5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

White Pumpkin: உடல் பருமன் முதல் கண் பிரச்னை வரை.. அனைத்திற்கும் தீர்வளிக்கும் பூசணி..!

வெள்ளை பூசணி இயற்கையா மனிதர்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. இதனை அன்றாடம் உணவில் சேர்ந்து கொள்வதன் மூலம் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.  வெள்ளை பூசணியை திருஷ்டி கழிக்க மட்டுமே சிலர் பயன்படுத்திவந்த காலங்கள் போய் தற்போது, அதன் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. வெள்ளை பூசணிக்காயை சாம்பார், பொறியல், ஜூஸாக எடுத்துக்கொள்வதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது. 

White Pumpkin: உடல் பருமன் முதல் கண் பிரச்னை வரை.. அனைத்திற்கும் தீர்வளிக்கும் பூசணி..!
intern
Tamil TV9 | Updated On: 11 Jul 2024 08:20 AM

பூசணி பலன்கள் : வளர்ந்து வரும் நாகரிக உலகில், நாம் சாப்பிடும் ஏராளமான உணவுப்பொருட்கள் உடல் பருமன் அதிகரிக்க உதவுகிறது. இப்படி உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் வெள்ளை பூசணிக்காயை அன்றாடம் உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும், கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருக்கும் போது,  நீராலான வெள்ளைப்பூசணி நீரேற்றத்தை அதிகப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகபடுத்த உதவுகிறது.  உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள்,   பூசணிக்காய் ஜூஸ்-ஐ எடுப்பதன் மூலம் உடல் எடை குறைகிறது. மேலும், சிறுநீரகத்தை பாதுகாத்து சிறுநீர் கடுப்பு, சிறுநீரக பிரச்சினையிலிருந்து பாதுகாக்கிறது.

Also Read: மாதவிடாய் வலி குறையணுமா? இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

வெண்பூசணி முழுவதும், நீரினால் ஆனதால், இது வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களாக நிறைந்துள்ளது. மேலும்,  நியாசின், தியமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை அதிகமாக கொண்டுள்ளது. இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம்  புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் உணவாகக்கூடிய நார்ச்சத்து ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு பல சத்துகள் நிறைந்த வெள்ளை பூசணியின் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம். வெள்ளை பூசணியில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுவதால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. பூசணிக்காயில் பொட்டாசியம் உள்ளதால், இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது . பூசணி சாறு நார்ச்சத்து நிறைந்தது மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களை சீராக்குகிறது.

Also Read: நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தால் இவ்வளவு பிரச்னையா?

தோல் நீக்கிய பூசணிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் சாறாக அப்படியே குடிக்கலாம்.

  1. ஜூஸை தினந்தோறும் எடுத்துக்கொள்வதன் மூலம் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்பு, ஃபோலேட், மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
  2. வயிறு ஆரோக்கியமாக இருக்கும். பூசணிக்காய் ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. முக்கியமாக தொப்பை கொழுப்பை கரைக்க உதவுகிறது.
  3. பூசணி சாற்றில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை அளிக்கிறது.
  4. பூசணிக்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
  5. இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது, இது நம் கண் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வளிக்கிறது.

 

Latest News