Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்! - Tamil News | Health benefits of drinking coriander water on an empty stomach; health tips in tamil | TV9 Tamil

Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்!

Published: 

10 Sep 2024 17:06 PM

Health Tips: உடலானது அதிக வெப்ப நிலையில் அவதிப்பட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், கொத்தமல்லியில் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. கொத்தமல்லியை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Coriander Water Benefits: வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிங்க.. இதுவே பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும்!

கொத்தமல்லி விதை

Follow Us On

கொத்தமல்லி தண்ணீரின் பயன்கள்: சமையலறையில் உள்ள பல்வேறு பொருட்களால் பல நோய்களுக்கு நிவாரணம் தர முடியும். உதாரணமாக, மஞ்சள், சீரகம், இஞ்சி மற்றும் சோம்பு போன்ற பல உணவு பொருட்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கு. இப்படி சமையலறையில் இருக்கும் ஒவ்வொரு மசாலாவும் வெவ்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. அவற்றை சமைத்து சாப்பிட்டாலும் அல்லது பச்சையாக எடுத்துக்கொண்டாலும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. அந்த வகையில், உடலானது அதிக வெப்ப நிலையில் அவதிப்பட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க கொத்தமல்லி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், கொத்தமல்லியில் இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. கொத்தமல்லியை தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ALSO READ: Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!

சரும பிரச்சனை:

கொத்தமல்லி தண்ணீர் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லியில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே தினந்தோறும் எனவே கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் குணமாகும். மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. கொத்தமல்லி விதையில் தயாரிக்கப்படும் தண்ணீரை காலையில் குடிப்பதால் சருமம் பொலிவாகவும் மென்மையாகவும் இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

கொத்தமல்லி விதைகள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க உதவுகிறது. இது பல நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. மேலும், இது வைரஸ் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

தலை முடி:

கொத்தமல்லி விதையில் வைட்டமின் கே, சி மற்றும் ஏ போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது முடி வலுவாகவும், வேகமாகவும் வளர இவை அவசியம். கொத்தமல்லி விதை தண்ணீரை காலையில் குடிப்பதால் முடி உதிர்தல் மற்றும் உடைவது குறையும். கொத்தமல்லி விதைகளை எண்ணெய் வடிவிலும் உங்கள் தலைமுடிக்கு தடவலாம்.

எடை குறைக்க உதவும்:

கொத்தமல்லி செரிமான பிரச்சனைகளுக்கு நல்லது. தினமும் காலையில் கொத்தமல்லி விதையில் ஊறவைத்த தண்ணீரை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, செரிமான சக்தியை அதிகரிக்க செய்யும். கொத்தமல்லி விதைகள் அளவில் சிறியதாக இருந்தாலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. கொத்தமல்லி விதையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே உள்ளது.

கொலஸ்ட்ராலை நீக்கும்:

கொத்தமல்லி விதையில் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும் சில பண்புகள் உள்ளன. அதன்படி, அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை உட்கொள்ளலாம். கொத்தமல்லி தண்ணீரை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

வயிற்று ஆரோக்கியம்:

கொத்தமல்லி தண்ணீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொத்தமல்லியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் செரிமானம் மேம்படும். இது மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது.

ALSO READ: Health Tips: பெண்களின் உடல் எடை அதிகரிக்க இதுதான் காரணமா..? நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த கொத்தமல்லி தண்ணீர் குடிக்கலாம். கொத்தமல்லி விதை தண்ணீரைக் குடிப்பதால் இரத்த இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

மேலும் சில..

  • மாதவிடாய் வலியால் அவதிப்படுபவர்களுக்கும் காலையில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பது நன்மை பயக்கும்.
  • கொத்தமல்லி தண்ணீரை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
  • கொத்தமல்லியில் உள்ள இரும்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு-பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை எதிர்த்துப் போராடி, பளபளக்க உதவுகிறது.

கொத்தமல்லி தண்ணீரை தயாரிப்பது எப்படி..?

கொத்தமல்லி தண்ணீரை தயாரிக்க 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை 1 கப் குடிநீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி, அதன் பிறகு இந்த தண்ணீரை குடிக்கலாம். சுவைக்காக சிறிது சர்க்கரை அல்லது தேன் சேர்க்கலாம்.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version