Health Tips: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதா..? இது குழந்தைக்கு தீங்கு தரும்! - Tamil News | Foods that women should not eat during pregnancy; health tips in tamil | TV9 Tamil

Health Tips: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதா..? இது குழந்தைக்கு தீங்கு தரும்!

Published: 

22 Sep 2024 17:27 PM

Foods: காலை எழுவது முதல் உட்கார்ந்து சாப்பிடுவது வரை கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், வயிற்றில் வளரும் குழந்தைக்குக்கு உணவுப் பழக்கம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே, கர்ப்பிணிகளுக்கு அதிகளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் காரணமாகவே கர்ப்ப காலத்தில் பெண்களை எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சில உணவு பொருட்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Health Tips: கர்ப்ப காலத்தில் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாதா..? இது குழந்தைக்கு தீங்கு தரும்!

கர்ப்பிணி (Image: Freepik)

Follow Us On

கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் பெண்களை என்னதான் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கவனித்து கொண்டாலும், தன்னைத்தானே கவனித்து கொள்ள வேண்டும். அதன்படி, காலை எழுவது முதல் உட்கார்ந்து சாப்பிடுவது வரை கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், வயிற்றில் வளரும் குழந்தைக்குக்கு உணவுப் பழக்கம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாகவே, கர்ப்பிணிகளுக்கு அதிகளவிலான பழங்கள் மற்றும் காய்கறிகள் கொடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதன் காரணமாகவே கர்ப்ப காலத்தில் பெண்களை எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது என்ற பேச்சு எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சில உணவு பொருட்கள் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. சில உணவு பொருட்களை குறைந்த அளவில் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ALSO READ: Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!

கர்ப்ப காலத்தில் டின்னில் அடைக்கப்பட்ட மற்றும் முன் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு பொருட்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இது கருவுக்கு தீங்கு விளைக்கும். அந்தவகையில், இன்று கர்ப்பிணி பெண்கள் என்ன சாப்பிடக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.

பப்பாளி:

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் பப்பாளி பழத்தை சாப்பிடாமல் இருப்பது மிகவும் நல்லது. பச்சை பப்பாளியில் உள்ள லேட்க்ஸ் கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்க செய்யும். அதேபோல், பப்பாளியில் உள்ள பாப்பைன் கரு வளர்ச்சியை தடுக்கும். மேலும், இந்த இரசாயனங்கள் கருப்பையில் உள்ள குழந்தைக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தும். அதன்படி பிரசவத்திற்கு பிறகுதான் பப்பாளி சாப்பிடுங்கள்.

திராட்சை கருவுக்கு தீங்கு விளைவிக்கும்:

கர்ப்ப காலத்தில் திராட்சை சாப்பிடக்கூடாது. கருப்பு திராட்சையில் அதிக அளவு அமிலம் உள்ளது. இது குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கலாம். அந்த வகையில், கர்ப்ப காலத்தில் பச்சை திராட்சையை எடுத்து கொள்ளலாம்.

காஃபின்:

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் காஃபின் அடங்கிய பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. காஃபின் உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். இது தவிர, காஃபின் உங்கள் தூக்க சுழற்சியை கெடுத்து, உங்கள் மனநிலையையும் கெடுக்கும். இத்தகைய சூழ்நிலையில், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் காபி மற்றும் டீ குடிப்பதை தவிர்க்கலாம். இதற்கு பதில், சூடாக பாலை காய்ச்சி வெதுவெதுப்பாக குடிக்கலாம்.

சர்க்கரை:

கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கையில் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் உடம்பில் அதிகமாக இருக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்யும். மேலும், சர்க்கரை நோயையும், உடல் பருமன் பிரச்சனையை உண்டாக்கும்.

உப்பு:

கர்ப்ப காலத்தில் அதிகளவு உப்பை எடுத்து கொள்வதை தவிர்ப்பதும் நல்லது. இது உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனையை ஏற்டும். இது உங்கள் உடம்பில் இருந்து அதிகபடியான இரத்தத்தை வெளியேற்றி அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வெளியேற்றுகிறது.

ALSO READ: Exclusive: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதா? இந்த பிரச்சனைகள் உங்களை ஆபத்தில் தள்ளும் என டாக்டர் எச்சரிக்கை!

துளசி இலை:

துளசி இலைகள் கர்ப்பிணி பெண்ணின் கருவின் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். துளசி இலையில் உள்ள எஸ்ட்ரோகோல் கருக்கலைப்பையும் ஏற்படுத்தலாம். அதேபோல், துளசி இலைகள் பெண்ணின் மாதவிடாய் சுழற்சியையும் பாதிக்க செய்யும்.

இறைச்சி:

குறைவாக வேகவைத்த இறைச்சி போன்ற உணவுகளை கர்ப்பிணிகளுக்கு தீங்கு விளைவிக்கும். இதனை உட்கொள்வதால் டோக்ஸோபிளாஸ்மா, லிஸ்டீரியா மற்றும் சால்மோனெல்லா போன்ற பல வகையான பாக்டீரியா தொற்றுகள் ஏற்படலாம். இவை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவில்லும். மேலும், குழந்தைக்கு கடுமையான நரம்பியல் நோயை ஏற்படுத்தலாம். அதேபோல், பஜ்ஜி, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கக்கூடாது.

பச்சை முட்டை:

பச்சை முட்டையில் சால்மோனெல்லா என்ற பாக்டீரியா உள்ளது. இது கர்ப்பிணிகளுக்கு காய்ச்சல், குமட்டல், வாந்தி, வயிற்று பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுத்தும். மேலும் பச்சை முட்டை தொற்று கருப்பை பிடிப்பை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில், உங்கள் உணவில் நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், புரதம், ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர் செய்யக்கூடாத விஷயங்கள்!
நடிகை சமந்தா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
தமிழ் சினிமாவின் டாப் நடிகை.. இந்த சிறுமி யார் தெரியுமா..?
ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள்
Exit mobile version