Food Recipe: சளி, இருமலால் இரவில் தூக்கம் இல்லையா..? இந்த இஞ்சி ரசம் ரெசிபி சரி செய்யும்..!

Ginger Rasam: பருவநிலை மாற்றத்தால் பெரும்பாலோனோருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவைகளில் இருந்து தப்பிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வது நல்லது. இவை உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் மற்றும் தொற்றுநோய் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

Food Recipe: சளி, இருமலால் இரவில் தூக்கம் இல்லையா..? இந்த இஞ்சி ரசம் ரெசிபி சரி செய்யும்..!

இஞ்சி ரசம் (Image: freepik)

Published: 

20 Nov 2024 12:17 PM

கோடைக்காலம் முடிந்த கையோடு மழைக்காலமும், குளிர்காலமும் அடுத்தடுத்து வர தொடங்குவிட்டது. இந்த பருவநிலை மாற்றத்தால் பெரும்பாலோனோருக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவைகளில் இருந்து தப்பிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வது நல்லது. இவை உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, நோய் மற்றும் தொற்றுநோய் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும். மழைக்காலத்தில் முடிந்த அளவு கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடாதீர்கள். இது பிரச்சனை அதிகரிக்க செய்யும். அந்தவகையில், இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் இஞ்சி மற்றும் புளி இல்லாத ரசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ALSO READ: Sore Throat: மழைக்காலத்தில் தொண்டை புண் தொல்லையா..? இதை செய்து குணப்படுத்தலாம்!

புளி இல்லாமல் ரசம்:

தேவையான பொருட்கள்:

  • தக்காளி பழம் – 2
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிய துண்டு
  • நெய் – 2 ஸ்பூன்
  • துவரம் பருப்பு  – 2 ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
  • மல்லி – 2 ஸ்பூன்
  • மிளகு – 1 ஸ்பூன்
  • வர மிளகாய் – 5
  • சீரகம் – 1 ஸ்பூன்
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
  • உப்பு- தேவையான அளவு
  • கடுகு – ஒரு ஸ்பூன்
  • எண்ணெய் – சிறிதளவு
  • கருவேப்பிலை – ஒரு கொத்து

புளி இல்லாமல் ரசம் வைப்பது எப்படி..?

  1. முதலில் புளி இல்லாமல் ரசம் வைக்க நன்றாக கழுத்த இரண்டு தக்காளி பழத்தை பொடி பொடியாக வெட்டி கொள்ளவும். அதனுடன், ஒரு சிறிய துண்டு அளவிலான கட்டிப் பெருங்காயம், 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து இதனுடன் மூன்று டம்ளர் தண்ணீர் கலந்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க விடவும்.
  2.  தக்காளி நன்றாக வேகும்வரை காத்திருக்கவும். இப்போது, அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
  3. நெய் சூடானதும் ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு,  ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 2 டேபிள் ஸ்பூன் மல்லி, ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.
  4. இப்போது, கடைசியாக காரத்திற்கு ஏற்ப ஐந்து வர மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியபின், அரை கப் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
  5. தொடர்ந்து, அதில்,  1 ஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கியதும் அடுப்பை ஆப் செய்யுங்கள்.
  6. இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாகவும், மைய அரைத்து கொள்ளவும்.
  7. அடுப்பை ஆன் செய்து மசாலாவை கொட்டி சிறிது வதக்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.
    ரசம் நன்கு நுரைத்து பொங்கி வரும்போது கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
  8. அடுத்ததாக, மற்றொரு கடாயில் 2 நெய் சேர்த்து சூடானதும் ஒரு ஸ்பூன் கடுகு, வர மிளகாய் வத்தல், ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து சிறிது தாளித்தவுடன் ரசத்துடன் சேர்த்தால் சுவையான புளி சேர்க்காத ரசம் ரெடி.

ALSO READ: Silk Saree Care Tips: நீங்கள் வாங்கியது உண்மையான பட்டுப் புடவையா..? இவற்றை எப்படி பராமரிப்பது..?

இஞ்சி ரசம்

தேவையான பொருட்கள்:

  • இஞ்சி – 3 துண்டு
  • பச்சை மிளகாய் – 2
  • மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
  • எலுமிச்சம்பழம் – 1
  • வேக வைத்த துவரம்பருப்பு – 1/4 கப்
  • கடுகு- 1/4 டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு
  • மிளகுத்தூள் – சிறிதளவு
  • சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

இஞ்சி ரசம் செய்வது எப்படி..?

  1. முதல் அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தை வைத்து சூடானதும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்
  2. அதில், இரண்டாக கீறிய பச்சை மிளகாய், அரை ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிதளவு பெருங்காயத்தூள், நன்றாக நசுக்கப்பட்ட இஞ்சி சேர்த்து கொதிக்க விடுங்கள்.
  3. இவை நன்றாக கொதித்து ஒரு டம்ளர் அளவுக்கு வந்தவுடன் வேக வைத்த துவரம் பருப்பை நீரில் நன்றாக கரைத்து சேர்க்கவும். உப்பு சரியான அளவில் போடப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளுங்கல்.
  4. ரசம் நொங்கி பொங்கி வரும்போது சிறிதளவு சீரகத்தூள், மிளகுத்தூள், கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும்.
  5. மீண்டும் நுரை பொங்கியதும் இறக்கி வைத்து கொள்ளுங்கள், அதில் சிறிதளவு எலுமிச்சம்பழம் பிழிந்து கொள்ளுங்கள்.
  6. இப்போது, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான இஞ்சி ரசம் ரெடி.
  7. மழைக்காலத்தில் சளி, இருமல், அஜீரணம் மற்றும் பசியின்மை போன்ற பிரச்சனைகளை போக்க இந்த ரசம் பெரிதும் உதவும்.
இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!