பழங்களின் தோல்களை இனி வீணாக்காதீர்கள், டீ போட்டுக் குடிக்கலாம்! - Tamil News | | TV9 Tamil

பழங்களின் தோல்களை இனி வீணாக்காதீர்கள், டீ போட்டுக் குடிக்கலாம்!

Updated On: 

16 May 2024 22:56 PM

Tea to make from discard fruit peels : பழத் தோல்களிலிருந்து டீ தயாரித்தல். தண்ணீரும் அடுப்பும் போதும் தோலை கொதிக்கவைத்து தேவைக்கேற்ப இஞ்சி, ஏலம், நாட்டுச்சக்கரை சேர்த்து டீயாக மாற்றிவிடலாம்.

பழங்களின் தோல்களை இனி வீணாக்காதீர்கள், டீ போட்டுக் குடிக்கலாம்!

மாதிரி படம்

Follow Us On

எப்பொழுதுமே பழத்தை சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கியெறிவதுதான் நம் பழக்கமே. ஆனால் அந்த தோலில்தான் நிறைய சத்து இருக்கிறது என்றால், நம்பாமல் சிரித்துக்கொண்டே தோலை தூர தூக்கிப்போட்டு விடுவோம். ஆனால் அந்த தோல்களைக் கொண்டுதான் நிறைய முக க்ரீம்கள், பேஸ் பேக், பேஸ் வாஷ், சோப் எல்லாம் தயாரிக்கிறார்கள் என்றால் நம்பித்தான் ஆகவேண்டும். சரி அதையெல்லாம் பெரிய பெரிய தொழிற்சாலைகளில் செய்கிறார்கள். நாம் எப்படி தோல்களை வீணாக்காமல் உபயோகிப்பது என்று கேட்கிறீர்களா. தொழிற்சாலை எல்லாம் வேண்டாம் தண்ணீரும் அடுப்பும் போதும் தோலை கொதிக்கவைத்து தேவைக்கேற்ப இஞ்சி, ஏலம், நாட்டுச்சக்கரை சேர்த்து டீயாக மாற்றிவிடலாம்.

1. ஆரஞ்சு தோல் டீ

ஆரஞ்சு தோல், முந்திரிபழ தோல், எலுமிச்சம்பழ தோல் ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்கவைத்து தேன் மற்றும் சிறிதளவு பட்டைத்தூள் சேர்த்தால் போதும். புளிப்புச் சுவையுடன் ப்ரஸ்ஸான டீ தயார். இதில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது.

2. ஆப்பில் தோல் டீ

ஆப்பில் தோலை நன்கு காயவைத்து தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, தேன் அல்லது எலுமிச்நை சாறு சேர்த்து குடிக்கலாம். இது இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடன் கூடிய வைட்டமின்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த டீயாகும்.

3. பீச் பழத்தோல் டீ

கோடைக்காலத்து பழம் என்பதால் நல்ல இனிப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். இதன் தோலை தண்ணீரில் கொதிக்கவைத்து இஞ்சி மற்றும் தேன் சேர்த்துப் பருகலாம். நல்ல நறுமனத்துடன் இனிப்பாக இருக்கும்.

Also Read: இவ்வளவு வேகமாக சமைக்கும் உணவுகள் இருக்கறப்போ என்ன கவலை!

4. அன்னாசி பழத்தோல் டீ

பெரும்பாலும் அன்னாசிபழ தோலைப் பார்த்தால் யாருக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் அதில் நிறைய சத்தோகள் இருக்கிறது. தோலை துண்டுகளாக நறுக்கி 20 நிமிடம் நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.

5. தர்பூசணி பழத்தோல் டீ

பெரும்பாலானோர் தர்பூசணியின் வெள்ளைப்பகுதியையும் விட்டுவைக்காமல் சாப்பிடுவார்கள். காரணம் அதில் ஆண்களுக்கான நிறைய சத்து இருக்கிறது. தர்பூசணி பழத்தின் வெள்ளைநிற பகுதியை துண்டுகளாக நறுக்கி நீரில் போட்டு சுமார் ஒருமணி நேரம் கொதிக்கவைத்து வடிகட்டி ஆறவிடவும். இதோடு புதினா சேர்த்து கூலாக பருகலாம்.

6. மாம்பழ தோல் டீ

மாம்பழத் தொலியை நன்கு அலசி ஒருமணி நேரம் காயவிடவும். பிறகு அதை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 10லிருந்து 15 நிமிடம் கொதிக்கவைக்கவும். பிறகு அதை வடிகட்டி தேன் சேர்த்துப் பருகினால், மாம்பழத்தின் அதே புத்துணர்ச்சியை இந்த டீயிலும் பெறலாம்.

குழந்தைகள் அப்பாக்களை அதிகம் விரும்புவது ஏன் தெரியுமா?
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version