Health Tips: பாலுடன் இந்த பழத்தை தினமும் சாப்பிடுகிறீர்களா? உங்கள் வயிற்றுக்கு கேடு!
Milk: தமிழ்நாட்டில் திருமணம் முடிந்த கையோடு மறுவீட்டிற்கு வரும் புதுமண தம்பதிகளுக்கு பாலும், வாழைப்பழமும் கொடுப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பெரியவர்கள் நினைக்கிறார்கள் இது தவறு. பாலும் வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது பல பிரச்சனைகளை உண்டாக்கும்.
உணவு எடுத்துகொள்ளும்போது நேரம் மற்றும் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, நீங்கள் ஒன்றாக சாப்பிடுவது மற்றும் குடிப்பது போன்ற விஷயங்களில், கவனம் செலுத்துவதும் முக்கியம். சாப்பிடுவது மற்றும் குடிப்பது விஷயத்தில், உணவு கலவையை தெரிந்து கொள்வது நல்லது. நாம் தினந்தோறும் பயன்படுத்து உணவு பொருட்களில் பால் மிக முக்கியமானது. பாலுடன் பலவற்றை சாப்பிடுவது நன்மையை தருவதை விட, பிரச்சனையை உண்டாக்கும். இது உடலுக்கு அசௌகரியத்தை தர செய்யும்.
நம்மில் பலர் இந்த பழத்தை பாலுடன் அடிக்கடி சாப்பிடுகிறோம். இது பலரும் நல்லது என்றே நினைக்கிறார்கள். ஆனால், இதன் விளைவுகளால் நீங்கள் நோய்வாய்ப்படவும் வாய்ப்புகள் உண்டு. புரதம், கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பால் ஒரு முழுமையான உணவாக கருதப்படுகிறது. ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், பாலுடன் சில பழங்களை உட்கொள்வது நல்லது கிடையாது. எனவே, இந்த செய்தி தொகுப்பில் எந்தெந்த பழங்களை பாலுடன் சாப்பிடக்கூடாது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாட்டில் திருமணம் முடிந்த கையோடு மறுவீட்டிற்கு வரும் புதுமண தம்பதிகளுக்கு பாலும், வாழைப்பழமும் கொடுப்பார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பெரியவர்கள் நினைக்கிறார்கள் இது தவறு. பாலும் வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது பல பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், பலர் காலை உணவாக பாலையும் வாழைப்பழத்தை எடுத்து கொள்வார்கள். இது ஆற்றலை உடலுக்கு தராமல் அசௌகரித்தை கொடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ: Cracked Heels: மழைக்காலத்தில் பாதங்களில் வெடிப்பு பிரச்சனையா..? இந்த குறிப்புகள் தீர்வை தரும்!
பிரச்சனைகள்:
- வெறும் வயிற்றில் பாலையும், வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தன்மையை உண்டாக்கும். இதனால், உங்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
- பாலையும், வாழைப்பழத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி உண்டாகும் அபாயம் உள்ளது. அதன்படி, இது உங்கள் வயிற்றில் வயிற்று வலி, ஏப்பம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
- பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக சாப்பிடுவதன்மூலம், உங்கள் உடலுக்கு அதிகப்படியான கலோரிகள் கிடைக்கும். இதனால், நீங்கள் மிக விரைவாக எடை அதிகரிப்பீர்கள்.
- காலை உணவாக கார்ன்ஃப்ளேக்ஸ் அல்லது ஓட்ஸுடன் பால் மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக கலந்து சாப்பிடும்போது உங்களுக்கு அதிகளவில் ஊட்டச்சத்து கிடைக்கும். ஆனால், அதற்கு பதிலாக கலோரிகளே உங்கள் உடலில் சேர்ந்து உடல் எடையை அதிகரிக்க செய்யும்.
- வாழைப்பழம் மற்றும் பாலை ஒன்றாக சாப்பிடுவது இதயம் மற்றும் கல்லீரலுக்கு பிரச்சனையை கொடுக்கலாம். மேலும் பாலையும்,வாழைப்பழத்தையும் சேர்த்து தினமும் எடுத்துகொள்வது அஜீரண கோளாறுகளை உண்டாக்க செய்யும்.
மாம்பழம்:
கோடை காலத்தில் கிடைக்கும் மாழ்பழம் உடலை நீரேற்றமாகவும், குளிர்ச்சியாகவும் வைக்க ஜூஸாக எடுத்துக்கொள்கிறோம். மாம்பழ ஜூஸை தயாரிக்கப்படும்போது, அதில், பால் பயன்படுத்தப்படுகிறது. மாம்பழத்துடன் பால் கலந்தால் நச்சுத்தன்மையாகி விடும். அதாவது, பாலையும், மாம்பழத்தையும் சேர்த்து உட்கொள்வதால் செரிமானம் கெட்டு, அஜீரணம் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பால் மற்றும் மாம்பழம் சேர்த்து சாப்பிடுவதால் உடல் பருமன் வேகமாக அதிகரிக்கும்.
புளிப்பு பழங்கள்:
பாலுடன் ஸ்ட்ராபெரி, திராட்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்ற பழங்களை சாப்பிடக்கூடாது. பாலில் உள்ள லாக்டிக் அமிலமும், புளிப்பு பழங்களில் உள்ள அமிலம் மற்றும் என்சைம்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும். இதனால், உங்களுக்கு வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, நீங்கள் புளிப்பு பழங்களை சாப்பிட்டால், குறைந்தது 2 மணிநேரம் கழித்து பால் சாப்பிடுங்கள்.
பலாப்பழம்:
பால் குடித்த சிறிதுநேரத்தில் பலாப்பழம் சாப்பிடுவதும் நல்லது இல்லை. பாலுடன் பலாப்பழம் சாப்பிடுவதால் தோல் வெடிப்பு, அரிப்பு மற்றும் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.
ALSO READ: Diabetes: சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி..?
அன்னாசிப்பழம்:
பாலுடன் அன்னாசிப்பழமும் எடுத்துக்கொள்ள கூடாது. பாலுடன் அன்னாசிப்பழம் சாப்பிடும்போதும், அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்சைம் வயிற்று வாயு, குமட்டல், தொற்று மற்றும் தலைவலி போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)