Green Chilli Benefits: பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம்..! இந்த உடல்நல பிரச்சனைகளை சரி செய்யுமா? - Tamil News | Green Chilli Benefits: eating green chillies everyday is good for health in tamil | TV9 Tamil

Green Chilli Benefits: பச்சை மிளகாய் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம்..! இந்த உடல்நல பிரச்சனைகளை சரி செய்யுமா?

Published: 

24 Oct 2024 20:27 PM

Health Tips: பச்சை மிளகாய் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை அவதிப்படுவர். அப்படி இருப்பவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயில் உள்ள ஆக்ஸிஜனேற்றம் மற்றும் நார்ச்சத்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

1 / 6உலகத்தில்

உலகத்தில் பல பேர் பச்சை மிளகாய் காரத்திற்கு மட்டுமே பயன்படுத்துவதாக நினைக்கிறார்கள். ஆனால், பச்சை மிளகாய் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை பயக்கும் என்று உங்களுக்கு தெரியுமா..? இது பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

2 / 6

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, பி-1, பி-1, பி-3, பி-5, பி-6, பி-9, மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும், பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கலவை வலியின் உணர்வைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

3 / 6

பச்சை மிளகாய் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பல பிரச்சனைகளை அவதிப்படுவர். அப்படி இருப்பவர்கள் பச்சை மிளகாயை எடுத்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயில் உள்ள ஆக்ஸிஜனேற்றம் மற்றும் நார்ச்சத்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.

4 / 6

பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் ஏ கண்பார்வை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இரும்புச்சத்து நிறைந்த பச்சை மிளகாய் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும் உதவி செய்யும்.

5 / 6

கோடை காலத்தில் பலர் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனையால் பாதிக்கப்படுவர். அந்தவகையில், பச்சை மிளகாயை உட்கொள்வதன் மூலம் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

6 / 6

பச்சை மிளகாயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவோர், தினசரி 3 முதல் 4 பச்சை மிளகாய் சாப்பிட்டால் போதுமானது. பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். பைல்ஸ் பிரச்சனை உள்ளவர் பச்சை மிளகாய் போன்ற காரமான பொருட்களை தவிர்ப்பது நல்லது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!