5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diabetes Food: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமா..? காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது!

Health Tips: சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்க்கக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள் காலையில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Diabetes Food: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டுமா..? காலையில் இந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது!
ஆரோக்கியமான உணவுகள் (Image: Freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 14 Nov 2024 19:04 PM

காலை வேளையில் உணவு எடுத்துகொள்வது மிக முக்கியமானதாக இருக்கும். காலையில் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன்மூலம், நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். அதேநேரத்தில் காலை எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதும் மிக முக்கியம். அதிலும், குறிப்பாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரக்ள் தங்களது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத வகையிலும், உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் வகையிலும் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன்படி, சரியான அளவு புரதம், வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் உணவாக காலை வேளையில் ஓட்ஸ், வெஜிடபிள் கஞ்சி, சியா விதைகள், அவகேடா, தயிர் மற்றும் முட்டை போன்ற உணவுகளை எடுத்துகொள்ளலாம். இந்த உணவுகள், மதியம் வரை சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை தரும். அதேநேரத்தில், சிறிய இடைவெளியில் சில பழங்களையும் சாப்பிடலாம்.

ALSO READ: World Diabetes Day 2024: சர்க்கரை நோய் என்றால் என்ன..? இன்று ஏன் உலக சர்க்கரை நோய் தினம் கொண்டாடப்படுகிறது?

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்க்கக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள் காலையில் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

எலுமிச்சை ஜூஸ் மற்றும் மாம்பழம்:

சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை உணவுக்கு பிறகு, எலுமிச்சை ஜூஸ் அல்லது மாம்ப்ழ ஜூஸை எடுத்து கொள்ளலாம். இது உங்களை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும். மேலும், இவை உங்கள் நாள் முழுவதும் உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.

இலவங்கப்பட்டை தண்ணீர்:

தினசரி வாழ்வில் நாம் ஏதாவது ஒரு வகையில் இலவங்கப்பட்டை எடுத்துகொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் தங்களது சர்க்கரை அளவை குறைக்க விரும்பினால், காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீரை எடுத்து கொள்ளலாம். அப்படி இல்லையென்றால், டீயில் சிறிதளவு இலவங்கப்பட்டை பொடியை கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

வெந்தயம் நீர்:

வெந்தயம் ஊற வைத்த தண்ணீர் பொதுவாக குளிர்ச்சிக்காக அறியப்படும் ஒரு உணவு பொருள். இது மட்டுமின்றி, வெந்தயம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். வெந்தயம் பகலில் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலை குறைக்க உதவி செய்யும். அதன்படி, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்தவுடன் மென்று தண்ணீர் எடுத்து கொள்ளலாம்.

முளைத்த பயிறுகள்:

புரோட்டீன் நிறைந்த உணவுகள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும். இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் காலையில் ஸ்நாக்ஸாக முளைத்த பட்டாணி சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.

காலை உணவை தவிர்க்கக்கூடாது:

சர்க்கரை நோயாளிகள் உணவாக காலை வேளையில் ஓட்ஸ், வெஜிடபிள் கஞ்சி, சியா விதைகள், அவகேடா, தயிர் மற்றும் முட்டை போன்ற உணவுகளை எடுத்துகொள்ளலாம். இந்த உணவுகள், மதியம் வரை சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஆற்றல் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை தரும். அதேநேரத்தில், சிறிய இடைவெளியில் சில பழங்களையும் சாப்பிடலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகள் காலை உணவை தவிர்க்கக்கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு மாறுபடும்.

ALSO READ: Cholesterol: உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளதா..? உங்கள் பாதங்களை கொண்டே அறியலாம்..!

உப்மா:

பாரம்பரிய இந்திய உணவுகளில் உப்மா மிக முக்கிய உணவுகளில் ஒன்றாக உள்லது. குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் காரணமாக, ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உப்மா இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மேலும், உப்மாபில் கேரட், பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தை தரும்.

கோதுமை கஞ்சி:

கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் கஞ்சியில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை உடலில் எளிதாக ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் தடுக்கும். மேலும், கஞ்சியில் சில காய்கறிகளை சேர்த்துகொள்வது கூடுதல் ஆரோக்கியத்தையும் தரும்.

காய்கறி ஊத்தாப்பம்:

அரைத்த அரிசி மாவில் காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் ஊத்தாப்பம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த காலை உணவாகும். இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடும், புரதமும் உள்ளது. மேலும், இதில் நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்களும் சமநிலையில் உள்ளது. எனவே, இது சர்க்கரை நோயாளிகள் காலை உணவில் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.

Latest News