5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Cauliflower Benefits: காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..? ஆரோக்கியத்திற்கு சிறந்தது..!

Health Benefits: காலிஃபிளவர் ஒரு குளிர்கால காய்கறி வகையாகும். இதில் வைட்டமின் சி, புரதம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மேலும், கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. அந்தவகையில், இன்று காலிஃபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Cauliflower Benefits: காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..? ஆரோக்கியத்திற்கு சிறந்தது..!
காலிஃபிளவர் (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 04 Oct 2024 15:15 PM

குளிர்காலத்தில் நிறைய காய்கறிகள் மார்க்கெட்டுக்கு வரும். இவை சுவையானது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவ்வகையான காய்கறிகளில் மிகவும் முக்கியமானது காலிஃபிளவர். காலிஃபிளவர் ஒரு குளிர்கால காய்கறி வகையாகும். இதில் வைட்டமின் சி, புரதம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. மேலும், கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன. அந்தவகையில், இன்று காலிஃபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipes: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ​​சிக்கன் வெள்ளை பிரியாணி.. 15 நிமிடத்தில் சூப்பர் டிஸ் தயார்..!

செரிமானம்:

காலிஃபிளவரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ஜீரண சக்தியை பலப்படுத்த உதவி செய்கிறது. மேலும், இது உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. முட்டைக்கோஸில் உள்ள குளுக்கோராபனின் வயிறு தொடர்பான நோய்களை நீக்கவும் உதவி செய்கிறது.

இதய ஆரோக்கியம்:

காலிஃபிளவர் இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள குளுக்கோராபனின் இதயம் தொடர்பான நோய்களை குறைக்க உதவி செய்கிறது. இதய பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக காலிஃபிளவரை எடுத்துக்கொள்ளலாம்.

கொலஸ்ட்ரால்:

காலிஃபிளவரில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. மேலும், காலிஃபிளவரில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும்:

காலிஃபிளவரில் இயற்கையாகவே கலோரிகள் குறைவாக உள்ளது. இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். உடல் பருமனை குறைக்க விரும்புவோர் தாராளமாக காலிஃபிளவரை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கர்ப்பிணிகளுக்கு நன்மை:

கர்ப்ப காலத்தில் காலிஃபிளவர் உட்கொள்வது நன்மை தரும். இதில் உள்ள ஃபோலேட் கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. எனவே, கர்ப்பிணி பெண்கள் உணவில் காலிஃபிளவரை சேர்த்து கொள்ளலாம்.

ALSO READ: Rishabh Pant Birthday Special: ஹீரோ ஆஃப் காபா..! எமனுடன் போரிட்டு கிரிக்கெட்டில் வாள் வீசிய ரிஷப் பண்ட்..!

காலிஃபிளவர் இலை:

  • காலிஃபிளவரை விட அதிக புரதம் உள்ளது. இவையும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். காலிஃபிளவரை விட இரண்டு மடங்கு அதிக நார்ச்சத்து, புரதம், பாஸ்பரஸ் மற்றும் மூன்று மடங்கு அதிக தாதுக்கள், இரும்பு மற்றும் கால்சியம் ஆகியவை இதில் உள்ளன.
  • காலிஃபிளவர் இலைகளில் அதிக புரதத்துடன், குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இது சர்க்கரை நோயாளிகள் தாராளமாக உணவில் காலிஃபிளவர் இலைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
  • காலிஃபிளவர் இலைகளில் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இதனை தொடர்ந்து உட்கொள்வதால் சீரம் ரெட்டினோலின் அளவு அதிகரிக்கிறது. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் இரவு குருட்டுத்தன்மையை தடுக்கிறது.
  • காலிஃபிளவர் இலைகளில் இரும்புச்சத்து மிகவும் நல்லது. இரத்த சோகையை நீக்க அதன் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதில் காலிஃபிளவர் இலைகள் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.

காலிஃபிளவர் அதிகளவில் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்:

யூரிக் அமிலம்:

காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வது யூரிக் அமில பிரச்சனையை அதிகரிக்கும். ஏனெனில் காலிஃபிளவரில் உள்ள பியூரின் என்ற கலவை இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்க செய்யும். இதன் காரணமாக மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தொல்லை கொடுக்கும்.

தைராய்டு:

காலிஃபிளவரில் உள்ள கோய்ட்ரோஜன்கள், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கக்கூடிய இயற்கையான கூறுகளை கொண்டுள்ளது. காலிஃபிளவரை அதிகமாக உட்கொள்வது தைராய்டு ஹார்மோன்களை கட்டுப்படுத்தும்.

சிறுநீரக கற்கள்:

காலிஃபிளவரில் அதிக அளவு ஆக்சலேட் உள்ளது. இது சிறுநீரக கற்கள் ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால், காலிஃபிளவரை உட்கொள்வது தவிர்ப்பது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News