Constipation: மலச்சிக்கலால் தினந்தோறும் அவதியா..? இந்த 5 உணவுப்பொருட்கள் தீர்வு தரும்!
Health Tips: மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்வது, உடல் செயல்பாடு இல்லாமை, மருந்துகள், செரிமான கோளாறுகள் மற்றும் குடல் பாக்டீரியாகளின் ஏற்றத்தாழ்வு, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, போதுமான தூக்கம் இல்லாமை போன்றவையாக இருக்கலாம்.
மலச்சிக்கல் என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். பெரும்பாலும், இந்த பிரச்சனை சிறிது நேரத்திற்கு பிறகு தானாகவே சரியாகிவிடும். ஆனால், நீண்ட காலமாக மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படும் ஒருவருக்கும் செரிமான அமைப்பு மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது. ஒருவரால் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் மலம் கழிக்க முடியாவிட்டால், அந்த நபர் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார் என்று அர்த்தம்.
ஒருவருக்கு மலச்சிக்கல் பிரச்சனை நீண்ட நாட்களாக தொடரும்போது, அவர் வயிற்று வலி, வாயு மற்றும் செரிமான அமைப்பில் பிரச்சனை உள்ளிட்டவற்றை எதிர்கொள்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், மலச்சிக்கல் பிரச்சனையை அகற்றுவது முக்கியம். மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக எடுத்து கொள்வது, உடல் செயல்பாடு இல்லாமை, மருந்துகள், செரிமான கோளாறுகள் மற்றும் குடல் பாக்டீரியாகளின் ஏற்றத்தாழ்வு, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, போதுமான தூக்கம் இல்லாமை போன்றவையாக இருக்கலாம்.
ALSO READ: ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு இதுவும் காரணமாக இருக்கலாம்… கவனமாக இருங்கள்!
மாத்திரைகள் மலச்சிக்கலுக்கு உதவுமா..?
பெரும்பாலான மக்கள் மாத்திரைகள் மூலம் தங்கள் மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் இதை எப்போதும் சார்ந்திருக்க முடியாது. நீண்ட காலமாக மாத்திரைகளை பயன்படுத்துவது உங்கள் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, உங்கள் மலச்சிக்கலை போக்க, உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தும் இயற்கை உணவுகளை நீங்கள் சேர்க்க வேண்டும். இது உங்கல் செரிமான அமைப்பை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அந்தவகையில், மலச்சிக்கலை தீர்க்க எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள்:
மலச்சிக்கலில் இருந்து விடுபட ஆப்பிள் பயனுள்ளதாக இருக்கும். ஆப்பிள் மற்றும் அதன் தோலில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மேலும், ஆப்பிளின் தோல்களில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டு நல்ல மூல கூறுகள் ஆகும். இது உங்கள் மலத்தை மென்மையாக்கி சிக்கலை சரிசெய்யும். இதுதவிர, ஆப்பிள் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
உலர்ந்த பிளம்ஸ்:
உலர்ந்த பிளம்ஸை எடுத்து கொள்வதன்மூலம் வயிற்றை சுத்தம் செய்யலாம். நீங்கள் தினமும் மலச்சிக்கலுடன் போராடி வந்தால், உலர்ந்த பிளம்ஸை உட்கொள்ளலாம். பிளம்ஸில் உள்ள கரையாத நார்ச்சத்து, சர்பிடால் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை விரைவில் சரிசெய்யும். தினமும் 2 அல்லது 3 உலர்ந்த பிளம்ஸை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், ஜூஸாகவும் இதை நீங்கள் எடுத்து கொள்ளலாம்.
ஆளி விதைகள்:
ஆளி விதைகள் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். ஆளி விதைகல் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலில் இருந்து நிவாரணத்தை தரும். ஆளி விதைகளில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது குடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சி ஒரு ஜெல்லை உருவாக்கும். இதனால், மென்மையாகவும், எளிதாகவும் மாறி வெளியேறும். ஒவ்வொரு நாளும் உங்கள் தினசரி உணவில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆளி விதைகளை எடுத்துக்கொள்வதன்மூலம் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.
ஆரோக்கியமான கொழுப்புகள்:
மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய ஆலிவ் எண்ணெய், வெண்ணெய், சூரை வகை மீன்கள், தேங்காய், நெய், நட்ஸ் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்ட உணவுகளை எடுத்து கொள்ளலாம். இதில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் குடலில் ஏற்படும் சுருக்கத்தை சரிசெய்யும். இதனால், எளிதாக குடல் இயக்கம் பெற்று, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ALSO READ: Cholesterol: கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா..? இந்த 5 உணவுப்பொருட்கள் உதவும்!
காய்கறிகள்:
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவோர், அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளை எடுத்து கொள்வது நல்லது. அந்தவகையில், கீரை, ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வயிற்றை சுத்தம் செய்து, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும். மேலும், இதுபோன்ற காய்கறிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)