Hampi Tour: ஹம்பிக்கு நம்பி சுற்றுலா போங்க.. புத்துணர்ச்சி தரும் பழைய நகரத்தின் அழகு..!
Travel Tips: விஜயநகர பேரரசின் கலாச்சார செல்வத்தின் மிச்சமே ஹம்பி என்று கூறலாம். நீங்கள் வரலாற்றை அறிய ஆர்வமாக இருந்தால், இணையத்தில் அத்தகைய இடத்தை தேடுகிறீர்களானால், ஹம்பி ஒரு சிறந்த இடம். ஹம்பி கர்நாடகாவின் பழமையான நகரம், இந்த நகரம் ராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விஜயநகரத்தின் தலைநகராக இருந்த கிஷ்கிந்தாதான், தற்போது ஹம்பி என்று அழைக்கப்படுகிறது.
ஹம்பி டூர்: தென்னிந்தியாவில் ஹம்பி ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும். கர்நாடகாவில் அமைந்துள்ள ஹம்பி, இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. விஜயநகர பேரரசின் கலாச்சார செல்வத்தின் மிச்சமே ஹம்பி என்று கூறலாம். நீங்கள் வரலாற்றை அறிய ஆர்வமாக இருந்தால், இணையத்தில் அத்தகைய இடத்தை தேடுகிறீர்களானால், ஹம்பி ஒரு சிறந்த இடம். ஹம்பி கர்நாடகாவின் பழமையான நகரம், இந்த நகரம் ராமாயணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் விஜயநகரத்தின் தலைநகராக இருந்த கிஷ்கிந்தாதான், தற்போது ஹம்பி என்று அழைக்கப்படுகிறது. பெங்களூரில் இருந்து ஹம்பி 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய 500க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
ALSO READ: Travel Tips: பனியும், பனி சார்ந்த இடமும் அவுலி.. குடும்பத்துடன் ஜில்லுன்னு ஒரு டூர் போங்க..!
பாதவ லிங்கம்:
9 அடி உயரமுள்ள இந்த கோயிலை சுற்றிலும் பழமையான கால்வாய் ஒன்ற்ய் உள்ளது. இந்த கோயிலில் உள்ள ஒற்றைக்கல் சிவலிங்கத்தில் மூன்று கண்கள் இடம் பெற்றிருக்கும். ஹம்பி என்ற ஏழை பழங்குடியினர் ஒருவரின் ஆசை நிறைவேறியபோது, ஒரு பெரிய கல்லை வெட்டி பாதவ லிங்கத்தை செதுக்கியதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். மற்றொரு வரலாற்றில், இந்த லிங்கம் ஒரு கிராமப் பெண்ணால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.
தாமரை மஹால்:
ஹம்பியில் உள்ள தாமரை மஹால் இன்னும் அதன் பொலிவை இழக்காத பிரபலமான மற்றும் அழகான கட்டிடங்களில் ஒன்றாகும். ஹம்பிக்கு சென்று இந்த தாமரை மஹாலை நீங்கள் பார்க்காமல் வந்திருந்தால், உலகின் மிக அழகான இடத்தை மிஸ் செய்தவராக இருப்பீர்கள். இந்த அரண்மனை கமல் மஹால் அல்லது சித்ரகனி மஹால் என்றும் அழைக்கப்படுகிறது. தாமரை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த மஹால் உலகம் முழுவதும் அறிந்த ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.
லட்சுமி நரசிம்மர் கோயில்:
லட்சுமி நரசிம்மர் கோயிலில் நாகத்தின் மீது அமர்ந்திருக்கும் நரசிம்மரின் பெரிய சிலையை நீங்கள் காணலாம். நரசிம்மர் சிலையுடன், லட்சுமி தேவியின் சிலையும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஹம்பி வந்தால் தவிர்க்காமல் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.
ஆனேகுண்டி கிராமம்:
ஆனேகுண்டி கிராமம் ஹம்பியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் துங்கப்த்ரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இந்த இடத்தை பார்க்க நீங்கள் மூங்கிலால் செய்யப்பட்ட படகில் செல்ல வேண்டும். இது உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். இங்குதான் அனுமன் பிறந்த இடம் என்றும் வரலாறு கூறுகிறது. இங்கு பம்பா சரோவர் லட்சுமி கோயில், ஸ்ரீ கிருஷ்ணதேவராய சமாதி, ஆனேகுண்டி கோட்டை நுழைவு வாயில் போன்றவை உள்ளன.
ALSO READ: Travel: கோவா செல்ல போகிறீர்களா..? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!
பழைய அரண்மனை:
என்கோண்டியில் பழைய அரண்மனை அமைந்துள்ளது. எல்லா பக்கமும் பெரிய பெரிய கோட்டையால் சூழப்பட்ட அரண்மனை இது. தற்போது இடிபாடுகளாகி சேதமடைந்துள்ளது. இருப்பினும், இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மையமாக நிச்சயம் இருக்கும்.