5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pumpkin Seeds Benefits: தினமும் 2 ஸ்பூன் பூசணி விதைகள் சாப்பிடுங்க.. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு நிச்சயம்!

Health Tips: பூசணி விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், உடலுக்கு நார்ச்சத்தை வழங்குகிறது. இது நீரிழிவு மற்றும் இதய நோய்களின் ஆபத்தை குறைக்கும். மேலும், பூசணி விதை உங்களுக்கு ஜீரண சக்தியை வலுவடைய உதவி செய்யும். அதேபோல், பூசணி விதைகளை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Pumpkin Seeds Benefits: தினமும் 2 ஸ்பூன் பூசணி விதைகள் சாப்பிடுங்க.. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு நிச்சயம்!
பூசணி விதைகள் (Image: Freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 23 Sep 2024 18:40 PM

பழங்கள் மற்றும் காய்கறிகள் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுபோல், சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் விதைகளும் நம் உடலுக்கு நன்மைகளை தருகிறது. காய்கறிகளின் விதைகள் பல உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் செயல்படும். அந்தவகையில் சூரியகாந்தி, ஆளிவிதை மற்றும் பூசணிக்காயின் விதைகளை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால், நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்கலாம். அந்தவகையில், இன்று பூசணிக்காயின் விதைகளை சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

பூசணி விதையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதேபோல் புரதங்கள், நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் உள்ளன.

ALSO READ: Beauty Tips: முக அழகுக்காக இந்த பொருட்களை யூஸ் பண்றீங்களா..? உஷார்! பிரச்சனையை தரும்..

இதய ஆரோக்கியம்:

காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை சாப்பிடுவது உங்கள் இதய ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பூசணி விதைகளில் அதிக அளவு ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், மெக்னீசியம் உள்ளது. இது உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை தடுக்க உதவி செய்கிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவி செய்கிறது.

வீக்கத்தை குறைக்கும்:

பூசணி விதைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகளவில் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. உங்களது உடலில் நீரழிவு அல்லது தைராய்டு போன்ற பிரச்சனைகளால் வீக்கம் ஏற்பட்டால், காலையில் வெறும் வயிற்றில் பூசணி விதைகளை உட்கொள்ள தொடங்குங்கள். பூசணி விதைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, வீக்கத்தை குறைக்கும்.

நார்ச்சத்து:

பூசணி விதைகளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இவற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், உடலுக்கு நார்ச்சத்தை வழங்குகிறது. இது நீரிழிவு மற்றும் இதய நோய்களின் ஆபத்தை குறைக்கும். மேலும், பூசணி விதை உங்களுக்கு ஜீரண சக்தியை வலுவடைய உதவி செய்யும். அதேபோல், பூசணி விதைகளை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இரும்புச்சத்து:

பூசணி விதைகள் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால் சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படலாம். தொடர்ந்து, இது உங்கள் உடலில் இரத்த சோகையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை அதிகளவில் பெண்களுக்கே ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் பூசணி விதைகளை தினமும் எடுத்துகொண்டால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். இது இரத்த சோகையில் அறிகுறிகளையும் குறைக்கும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்:

உடலை ஆரோக்கியமான வைத்திருக்கா ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக அவசியம். அந்த வகையில், பூசணி விதைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலங்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுக்காக்க உதவுகின்றன. மேலும், இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாக்கிறது.

முடி வளர்ச்சி:

பூசணி விதைகள் வைட்டமின் சியின் நல்ல மூலமாக உள்ளது. இதை உட்கொள்வதன்மூலம், உங்கள் முடி வேர்களிலிருந்து வலுவடைந்து, வளர்ச்சியை வேகமாக்கும். இதன் விதைகளின் எண்ணெயை முடியிலும் தடவலாம்.

பெண்களுக்கு பல நன்மைகளை தரும் பூசணி விதை:

மாதவிடாய்:

பூசணி விதைகளை உட்கொள்வது மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், பிசிஓஎஸ் அறிகுறிகளை குறைக்கவும் உதவுகின்றன. இதில் இருக்கும் பண்புகள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும். மேலும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

எடையை குறைக்க உதவும்:

வறுத்த பூசணி விதை மற்றும் தேன் சாப்பிடுவது பெண்களின் உடல் எடையை குறைக்க உதவு. இந்த கலவையில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதங்கள் உள்ளன. இது வயிற்றை நீண்ட காலமாக பசியை எடுக்காமல் தடுக்கும். எடை இழப்புக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

ALSO READ: Food Recipes: சுவையான ரசமலாய் செய்ய ரெடியா..? பேமிலிக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!

கர்ப்பம் காலம்:

கர்ப்பிணி பெண்களுக்கு பூசணி விதைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதில் அதிகளவிலான துத்தநாகம் உள்ளது. இது கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. பூசணி விதைகளில் இருக்கும் துத்தநாகம் உயிரணௌக்களின் வளர்ச்சிக்கு உதவி, நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

Latest News