவ்வளவு செலவாகும், என்னென்ன கொண்டு போக வேண்டும் என்பதற்கு யாருக்கு தெரிவதில்லை. அப்படி இருக்க, கோவாவிற்கு எந்தெந்த பட்ஜெட்டில் போகலாம்.? கோவாவில் எங்கெங்கு போய் சுற்றி பார்க்கலாம் உள்ளிட்ட சில முக்கியமான விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

Also read: Chennai Tour: சென்னையில் ஒருநாள் சுற்றுலா.. எங்கெங்கு செல்லலாம்..? இங்கே தெரிஞ்சுக்கோங்க!

கோவாவிற்கு எப்போது போக கூடாது..? ஏன்..?

கோவாவிற்கு போக வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் முடிந்தவரை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதங்களில்தான் வெளிநாடுகளில் இருந்து அதிக பயணிகள் வருவதால், மூன்று மடங்கு விலை அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஆயிரத்திற்கு எடுக்க வேண்டிய ஒரு ரூம், 3 ஆயிரத்திற்கு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கோவாவிற்கு போக வேண்டிய மாதங்கள்:

கோவாவிற்கு போக வேண்டிய மாதங்கள் மீதம் இருக்கும் 9 மாதங்களில் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம். புதிதாக திருமாணவர்கள் ஜூன், ஜூலையிலும், பொதுவான நபர்கள் பிப்ரவரி, ஏப்ரல், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் செல்லலாம். மே மாதம் அதிகம் வெயில் அடிக்கும் என்பதால் போவதும் போகாததும் உங்களது விருப்பமாக வைத்து கொள்ளுங்கள்.

தனிநபரின் மினிமம் பட்ஜெட்:

கோவாவில் இருக்கும் ரயில் நிலையத்தின் பெயர் வாஸ்கோடகாமா. சென்னையில் இருந்து வாஸ்கோடகாமா செல்ல ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு ரயில் செல்கிறது. இந்த பயணத்தின் டிக்கெட் விலை ரூ. 480 ஆகும். அதேபோல், அங்கிருந்து சென்னை வரும் ரயில் ஒவ்வொரு வியாழக்கிழமை மதியம் 1.30 மணிக்கு வருகிறது. இதன் டிக்கெட் விலையும் ரூ. 480 ஆகும். (ஸ்லீப்பர் டிக்கெட் விலை குறிப்பிடப்பட்டுள்ளது). இப்படிதான் நீங்கள் நேரடியாக கோவா செல்ல முடியும். வேற நாட்களில் ரயில் இல்லை. அப்படி இல்லையென்றால், நீங்கள் பெங்களூரு சென்று, அங்கிருந்து கோவாவிற்கு ரயிலில் செல்லலாம்.

டாக்ஸி வேண்டாம்.. பைக் வாடகை இருக்கு:

கோவாவில் நீங்கள் டாக்ஸி பிடித்து சுற்றி பார்க்க நினைத்தால் வாடகை அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக பைக்கை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஆக்டிவா பைக் நாளொன்றுக்கு 300. கியர் பைக் நாளொன்றுக்கு 100 வரை தரப்படுகிறது. அப்படி இல்லையென்றால், 5 நாட்களுக்கு நீங்கள் ரூ. 2000 கட்டி எடுத்து கோவைவை சுற்றி பார்க்கலாம். ஒரிஜினல் லைசன்ஸ் வாங்கி கொண்டு, நீங்கள் வண்டியை விடும்போது அதை திருப்பி கொடுப்பார்கள்.

ரூம் வாடகை எவ்வளவு இருக்கும்..?

ஒருநாளைக்கு ரூ. 900 முதல் ரூம்கள் கோவாவில் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான அறையை தேர்வு செய்து தங்கி கொள்ளுங்கள். 24 மணி நேரம் அதாவது இன்று காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை ஒருநாள் வாடகைக்கு அறைகள் கிடைக்கும்.

எங்கெங்கு சுற்றி பார்க்கலாம்..?

முதல் வடக்கு கோவாவில் தொடங்கி, செண்ட்ரல் கோவா, தெற்கு கோவா மற்றும் கண்டோலியம் பகுதிகளுக்கு செல்லலாம். கண்டோலம் என்ற இடத்தில் ரூம் வாடகை முதல் அனைத்தும் குறைந்த வாடகையில் கிடைக்கும். இங்கிருந்தே நீங்கள் அனைத்து இடங்களிலும் சுற்றி பார்க்கவும், ஈஸியாக இருக்கும்.

அகுடா கோட்டை, ஹர்வாலம் அருவி, மிராமர் சன்செட் பீச் உள்ளிட்ட முக்கியமான இடங்களை மறக்காமல் சுற்றி பாருங்கள்.

Also read: Tenkasi Tour : குற்றாலம் மாதிரியே சூப்பரான அருவிகள்.. குடும்பத்துடன் சென்றுவர சுற்றுலா விவரம்!

Latest News