Health Tips: ஒரு வாரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்..? பக்க விளைவுகள் ஏற்படுமா..?

Health Advice: இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு உடலுறவு மீது ஆர்வம் இருந்தாலும், அதை பற்றி தெளிவு இருப்பது கிடையாது. எல்லா இடங்களிலும் நேரம் முக்கியம். உணவு உண்ணும் செயலாக இருந்தாலும் சரி, உடலுறவு கொள்ளும் செயலாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட நேரத்தை எடுத்து கொள்வது அவசியம். ஆண்கள் பெரும்பாலும் உடலுறவின்போது 1 முதல் 2 நிமிடங்களுக்கு தங்களது உச்சக்கட்டத்தை எட்டி விடுகின்றனர். இதனால் பெண்கள் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

Health Tips: ஒரு வாரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்..? பக்க விளைவுகள் ஏற்படுமா..?

உடலுறவு (Image: freepik)

Published: 

31 Aug 2024 19:34 PM

உடலுறவு: திருமணம் என்பது எல்லார் வாழ்க்கையில் நிகழும் முக்கியமான நிகழ்வாகும். ஆண்களோ, பெண்களோ திருமணத்திற்கு பிறகு உடலுறவு பற்றிய பயத்தால் அவதிப்படுகின்றனர். இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு உடலுறவு மீது ஆர்வம் இருந்தாலும், அதை பற்றி தெளிவு இருப்பது கிடையாது. எல்லா இடங்களிலும் நேரம் முக்கியம். உணவு உண்ணும் செயலாக இருந்தாலும் சரி, உடலுறவு கொள்ளும் செயலாக இருந்தாலும் சரி. குறிப்பிட்ட நேரத்தை எடுத்து கொள்வது அவசியம். ஆண்கள் பெரும்பாலும் உடலுறவின்போது 1 முதல் 2 நிமிடங்களுக்கு தங்களது உச்சக்கட்டத்தை எட்டி விடுகின்றனர். இதனால் பெண்கள் உச்சக்கட்டத்தை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர். உங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், உடலுறவு நேரத்தை அதிகரிப்பது முக்கியம். சிலருக்கு உடலுறவு பற்றிய நிறைய கேள்விகள் இருக்கும். அதற்கான விளக்கங்களை உங்களுக்கு இங்கே தருகிறோம்.

ALSO READ: Health Tips: உடலுறவுக்குள் இந்த விதிகளை பின்பற்றுவது மிக முக்கியம்.. இது இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!

மனநிலையே உடலுறவுக்கு முக்கியமான அங்கம்:

உடலுறவு கொள்வது இயற்கையான செயல். எனவே, இது நபரின் உடல் வலிமை மற்றும் அவரின் மனநிலையை பொறுத்தது. ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ அறிவியலில் குறிப்பிட்டுள்ளபடி, உடலுறவு நேரம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுபடும். சில பருவங்களில் குறைவாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் நேரம் எடுக்கும்.

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, கோடை காலத்தில் 1-2 முறையும், குளிர்காலத்தில் 4-5 முறையும், மழைக்காலத்தில் 3-4 முறையும் ஒரு வாரத்தில் ஈடுபடலாம். உங்களது உடல் வலிமையும், உங்களது துணையின் உடல் வலிமையும் அதிகமாக இருந்தால் கூடுதலாக ஈடுபடுவதில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும், ஒருவருக்கு விருப்பம் இல்லையெனில் கட்டாயப்படுத்துவது தவறு.

ஒரு வாரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?

ஒரு வாரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்வது என்பது உங்கள் வயதை பொறுத்தது. எனவே, உங்கள் வயது என்ன என்பதை பொறுத்து உடலுறவில் ஈடுபடுவது மிக முக்கியம். உதாரணத்திற்கு, உங்களுக்கு 20 – 25 வயது முதல் இருந்தால், வாரத்திற்கு 3-4 முறை செய்யுங்கள். தினமும் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.

உடலுறவு நேரம் என்பது எவ்வளவு..?

ஒவ்வொருவரும் குறைந்தது தங்களது உடலுறவு நேரத்தை அதிகபட்சமாக 10 நிமிடங்கள் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் வெகு சில ஆண்களே தங்கள் துணையை முழுவதுமாக மகிழ்ச்சியடைய செய்கின்றனர். பெண்கள் உச்சக்கட்டத்தை அடைய, 8-10 நிமிடங்கள் உடலுறவு கொள்வது சரியானதாக கருதப்படுகிறது. எனவே, 2-3 நிமிடங்களில் விந்து வெளியேறும் ஆண்கள் குறைந்தபட்சம் 8-10 நிமிடங்களுக்கு நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

ALSO READ: Health Tips: உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய எளிய வழிகள்.. இவை இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!

உடலுறவு நேரத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்..?

உடலுறவு நேரத்திற்கு உடல் சக்தியும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல், ஆண்கள் வயாகரா போன்ற உடலுறவு டைமிங் மருந்தை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்து சாப்பிட வேண்டாம்.

உடலுறவுக்கு மனம்தான் மிக பெரிய பங்கை வகுக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொண்டால், உடலுறவு மற்றும் உடலுறவு சார்ந்த பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள்.

குறிப்பு: இந்த செய்தியானது ஆபாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதப்படவில்லை. பலர் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்திற்காவே எழுதுகிறோம். இதை படிப்பவர்களுக்கு பாலியல் பற்றிய தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் குறிப்பிடுகிறோம்.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?