5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Nungu: முக அழகு முதல் உடல் சூடு வரை.. நுங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!

கோடைகாலங்களில் உடல் சூடு பெரும்பான்மையான மக்களுக்கு பெரும்பிரச்சினையாக உள்ளது. இதனை தவிர்க்க இளநீர், நுங்கு போன்ற இயற்கை சார்ந்த பொருட்களை தேர்வு செய்வது நன்மை அளிக்கிறது.  நுங்கு கோடைகாலத்தில் நமக்கு அதிகமாகவே நுங்கு கிடைக்கிறது. கிராமங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கு தற்போது நகர்ப்புறங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது. கோடைகால உணவாக கருதப்படும் நுங்கினை தற்போது பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதன் பயன்கள் குறித்து காணலாம்.

Nungu: முக அழகு முதல் உடல் சூடு வரை.. நுங்கு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா..!
intern
Tamil TV9 | Updated On: 11 Jul 2024 01:36 AM

பொதுவாக ஏப்ரல் மே மாதங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கு அதனை கடந்து ஜூன் ஜூலை வரையிலும் தாராளமாக கிடைக்கின்றது. கிராமப்புற மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த நுங்கினை நகர்ப்புற மக்களும் பயன்படுத்த தொடங்கி விட்டனர். உடல் சூட்டை மட்டும் தாளிக்க கூடியது என்று அறியப்பட்ட நூல்கள் தற்போது ஏராளமான நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. தாகத்தை தணிக்கவும் உடல் சூட்டை கணிக்கவும் முக அழகிற்கும், சமையல் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலும் கிராமங்களில் நுங்கு அனைத்து காலங்களிலுமே கிடைக்கப்பெறுகிறது. கிராமப்புற மக்கள் அனைத்து காலங்களிலும் இதனை உட்கொண்டு வருகின்றனர் ஆனால் நகர்ப்புற மக்கள் கோடைகாலத்தில் மட்டுமே இதனை தேர்வு செய்கின்றனர். அப்படி இல்லாமல் அனைத்து காலத்திற்கும் ஏற்ற பொருளாக நீ பயன்படுத்தி வருவதால் உடலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும்.

Also Read: White pumpkin: உடல் பருமன் முதல் கண் பிர்ச்சிணை வரை.. அனைத்திற்கும் தீர்வளிக்கும் பூசணி..!

நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்ட நேரம் நிரப்புகிறது. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை அதிகம் சேர்த்து கொள்வதற்கு இதுதான் அடிப்படை காரணம் என்கிறார்கள்.. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது. அதிலும், பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளில் சிக்கியவர்கள் நுங்கு தாராளமாக சாப்பிடலாம்.

Aslo Read: மாதவிடாய் வலி குறையணுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.  கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம். பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும். நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

இரைப்பை புண் என்று சொல்லப்படும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இளம் நுங்கினை அரைத்து அதனுடன் தேங்காய் பால் சேர்த்து 10 நாட்கள் வரை சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.  நுங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் தீர்கிறது. கொளுத்தும் வெயிலில் உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் வற்றிப்போவதைத் தடுப்பதற்கு கோடைக் காலத்தில் கிடைக்கும் நுங்கினை அன்றாடம் சேர்த்துக் கொள்வதால் வெயிலில் செல்லும்போது மயக்கம் வருவது போன்ற பாதிப்புகள் குறைகிறது.

 

Latest News