5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gas Problem Solution: அடிக்கடி வயிற்றில் வாயு உருவாகி தொல்லையா? உடனடி நிவாரணம் பெற என்ன செய்யலாம்?

Health Tips: வயிற்றில் வாயு உற்பத்தியாகி அது வெளியே வராமல் போனால், அது வாயுப்பிடிப்பாக மாறும். இது ஏற்படும்போது, உங்களுக்கு வலி, வயிற்றில் பிடிப்புகள் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம். சிக்கிய வாயு வெளியே வராமல் தவிக்கும்போது ஒலிகளும் எழும். மேலும், இது மார்பு மற்றும் தோள்களில் வலியை ஏற்படுத்தும்.

Gas Problem Solution: அடிக்கடி வயிற்றில் வாயு உருவாகி தொல்லையா? உடனடி நிவாரணம் பெற என்ன செய்யலாம்?
வாயு தொல்லை (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 01 Nov 2024 15:15 PM

வயிற்றில் வாயு உருவாவது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது பலருக்கு அடிக்கடி தொந்தரவுகளை தரும். செரிமான அமைப்பில் ஏற்படும் தொந்தரவுகளால், அதாவது செரிமான அமைப்பு சரியாக சரி செய்ய முடியாத ஒன்றை நாம் சாப்பிடும்போது, வயிற்றில் வாயு உருவாகி வலியை தருகிறது. அந்தவகையில், இன்று வயிற்றில் ஏன் வாயு உருவாகிறது. அதன் காரணங்கள் என்ன, அதை எவ்வாறு அகற்றுவது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

வயிற்றில் வாயு ஏன் உருவாகிறது..?

நீங்கள் உண்ணும் உணவை செரிமான அமைப்பு ஜீரணிக்கும்போது வயிற்றில் வாயு உற்பத்தியாகிறது. அதாவது, பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாயுவை உற்பத்தி செய்கின்றன. இதனால், உணவு துகள்கள் உடைத்து செரிமானத்திற்கு வழிவகுக்கும்.

ALSO READ: Food Recipe: சுவையான மட்டன் கோலா உருண்டை.. இந்த ஸ்டைலில் குக் செய்து கலக்குங்க..!

நீங்கள் சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதோ அல்லது எச்சில் விழுங்கும்போது, சிறிய அளவிலான காற்று உங்கள் உடலுக்கு நுழையும். இது செரிமான அமைப்பில் சேகரிக்கப்படும். அப்போது, இந்த காற்று உங்கள் வயிற்றை சுற்றி அழுத்தத்தை ஏற்படும். இதனால், உங்களுக்கு வயிற்றில் வாயு அல்லது ஏப்பம் ஏற்படும். இதுவே, அதிகப்படியான காற்று உங்கள் உடலுக்கு நுழையும்போது, வாயு உருவாகி வலி போன்றவற்றை ஏற்படும்.

வயிற்றில் வாயு உற்பத்தியாகி அது வெளியே வராமல் போனால், அது வாயுப்பிடிப்பாக மாறும். இது ஏற்படும்போது, உங்களுக்கு வலி, வயிற்றில் பிடிப்புகள் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம். சிக்கிய வாயு வெளியே வராமல் தவிக்கும்போது ஒலிகளும் எழும். மேலும், இது மார்பு மற்றும் தோள்களில் வலியை ஏற்படுத்தும்.

வாயு சில நோய் மற்றும் மருந்து காரணமாகவும் வயிற்றில் அதிகமாக உருவாக தொடங்கும். வாயு உருவாவதற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள் பொதுவானவை என்றாலும், வயிற்றில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டால் அது கருப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வாயுவால் ஏற்படும் வயிற்று வலியை குறைக்க என்ன செய்யலாம்..?

புதினா இலைகள்:

வாயு தொல்லையால் வயிற்று வலி ஏற்பட்டிருந்தால், அதை போக்குவதற்கு 5 முதல் 6 பச்சை புதினா இலைகளை எடுத்து, அதனுடன் கருப்பு உப்பு சேர்த்து மென்று சாப்பிடலாம். இது உங்கள் வயிற்றில் உருவாகும் வாயுவை வெளியேற்றி வலியில் இருந்து நிவாரணம் தரும்.

பெருங்காய தூள்:

வயிற்றில் இருக்கும் வாயுவை வெளியேற்றவும், வலியை குறைக்கவும் பெருங்காய தூள் பெரிதும் உதவி செய்யும். ஒரு கால் கிளாஸ் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் பெருங்காய தூள் சேர்த்து குடிக்கலாம். அப்படி இல்லையென்றால், காட்டனில் ஊறவைத்து தொப்புளில் வைத்து தூங்கலாம். இது வயிற்று வலியில் இருந்து நிவாரணம் தரும்.

பாதாம் :

பாதம் வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வை தரும். அந்தவகையில், பாதாம் வயிற்று வலியை நீக்கி, அமிலத்தன்மையால் வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனையை முற்றிலுமாக நிறுத்துகிறது. அடிக்கடி வாயு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவு உண்ண முடியாத போது பாதாம் பருப்பை மென்று சாப்பிடுங்கள். உணவுக்குப் பிறகு 4 பாதாம் சாப்பிடுங்கள். இது வாயு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

ALSO READ: ABC Juice: ஏபிசி ஜூஸில் நன்மைகள் ஏராளம்.. இது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா..?

வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள்கள்:

வாழைப்பழத்தில் இயற்கையாகவே அமிலத்தன்மையை எதிர்த்துப் போராடும் ஆன்டாக்சிட்கள் உள்ளன. இது இரவு நேரத்தில் வாயு பிரச்சனை உண்டாகாமல் தடுக்கும். மேலும், இரவு தூங்க செல்வதற்கு சற்று முன் ஆப்பிள் சாப்பிடுவது நெஞ்செரிச்சல் அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனையை நீக்கும்.

தேங்காய் தண்ணீர்:

அசிடிட்டியால் அவதிப்பட்டால் தேங்காய் தண்ணீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

போதுமான தூக்கம் :

ஒரு சராசரி வயதுடைய நபர் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும். தூக்கம் சரியாகவில்லை என்றால், அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனை அடிக்கடி ஏற்படும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News