Grey Hair: நரை முடி தொந்தரவா..? இந்த வைத்தியங்களை வீட்டில் செய்யுங்க.. கருமை கரைபுரளும்!

Black Hair: இளமையில் முடி நரைப்பதற்கு இரசாயனப் பொருட்களும் காரணம். இது தவிர, நம் உணவில் உள்ள குறைபாடும் முடி பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. இப்படி முடி நரைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நரை முடி தொந்தரவு இருந்தால், வீட்டில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தினால்போதும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

Grey Hair: நரை முடி தொந்தரவா..? இந்த வைத்தியங்களை வீட்டில் செய்யுங்க.. கருமை கரைபுரளும்!

White Hair Problems

Published: 

23 Jul 2024 15:32 PM

கருமையான கூந்தல்: தலையில் உள்ள கருப்பு முடி, இளம் வயதிலேயே வெள்ளை முடியாக மாறி பலருக்கும் தொல்லையாக தெரிகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் நரைமுடியை மறைக்க டை உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பயன்படுத்துகின்றனர். இப்போதெல்லாம், மோசமான வாழ்க்கை முறையால், முடி உதிர்தல் மற்றும் பிற முடி தொடர்பான பிரச்சனைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இளமையில் முடி நரைப்பதற்கு இரசாயனப் பொருட்களும் காரணம். இது தவிர, நம் உணவில் உள்ள குறைபாடும் முடி பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகின்றன. இப்படி முடி நரைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நரை முடி தொந்தரவு இருந்தால், வீட்டில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தினால்போதும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

Also read: Hairfall Care: அடிக்கடி முடி கொட்டுதா? அப்போ இதை ஃபாலோ பன்னுங்க..!

கறிவேப்பிலை:

கறிவேப்பிலை சுவையில் மட்டுமல்ல, கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கறிவேப்பிலையின் உதவியுடன் முடியை கருமையாக்கலாம். இதற்கு 2 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, பிரமி மற்றும் கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை உங்கள் முடியின் வேர்களில் தடவி, அரை மணிநேரத்திற்கு பிறகு குளித்தால் விரைவில் உங்கள் நரைமுடி கருமையை நிறத்தை பெறும்.

மருதாணி:

சிலர் மருதாணியை நேரடியாக தலைமுடிக்கு தடவி, நரைமுடியை கருப்பாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் மருதாணி முடியை கருப்பாக இல்லாமல் சிவப்பாக மட்டுமே மாற்றும். உங்கள் தலைமுடியை கருப்பாக்க, முதலில் ஒரு பாத்திரத்தின் மருதாணியை அரைத்து பேஸ்ட் போல் தயார் செய்ய வேண்டும். அதன்பின், அதில் காபி கொதித்த தண்ணீரை கலக்கவும். அதன் பிறகு, நெல்லிக்காய் பொடியை சேர்க்கவும். அதன்பின், இந்த மூன்றையும் கலந்து முடியின் வேர்களில் தடவினால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வெந்தயம்:

வெந்தயம் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும் என ஆதி காலம் முதல் அனைவரும் அறிந்த ஒன்று. இதனை பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனைக்கு தீர்வு காணலாம். வெந்தய விதைகளை பேஸ்ட் போல் தயார் செய்து அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெல்லிக்காய் சாறு கலக்கவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது தலையில் தேய்து, குளித்தால் நரை முடி விரைவில் மறைவும்.

Also read: Hair Regrowth: வழுக்கை எதனால் விழுகிறது..? முடி வளர இதை பண்ணுங்க..

வெங்காயம்:

முடி வளருவது மட்டுமின்றி தலையில் வெள்ளை முடி வளர்வதை நிறுத்தவும் வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு வெங்காயத்தை அரைத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வதக்கவும். சிறிது குளிர்ந்த பிறகு, அதை உங்கள் தலைமுடியில் தடவவும். இது முடி நரைப்பதை குறைக்கும்.

கடுகு எண்ணெய்:

கடுகு எண்ணெயுடன் நெல்லிக்காய் பொடி அல்லது உலர்ந்த நெல்லிக்காயை அரைத்தபின் அதை ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதனை நன்றாக ஆறவைத்தபின் ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வைத்து கொள்ளவும். தினமும் அதை தலையில் தேய்த்து வந்தால், முடி நீளமாகவும் கருமையாகவும் வளரும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த சாம்சன்..!
சர்க்கரை நோயை எப்போதும் கட்டுக்குள் வைக்க செய்ய வேண்டிய விஷயங்கள்..!
நீண்ட நேரம் கழிவறையில் அமர்வதால் ஏற்படும் உடல்நல கேடுகள்..!
ஹல்தி போட்டோஸை வெளியிட்ட ரம்யா பாண்டியன்