5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உடலுறவின் போது இந்த பழக்கங்கள் மனநிலையை கெடுக்கும்.. இதையெல்லாம் மாற்றி கொள்ளுங்கள்!

Physical Intimacy: நீங்கள் செய்யும் சில தீய பழக்கங்கள் திருமணத்திற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம். இதனால் பலரது செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பது கிடையாது. பலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு கூட இருப்பது இல்லை. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் உடலளவிலும், மனதளவிலும் மனைவி மற்றும் கணவர் என இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

Health Tips: உடலுறவின் போது இந்த பழக்கங்கள் மனநிலையை கெடுக்கும்.. இதையெல்லாம் மாற்றி கொள்ளுங்கள்!
பாலியல் ஆரோக்கியம் (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2024 21:00 PM

உடலுறவு: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்ல பழக்கவழக்கங்கள் இருப்பது மிக முக்கியம். நீங்கள் செய்யும் சில தீய பழக்கங்கள் திருமணத்திற்கு பிறகு உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம். இதனால் பலரது செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பது கிடையாது. பலருக்கு இது பற்றிய விழிப்புணர்வு கூட இருப்பது இல்லை. ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு இந்த விஷயங்களை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். அப்போதுதான் உடலளவிலும், மனதளவிலும் மனைவி மற்றும் கணவர் என இருவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது போன்ற கெட்ட பழக்கங்களை அடையாளம் காணவும், அவற்றை எளிதாக அகற்றவும் உதவும். அந்த வகையில், உடலுறவு கொள்ளும்போது மனநிலை கெட்டுவிடும் இந்த கெட்ட பழக்கங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Health Tips: உடலுறவுக்குள் இந்த விதிகளை பின்பற்றுவது மிக முக்கியம்.. இது இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!

மொபைல் போன்:

பாலியல் வாழ்க்கையில் மொபைல் போன் ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மொபைலின் மீது அதிக ஈர்ப்பு இருப்பதால், தங்கள் துணையை பலரும் கண்டுகொள்வது இல்லை. வீட்டிற்கு சென்ற பிறகும், படுக்கைக்கு சென்ற பிறகும் உங்கள் துணையை முழுமையாக கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால். மொபைல் போன் இதற்கு ஒரு பெரிய தடையாக உள்ளது.

கணவர் மற்றும் மனைவி என இருவரும் காதலில் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போதும் ஒருவரிடமிருந்து வரும் அழைப்பு மற்றும் மெசேஜ் காரணமாக மனநிலை ஆசையை குறைக்கும். எனவே, இருவரும் படுக்கைக்கு செல்லும்போது மொபைல் போனை சைலண்டில் போடுவது நல்லது. அதேபோல், உடலுறவு கொண்ட பிறகும், தொலைபேசியை உங்களிடமிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் துணையுடன் பேசுங்கள்.

எச்சிலை சிலர் பயன்படுத்துவார்கள்:

நல்ல பழக்கவழக்கங்கள் காதல் மற்றும் காமத்தை அதிகரிக்க செய்யும். ஆனால், சிலர் சில சமயங்களில் உடலுறவு கொள்ளும்போது பிறப்பு உறுப்பில் வறண்டு போய்விடும். இந்த காரணத்திற்காக பல ஆண்கள் தங்கள் எச்சிலை பயன்படுத்துகிறார்கள். இந்த பழக்கம் உங்கள் துணையின் மனநிலையை கெடுத்துவிடும்.

இது தவிர, எச்சில் பயன்படுத்துவதால் பல வகையான பாலியல் பிரச்சனைகளை உண்டாக்கும்.

இரவில் தாமதமாக சாப்பிடாதீர்கள்:

இரவில் தாமதமாக சாப்பிடுவதும் உடலுறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நவீன வாழ்க்கையில் பலர் தினசரி இரவில் இதன் காரணமாக உடலுறவின் போது ஏப்பம், வயிறு இரைத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சில நேரங்களில் வாய் துர்நாற்றம் கூட மனநிலையை கெடுத்துவிடும். எனவே, சரியான நேரத்தில் இரவு உணவை சாப்பிடுங்கள்.

எப்போது மனதில் வைத்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இரவு உணவு சாப்பிட்டு 1 மணி நேரம் கழித்து தான் உடலுறவு கொள்ள வேண்டும். இது அஜீரணத்தின் அபாயத்தைக் குறைக்கிறது. இரவு உணவில் பச்சையாக வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. இதனால் வாய் துர்நாற்றம் வீசுகிறது.

போதைப்பொருள்:

இரவு நேரத்தில் ஆல்கஹால் அல்லது பிற போதைப்பொருள் உட்கொள்வதால் பாலியல் வாழ்க்கையும் கெட்டுவிடுகிறது. பல ஆண்கள் மது அருந்திவிட்டு உடலுறவில் முரட்டுதனமாக நடந்து கொள்கிறார்கள். பெரும்பாலான பெண்களுக்கு இது மாதிரியான செயல்கள் பிடிப்பது இல்லை. எனவே, உடலுறவு கொள்ளும்போது போதைப் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. மேலும், மது, சிகரெட் போன்றவையும் விந்தணு குறைதல் போன்ற மோசமான விளைவை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ALSO READ: Health Tips: ஒரு வாரத்தில் எத்தனை முறை உடலுறவு கொள்ளலாம்..? பக்க விளைவுகள் ஏற்படுமா..?

உடை மாற்றுதல்:

அலுவலகத்தில் இருந்து சிலர் வீடு வந்ததும் சோம்பேறித்தனத்தால் உடையை கூட மாற்றாமல் தூங்க செல்கின்றனர். இவற்றின்போது உடலுறவு கொள்ளும்போது வியர்வையால் துர்நாற்றம் வீசும். எனவே, உடை மாற்றி கை, கால்களை கழுவுவது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும். இதன் காரணமாக துணையின் மனநிலையும் பாதிக்கப்படாது.

Latest News