Mouth Ulcer: வாயில் அடிக்கடி புண் வருகிறதா..? இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்! - Tamil News | Frequent blisters in the mouth can be symptoms of this disease; health tips in tamil | TV9 Tamil

Mouth Ulcer: வாயில் அடிக்கடி புண் வருகிறதா..? இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்!

Health Tips: நீண்ட நாட்களாக உங்கள் வாயில் அடிக்கடி தோன்றினாலோ, நீடித்தாலோ வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். புண்கள் சரியாகாமல் காய்ச்சல், வலி, எடை இழப்பு, சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

Mouth Ulcer: வாயில் அடிக்கடி புண் வருகிறதா..? இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்!

வாய் புண் (Image: GETTY)

Published: 

22 Oct 2024 18:37 PM

காலநிலை மாறும்போது நம் நாக்கு மற்றும் வாயில் அடிக்கடி வாய்ப்புண் என்று அழைக்கப்படும் கொப்புளங்கள் தோன்றும். சிலருக்கு இது உணவை மெல்லும்போது தெரியாமல் நாக்கை கடித்துகொள்வோம். இதன் காரணமாக, ஒரு சிலருக்கு வாய்ப்புண்கள் ஏற்படும். ஆனால், ஒரு சிலருக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி வாய்ப்புண் தோன்றினால் அதை புறக்கணிப்பது ஆபத்தானது. பெரும்பாலும், இது கால நிலை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை என்று எண்ணி, வீட்டியில் இருக்கும் பொருட்களை கொண்டு குணப்படுத்த முயற்சிப்போம்.

ஆனால், உங்களுக்கு மீண்டும் மீண்டும் வாயில் கொப்புளங்கள் தோன்றினால் சில தீவிர நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இதை நீங்கள் சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால், அது நாளடைவில் பெரிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்பெஷல்.. சூப்பரான அதிரசம் செய்வது எப்படி..?

வாய்ப்புண் ஏற்பட காரணம் என்ன..?

நாக்கில் புண் ஏற்பட மருத்துவரீதியாக பல காரணங்கள் உணவு. அதில் பொதுபான காரணங்கள், மோசமான உணவு பழக்கம், அதிகப்படியான காரம் மற்றும் எண்ணெய் உணவுகளை சாப்பிடுதல், போலிக் அமிலம் குறைபாடு, வைட்டமின் பி 12 குறைபாடு, தாதுக்களின் குறைபாடும் போன்றவைகளாக இருக்கலாம்.

மேலும், வயிற்றின் வெப்பத்தால் நாக்கில் கொப்புளங்கள் அடிக்கடி தோன்றும். சரியான தூக்கம் இல்லாமை, மன அழுத்தம், வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பு போன்றவைகளாக இருக்கலாம். இருப்பினும், வாயில் புண் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

அடிக்கடி வாயில் புண்கள் ஏற்பட்டால் என்ன பிரச்சனை ஏற்படும்..?

நீண்ட நாட்களாக உங்கள் வாயில் அடிக்கடி தோன்றினாலோ, நீடித்தாலோ வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். புண்கள் சரியாகாமல் காய்ச்சல், வலி, எடை இழப்பு, சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. அதேபோல், தொடர்ந்து வாயில் புண்கள் தோன்றினால் வயிற்று புண்கள், கல்லீரல் பிரச்சனைகள் அல்லது சில வகையான குடல் நோய் போன்ற நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

சாதாரண வாய் புண்கள் ஏற்பட்டால் அதை சரிசெய்வது எப்படி..?

துளசி இலைகள்:

துளசி இலைகள் அதிக மருத்துவ குணங்களை அடக்கி வைத்திருக்கும் அருமருந்தாகும். பெரும்பாலும், பாக்டீரியா தொற்றுகள் வாய் புண் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த புண்கள் ஏற்படும்போது துளசி இலைகளை சுத்தமாக கழுவி மென்று சாப்பிடலாம். இப்படி தினந்தோறும் செய்வது மூலம் கொப்புளங்கள் மறையும்.

மஞ்சள்:

வாயில் தோன்றும் புண்களை குறைக்க மஞ்சள் பெரிதும் உதவும். வாயில் உள்ள கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் மஞ்சள் பொடியை ஒரு நாளைக்கு மூன்று முறை தடவலாம். இது விரைவில் நல்ல பலனை தரும். இது உங்களுக்கு அதிகப்படியான எரிச்சலை தருகிறது என்று நினைத்தால், நீரில் மஞ்சளை கலந்து வாயை கொப்பளிக்கலாம். இது வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, வாய் புண்களையும் சரிசெய்யும்.

தேங்காய் எண்ணெய்:

வாய் புண்களை குறைக்க தேங்காய் எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும். வாயில் கொப்புளங்கள் இருந்தால், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய் தடவவும். அப்படி இல்லையென்றால், தேங்காய் எண்ணெயுடன் கால் மணி நேரம் வாய் கொப்பளித்தால் இது வாய் புண்ணை சரிசெய்யும்.

கசகசா:

சமையலறையில் இருக்கும் கசகசாவை பயன்படுத்தி வாய் புண்களை குறைக்கலாம். காலையில் ஒரு ஸ்பூன் கசகசாவை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் வாய் புண்கள் விரைவில் குணமாகும்.

ALSO READ: Covid-19: இந்தியாவில் அதிகரித்துள்ள ஆட்டோ இம்யூன் பிரச்சனை.. கொரோனா தொற்றுதான் காரணமா?

நெய்:

நெய் வாய் புண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்க ஒரு விரலில் சிறிதளவு நெய் எடுத்து, வாய் புண்களின் மேல் தடவி சிறிது நேரம் வைத்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மேலும், இந்த நெய் வைத்தியம் அல்சர் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் தரும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!