5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hair Regrowth: வழுக்கை எதனால் விழுகிறது..? முடி வளர இதை பண்ணுங்க..

Hair Regrowth Tips: ஆண்களுக்கு குறிப்பாக பார்க்கும்போது நெத்தியில் தொடங்கி படிப்படியாக மேலே மேலே ஏறி முடி உதிரும். அதேபோல், தலையின் மேல் பகுதியில் வட்டமாக முடி உதிர தொடங்கும். இந்த இரண்டிற்கு சொட்டை அல்லது வழுக்கை என்று பெயர். ஆண்களுக்கான வழுக்கை என்று எடுத்துகொண்டால் M பேர்டன் வழக்கை என்று சொல்வார்கள். மேலே இருந்து புகைப்படம் எடுத்து பார்த்தால் அது M வடிவில் காட்சியளிக்கும்.

Hair Regrowth: வழுக்கை எதனால் விழுகிறது..? முடி வளர இதை பண்ணுங்க..
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2024 12:49 PM

வழுக்கை தலை சரி செய்ய: தலையில் அனைத்து பக்கங்களிலும் இருந்து முடி கொட்டினால் அதற்கு பெயர் முடி உதிர்வு (hair fall). இது பொதுவாக அனைத்து தரப்பினருக்கும் ஏற்படும். ஆனால், ஆண்களுக்கு குறிப்பாக பார்க்கும்போது நெத்தியில் தொடங்கி படிப்படியாக மேலே மேலே ஏறி முடி உதிரும். அதேபோல், தலையின் மேல் பகுதியில் வட்டமாக முடி உதிர தொடங்கும். இந்த இரண்டிற்கு சொட்டை அல்லது வழுக்கை என்று பெயர். ஆண்களுக்கான வழுக்கை என்று எடுத்துகொண்டால் M பேர்டன் வழக்கை என்று சொல்வார்கள். மேலே இருந்து புகைப்படம் எடுத்து பார்த்தால் அது M வடிவில் காட்சியளிக்கும். இந்த M பேர்டன் வழுக்கை எதனால் ஏற்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். பொதுவாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் என்ற ஆண்மை தன்மை இருக்கும். இது ஆண்களுக்கு அளவுக்கு அதிகமாக ஆகும் போதுதான் வழுக்கை பிரச்சனை தொடங்குகிறது.

எதனால் என்றால் இரவு நேரத்தில் சரியாக தூங்கவில்லை, குறைவான அளவே தூக்கம், நைட் ஷிப்ட் பார்ப்பவர்களுக்கு இந்த டெஸ்டோஸ்டிரோன் அதிகரித்து, முடி வளரும் சக்தியை தடுக்கிறது. இதனால், ஊட்டசத்து குறைந்து அவ்வபோது கொட்டும் முடியானது, தொடர்ந்து கொட்ட தொடங்குகிறது. டெஸ்டோஸ்டிரோனை குறைத்து, முடி வளர கீழே வருவதை பின் தொடருங்கள்..

ALSO READ: Health Tips: தொப்பை சர்ரென குறையும்.. இந்த 6 பழங்களை அடிக்கடி சாப்பிடுங்க!

சரியான அளவு தூக்கம்:

இரவு தூங்கும்போது மட்டும்தான் நம் உடலில் உள்ள சூடு வெளியேறும். இதன்மூலம், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும். முடிந்தவரை நைட் ஷிப்ட் பார்ப்பவர்கள், பகலில் வேலை பார்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். அப்படி இல்லையென்றால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வைட்டமின் டி எடுத்து கொள்ளலாம்.

மேலும் ஜிங்க், வைட்டமின் டிஹெச், வைட்டமின் சிஹெச் உணவுகள் உங்கள் உணவில் தினசரி இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். அதன்படி சின்ன வெங்காயம், பூசணி விதைகளில் அதிகபடியான ஜிங்க் உள்ளது. வைட்டமின் சி வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம்.

ஹாட் வாட்டார் மசாஜ்:

நன்கு கொதித்த தண்ணீரில் ஒரு டவளை முக்கி, அதை நன்கு புழிந்தபின், தலையில் கட்டலாம். இது டெஸ்டோஸ்டிரோனை குறைக்க செய்து, முடிக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டசத்தையும் தருகிறது.

பூசணி விதை ஆயில்:

தற்போது பூசணி விதை ஆயிலும் மார்க்கெட்களில் கிடைக்கிறது. இதை தலையில் அப்ளை செய்வதன்மூலம், முடிக்கு ஊட்டசத்து கிடைக்கும்.

சின்ன வெங்காயம்:

சின்ன வெங்காயத்தை தண்ணீர் ஊற்றி அரைக்காமல், அப்படியே அரைத்து தலையில் பூசி குளித்தால் உங்களுக்கு தலை முடி வளர நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ALSO READ: Bathroom Cleaning: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!

Latest News