Health Tips: இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கா..? இது பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்!

Health Advice: பாலியல் உடலுறவு என்பது நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது உங்கள் பாலியல் ஹார்மோன்கள் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் விறைப்புத்தன்மை, குறைந்த ஆண்மை போன்றவை முக்கியமானது. இதுபோல் அதிகரித்து வரும் உடல்நல பிரச்சனைகள் உங்களது பாலியல் வாழ்க்கையை கெடுத்துவிடும்.

Health Tips: இந்த பிரச்சனைகள் உங்களுக்கு இருக்கா..? இது பாலியல் வாழ்க்கையை கெடுக்கும்!

பாலியல் ஆரோக்கியம் (Image: freepik)

Published: 

02 Sep 2024 17:54 PM

பாலியல் ஆரோக்கியம்: உங்கள் துணையுடன் உடலுறவு கொள்வது உறவில் உள்ள நெருக்கத்தை அதிகரிக்க செய்யும். பாலியல் உடலுறவு என்பது நமது ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இது உங்கள் பாலியல் ஹார்மோன்கள் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. உங்கள் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றில் விறைப்புத்தன்மை, குறைந்த ஆண்மை போன்றவை முக்கியமானது. இதுபோல் அதிகரித்து வரும் உடல்நல பிரச்சனைகள் உங்களது பாலியல் வாழ்க்கையை கெடுத்துவிடும். உங்கள் உடல்நிலை குறித்து நீங்கள் அறிந்துகொள்வது மிக முக்கியம். அந்த வகையில், உங்கள் பாலியல் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும் சில உடல்நல பிரச்சனைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health Tips: உடலுறவின் போது இந்த பழக்கங்கள் மனநிலையை கெடுக்கும்.. இதையெல்லாம் மாற்றி கொள்ளுங்கள்!

சர்க்கரை நோய்:

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு விறைப்புத்தன்மை மற்றும் விந்து விரைவில் வெளியேறுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நமது உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது நமது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, பாலின உறுப்புகளுக்கு தேவையான இரத்த ஓட்டத்தை அளிப்பது கிடையாது. இதேபோல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு யோனி வறட்சி, வலிமிகுந்த உடலுறவு மற்றும் பாலியல் ஆசை இல்லாமை போன்ற பிரச்சனைகளை தரும். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண, ஆரோக்கியமான உணவுடன், உடற்பயிற்சியும் மேற்கொள்வது மிக முக்கியம்.

நீண்ட நாள் வலி:

உங்கள் உடலில் நீண்ட நாட்களாக கடுமையான வலி இருந்தாலும், இதுபும் உங்கள் பாலியல் ஆசையை குறைக்கும். நாள்பட்ட வலியிலிருந்து நிவாரணம் பெற, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துகொள்வது நல்லது. சில வலிநிவாரணிகள் பாலியல் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

இதய நோய்:

இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் உடலுறவில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது மிக முக்கிய. சில நாட்களுக்கு முன்பு ஒருவருக்கு மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், அவர் உடலுறவில் ஈடுபடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மூட்டு வலி:

மூட்டுகளில் வலி மற்றும் பிடிப்புகள் உள்ளவர்களுக்கும் பாலியல் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியை தராது. உடலுறவுக்கு முழு உடல் இயக்கம் தேவைப்படுவதால், வலி பயத்தினால் சிலர் உடலுறவை தவிர்க்கிறார்கள்.

மனச்சோர்வு:

பாலியல் மகிழ்ச்சியின்மைக்கு மனநிலையும் ஒரு காரணமாக அமைக்கிறது. நீங்கள் உடலளவிலும், மனதளவிலும் உடலுறவில் ஈடுபட்டால்தான் முழு மகிழ்ச்சியை தரும். மன அழுத்தம், மன சோர்வு உள்ளவர்களுக்கு பாலியல் வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளலாம். இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்தால் முதலில் நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது.

ALSO READ: Health Tips: தூங்கும்போது குறட்டை விடுகிறீர்களா..? இதை செய்தால் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்!

குறிப்பு: இந்த செய்தியானது ஆபாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதப்படவில்லை. பலர் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்திற்காவே எழுதுகிறோம். இதை படிப்பவர்களுக்கு பாலியல் பற்றிய தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் குறிப்பிடுகிறோம்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?