5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!

Rainy Season: மழை காலம் தொடங்கினால் பல தொற்றுநோய்களும், நோய்களையும் கொண்டு வரும். இந்த காலக்கட்டத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதா, பாக்டீரியா வளர்ந்து அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இது நாம் சாப்பிடும் உணவுகளிலும் படரும். அதேபோல், மழைக்காலத்தில் சில வகையான உணவுகளை சாப்பிடுவது தொற்று மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். அந்த வகையில், இன்று நாம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

Health Tips: மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்.. இவை பிரச்சனைகளை தரலாம்!
உணவு பொருட்கள் (Image: fcafotodigital/E+/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2024 18:30 PM

மழைக்காலம்: மழைக்காலம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. மழை பெய்தாலே போதும் சூடாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று அனைவருக்கும் தோன்றும். மழை காலம் தொடங்கினால் பல தொற்றுநோய்களும், நோய்களையும் கொண்டு வரும். இந்த காலக்கட்டத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதா, பாக்டீரியா வளர்ந்து அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இது நாம் சாப்பிடும் உணவுகளிலும் படரும். அதேபோல், மழைக்காலத்தில் சில வகையான உணவுகளை சாப்பிடுவது தொற்று மற்றும் செரிமான பிரச்சனைகளை உண்டாக்கலாம். அந்த வகையில், இன்று நாம் மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Benefits Of Dates: பேரிச்சம்பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? நீங்களும் தெரிஞ்சுகோங்க!

வாழைப்பழம்:

வாழைப்பழம் வெயிலோ, மழையோ எந்த காலத்திலும் சாப்பிட சிறந்த பொருள்தான். இருப்பினும், வாழைப்பழத்தை மாலை, இரவு அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடும்போது உங்களுக்கு சில பிரச்சனைகளை உண்டாகும். மழைக்காலத்தில் அஜீரணம், இருமல் அல்லது ஆஸ்துமா உள்ளவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் உள்ள சளியை அதிகரித்து தொல்லை தருவதுடன், உடல் சோம்பலையும் ஏற்படுத்தும்.

தக்காளி மற்றும் இஞ்சி:

மழைக்காலத்தில் தக்காளியை அதிகமாக உட்கொண்டால், இது அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் தக்காளியில் அதிக அமிலம் உள்ளது. அதேபோல், இஞ்சியை அதிக அளவில் உட்கொண்டால், அது வயிற்று எரிச்சல் மற்றும் வாயு பிரச்சனையை தரும்.

முட்டைக்கோஸ்:

காலிஃபிளவர், ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல்ஸ் முளைகள் அதிக சத்துள்ளவை என்றாலும், மழை காலத்தில் குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி இல்லையென்றால், சாப்பிடாமல் தவிர்ப்பது மிக மிக நல்லது. மழைக்காலத்தில் முட்டைக்கோஸ் உள்ளிட்ட இந்த வகை காய்கறிகளில் வேகமாக பாக்டீரியா வளர்ச்சி பெறும். இது உங்கள் உடலுக்கு பிரச்சனையை தரலாம்.

தர்பூசணி:

தர்பூசணி, முலாம்பழம் உள்ளிட்ட இந்த பழங்கள் கோடையில் உண்ண தகுந்தவை. ஆனால், மழைக்காலத்தில் சிறிது சாப்பிடுவதில் கவனம் செலுத்துவது மிக முக்கியம். தர்பூசணி, முலாம் பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால், அவை சுற்றுச்சூழலில் இருக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் மாசுபடுவதற்கு வாய்ப்புள்ளது. இவற்றை உண்பதால் உணவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும்.

பெர்ரி வகைகள்:

ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பழங்கள் பருவமழையின் போது, பூஞ்சைகளால் எளிதில் பாதிக்கப்படும். இவற்றை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் பிற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

கீரைகள்:

கீரை போன்றவற்றை மழைக்காலங்களில் எச்சரிக்கையுடன் உட்கொள்ள வேண்டும். ஈரப்பதம் மற்றும் மோசமான வானிலை காரணமாக, இந்த கீரைகளில் அதிகப்படியான ஈரப்பதம் இருக்கும். இந்த ஈரப்பதத்தின் காரணமாக பாக்டீரியாக்கள் எளிதில் வளர்ச்சி பெறும். இது இரைப்பை குடல் தொற்று மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ALSO READ: Health Tips: பெண்களின் உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா..? நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!

கத்தரிக்காய்:

மழைக்காலத்தில் கத்தரிக்காயை குறைவாக உட்கொள்வது நல்லது. இந்த காய்கறி செடி பூஞ்சை நோயால் பாதிக்கப்படும். இதை சாப்பிடுவதால் நம் உடலும் பாதிக்கப்பட்டு, பிரச்சனைகள் ஏற்படும்.

Latest News