Hemoglobin: தினசரி உணவில் இவை இருந்தால் போதும்! 10 நாட்களில் இரத்தம் அதிகரிக்கும்..!
Hemoglobin Rich foods: உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலைகளில் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.
பிஸியான வாழ்க்கையில் உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளில் ஒன்று ஹீமோகுளோபின் குறைபாடுகளும் ஒன்று. உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், பல பிரச்சனைகள் உண்டாகும். உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் முழு உடலுக்கும் ஆக்ஸிஜனை வழங்க உதவி செய்கிறது. உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும்போது சோர்வு, பலவீனம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இத்தகைய சூழ்நிலைகளில் உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும். உடலில் இரத்தப் பற்றாக்குறையை சரிசெய்ய, முதலில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது, இது இரத்தத்தின் அளவை வேகமாக அதிகரிக்கிறது.
ALSO READ: Skin Care Tips: பருவ மாற்றத்தால் சருமத்தில் வறட்சியா? கற்றாழையை இப்படி பயன்படுத்துங்க!
பச்சை காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி
கீரை மற்றும் வெல்லம் ஆகியவை இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரங்கள். இவை இரத்தத்தை அதிகரிக்க மிகவும் உதவியாக இருக்கும். கூடுதலாக, ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவது இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்கிறது. இவற்றை உண்பதால் இரத்தசோகையில் இருந்து விரைவில் விடுபடலாம். கோழி ஈரல், மீன் மற்றும் முட்டை போன்ற சிவப்பு இறைச்சிகளும் இரத்தத்தை அதிகரிப்பதில் நன்மை பயக்கும். ஆனால் அவற்றை சீரான அளவில் எடுத்துகொள்வது நல்லது.
வைட்டமின் பி12:
இரத்த சோகை உள்ளவர்கள் வைட்டமின் B12 மற்றும் ஃபோலிக் அமிலத்தின் அளவை கவனித்துக் கொள்வது நல்லது. ஏனெனில், இவை இரத்த அணுக்களின் உருவாக்கத்திற்கு அவசியம். பால் மற்றும் முட்டை பி12 அளவை பராமரிக்க நல்ல உணவு பொருட்களாகும். இதுவே, சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பி12 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஃபோலிக் அமிலத்திற்கான பச்சை இலைக் காய்கறிகள், பட்டாணி மற்றும் பருப்புகளை தினசரி எடுத்துக்கொள்வது நல்லது.
பால் பொருட்கள்:
பால், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற பால் பொருட்கள் உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை வழங்குகின்றன. இது ஆரோக்கியமான இரத்த அணுக்களை பராமரிக்க உதவி செய்யும். முடிந்தால், வெல்லம் மற்றும் வேர்க்கடலை உங்கள் உணவில் எடுத்து கொள்ளலாம். ஏனெனில் இவை இரத்தத்தை அதிகரிக்கவும், உடலுக்கு ஆற்றலை அதிகரிக்கவும் உதவி செய்கின்றன. இதனுடன், இரத்தம் குறைவாக உள்ள நபர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்.
மாதுளை:
மாதுளை இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவை புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை. மாதுளை சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கலாம். உடலின் இரத்தத்தை நிரப்ப, மாதுளை சாற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பேரீச்சம் பழம்:
பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. தாமிரம், செலினியம், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது இரத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி எலும்புகளையும் பலப்படுத்துகிறது.
பீட்ரூட்:
இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது தவிர, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. இவை உடலுக்கு தேவையான ஹீமோகுளோபின் மற்றும் ஆற்றலையும் அதிகரிக்கும்.
ALSO READ: Coconut: கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்.. தினமும் எப்படி சாப்பிடலாம்..?
பூசணி விதைகள்:
பூசணி விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உங்கள் உணவில் தினசரி எடுத்து கொள்வதன்மூலம் உடலில் உள்ள இரத்தப் பற்றாக்குறை நீங்கும்.
பீன்ஸ்:
பீன்ஸ் போன்றவை ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கின்றன. இதற்கு பருப்பு, பட்டாணி, பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் அதிக அளவு இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவி செய்யும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)