5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hair Oiling: இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெய் வைத்து தூங்குகிறீர்களா? உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்..!

Hair Care: தூங்கும் முன் தலையில் எண்ணெய் தடவுவது பெரும்பாலான மக்கள் செய்யும் செயல்களில் ஒன்று. தலையில் எண்ணெய் தடவி இரவு முழுவது தூங்குவது, முடிக்கு ஊட்டத்தை அளிக்கிறது. எண்ணெய் தேய்பது முடி வளர்ச்சியை மேம்படுத்தும். ஆனால், தினந்தோறும் இரவு எண்ணெய் வைத்து தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், சில பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Hair Oiling: இரவு முழுவதும் தலைமுடியில் எண்ணெய் வைத்து தூங்குகிறீர்களா? உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரலாம்..!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 26 Jul 2024 06:54 AM

முடி தொடர்பான பிரச்சனைகள்: இந்த காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு அக்கறையை எடுத்துக் கொள்கிறமோ, அதே அளவிற்கு தலை முடியை பாதுகாப்பதிலும் பெரிதளவில் அக்கறை எடுத்துக்கொள்கிறோம். ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே நரை முடி பிரச்சனை, வழுக்கை, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கின்றன. இதன் காரணமாக இந்த பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை கண்டறிய மக்கள் அதிகளவில் மருத்துவர்களை அணுகுகின்றனர். முடிக்கு ஊட்டமளிக்க தலைக்கு எண்ணெய் தடவுவது மிகவும் அவசியமான ஒன்று. தலையில் எண்ணெய் தடவுவதால் ஸ்கால்ப் வறண்டு போகாமல் இருக்கும். எண்ணெய் தேய்க்காததால் வறண்ட உச்சந்தலை முடியை வலுவிழக்கச் செய்வது மட்டுமல்லாமல், முடி உதிர்தலைத் தொடங்க செய்கிறது. எப்படியிருந்தாலும், அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை நம் தலைமுடியை பாதிக்கிறது.

Also read: Grey Hair: நரை முடி தொந்தரவா..? இந்த வைத்தியங்களை வீட்டில் செய்யுங்க.. கருமை கரைபுரளும்!

அத்தகைய சூழ்நிலையில், வழக்கமான எண்ணெய் அவசியம். சிலர் கூந்தலுக்கு எண்ணெய் தடவிய பின் இரவு முழுவதும் அந்த எண்ணெயை தலைமுடியில் விட்டுவிடுவார்கள். இதை நீண்ட நாட்கள் செய்தால் முடி பாதிக்கப்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தநிலையில் ஒரே இரவு முழுவதும் எண்ணெய் தேய்த்து அப்படியே விடுவது எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

மருத்துவர்கள் கூறுவது என்ன..?

தூங்கும் முன் தலையில் எண்ணெய் தடவுவது பெரும்பாலான மக்கள் செய்யும் செயல்களில் ஒன்று. தலையில் எண்ணெய் தடவி இரவு முழுவது தூங்குவது, முடிக்கு ஊட்டத்தை அளிக்கிறது. எண்ணெய் தேய்பது முடி வளர்ச்சியை மேம்படுத்தும். ஆனால், தினந்தோறும் இரவு எண்ணெய் வைத்து தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், சில பிரச்சனைகள் உங்களுக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பொடுகு வரும்:

ஆண்ணோ, பெண்ணோ முடிக்கு எண்ணெயை விட்டு நீண்ட நேரம் இருந்தால், அவர்களுக்கு பொடுகு பிரச்சனைகள் ஏற்படும். முடி அழுக்காக இருக்கும்போது, ​​அது மீண்டும் மீண்டும் மாசுபடுகிறது. இதனால் பொடுகு பிரச்சனை ஏற்படலாம். முடியில் மீண்டும் மீண்டும் அழுக்கு படிவதால் இந்த பொடுகு பிரச்சனை நிகழ்கிறது.

தலை மீது பரு:

வெயில் காலத்தில் சிலரது தலைக்கு மேல் பரு போன்ற ஒரு சிறிய கட்டியை பார்த்திருப்போம். இதுவும் ஒரே இரவில் எண்ணெய் தடவுவதால் உச்சந்தலையில் பரு வர காரணமாகிறது. இத்தகைய பரு வந்தால், உங்களால் தலையில் சீப்பை போட்டு சீவ முடியாது, பெரியளவில் வலியை ஏற்படுத்தும். உச்சந்தலையில் நீங்கள் எண்ணெய் தடவி தூங்கும்போது, தலைமுடியின் வேர்களில் உள்ள மயிர்க்கால்களில் அடைப்பு ஏற்படுகிறது. மேலும் சில துளைகள் அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்காமல், தலையில் பருக்கள் வருகின்றன.

முடி தொடர்பான பிரச்சனைகள்:

ஏற்கனவே முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள், இரவு முழுவதும் எண்ணெய் தடவி தூங்கினால் முடி தொடர்பான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்கலாம். இதன் காரணமாக, உச்சந்தலையில் உள்ள நிறம் மாறி, விரைவில் நரைமுடி பிரச்சனையை அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், முடிக்கு எண்ணெய் தடவிய பிறகு, ஒரு மணிநேரத்திற்கு பிறகு குளித்தாலே போதுமானது.

Also read: Hair Growth Tips: நல்லெண்ணெயை இப்படி பயன்படுத்துங்க முடி அடர்த்தியா வளரும்..

Latest News