Guava Leaves For Hair: கொய்யா இலை தண்ணீர் முடி உதிர்வை தடுக்குமா..? இதை எப்படி தயார் செய்வது..?
Hair Fall Treatment: கொய்யா இலையின் தண்ணீரை கொண்டு தலையை கழுவுவதன்மூலம், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? கொய்யா இலையில் அதிகளவில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது தலைமுடியை வலுப்படுத்த பெரிதும் உதவி செய்யும்.
இன்றைய நவீன காலத்தில் பெரும்பாலானவர்கள் முடி உதிர்தல் மற்றும் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இவ்வளவுதான் முடியை பார்த்து பார்த்து பராமரித்தாலும் தூங்கும்போதும், குளித்த பிறகும் முடி அதிகளவில் உதிர்ந்து நம் மனதை மிகவும் கஷ்டப்படுத்தும். முடி உதிர்வு மற்றும் பொடுகு பிரச்சனையை தீர்க்க கடைகள் மற்றும் ஆன்லைன்களில் விற்கப்படும் சீரம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்துகிறோம். அப்படி இல்லையென்றால், யூடியூப்களில் பலர் வெளியிடும் குறிப்புகளை பின்பற்றியும் முயற்சிக்கிறோம்.
இருப்பினும், இவை எந்த வகையிலும் நல்ல பலன்களை தரவில்லை என்று நீங்கள் நினைத்தால், கொய்யா இலையை பயன்படுத்துங்கள். கொய்யா இலையின் தண்ணீரை கொண்டு தலையை கழுவுவதன்மூலம், தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அதற்கான விளக்கத்தை இங்கு பார்ப்போம்.
ALSO READ: Skin Care: கண்களுக்கு கீழ் தினமும் தேங்காய் எண்ணெய் மசாஜ்.. சரும பளபளப்பு உறுதி..!
கொய்யா இலை:
கொய்யா இலையில் அதிகளவில் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இது தலைமுடியை வலுப்படுத்த பெரிதும் உதவி செய்யும். கொய்யா இலை வைட்டமின் பி மற்றும் சி கொலாஜனின் செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. இது முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. மேலும், கொய்யா இலையில் உள்ள மற்ற சத்துக்கள் முடி உதிர்தல் பிரச்சனையை தடுத்து, முடி வளர்ச்சியின் சுழற்சியை மேம்படுத்தும்.
கொலாஜன்:
கொய்யா இலையில் உள்ள வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தலை முடியை பளபளப்பாக மாற்ற உதவி செய்யும். மேலும், கொய்யா இலையில் உள்ள அதிக வைட்டமின் சி உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடியை அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
பண்புகள்:
கொய்யா இலையில் உள்ள ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் உள்ளன. இவை, உச்சந்தலையில் பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். அதேபோல், கொய்யா இலையில் உள்ள பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தலையில் தொற்றுநோயை தடுக்க உதவும். கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் சி தலைமுடியின் வேர்களை பலப்படுத்தி, முடி உடையும் அபாயத்தை குறைக்கும். அதேபோல், கொய்யா இலை வேகவைத்த தண்ணீரை கொண்டு வாரம் ஒருமுறை தலையை கழுவினால் உச்சந்தலையில் உள்ள அழுக்கு மற்றும் பொடுகு போன்றவற்றை நீக்கும்.
கொய்யா இலை நீர் தயாரிப்பது எப்படி..?
தலை முடி உதிர்வை குறைக்க கொய்யா இலை தண்ணீர் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம். முதலில் 10 முதல் 12 கொய்யா இலைகளை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அந்த இலைகளை போடவும். சுமார் 20 நிமிடங்கள் நன்றாக கொதித்ததும், அந்த தண்ணீரை சிறிது ஆற வைக்கவும். அடுத்ததாக, பாத்ரூமில் கொய்யா இலை தண்ணீரை தலையில் ஊற்றி சிறிது நேரம் விடுங்கள். அதன்பிறகு, எப்போதும்போல், தண்ணீர் ஊற்றி முடியை அலசி குளியுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தினால், உங்கள் முடி உடைவது வேகமாக குறையும்.
ALSO READ: Women Health: கர்ப்பம் தரிக்க சிறந்த வயது எது..? தாமதமானால் இந்த பிரச்சனை ஏற்படும்!
கொய்யா இலை எண்ணெய்:
கொய்யா இலையிலிருந்து எண்ணெய் தயாரிப்பது மிகவும் எளிதானது. இதற்கு முதலில் கொய்யா இலையை நன்கு கழுவி காயவைத்து, தேங்காய் என்ணெயில் போட்டு காய்ச்ச தொடங்கவும். இலைகளின் நிறம் மாற தொடங்கும் வரை காத்திருந்து அதன்பின் அடுப்பை ஆஃப் செய்யவும். இப்போது, அந்த எண்ணெயை ஆறவைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். பின் குளிக்க செல்வதற்குமுன், இந்த எண்ணெயை தலையில் ஊற்றி மசாஜ் செய்து, சிறிது நேரத்திற்கு பிறகு குளிக்கவும். இந்த எண்ணெயை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தலைமுடியில் தடவி குளித்தால் விரைவில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். கொய்யா இலை எண்ணெய் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் இருக்க உதவி செய்யும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)