Jaggery And Fennel Benefits: வெல்லத்துடன் சோம்பு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! - Tamil News | Health benefits of eating jaggery and Fennel together; health tips in tamil | TV9 Tamil

Jaggery And Fennel Benefits: வெல்லத்துடன் சோம்பு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

Published: 

08 Nov 2024 22:08 PM

Monsoon Prevention: சோம்பு மற்றும் வெல்லம் ஒன்றாக எடுத்துகொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தரும். சோம்பில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வெல்லத்தில் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ளது.

1 / 6சோம்பு

சோம்பு மற்றும் வெல்லம் ஆகிய இரண்டிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த இரண்டு உணவு பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவது, உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும். சோம்பு மற்றும் வெல்லம் உட்கொள்வது உடலுக்கு ஆற்றலை வழங்கி, சோர்வு, சோம்பல் போன்றவற்றை நீக்குகிறது.

2 / 6

சோம்பு மற்றும் வெல்லம் என இரண்டிலும் இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வதன்மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு நன்மை தரும்.

3 / 6

சோம்பில் வைட்டமின் ஏவும், வெல்லத்தில் துத்தநாகமும் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

4 / 6

சோம்பு உணவை ஜீரணிக்கவும், வெல்லம் செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும். எனவே, இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வதால் வாயு, அஜீரணம், வீக்கம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

5 / 6

வெல்லம் மற்றும் சோம்பு சாப்பிடுவது பெண்களுக்கு பல வகைகளில் நன்மை தரும். இது பெண்களுக்கு உடனடி சக்திகளை தருவது மட்டுமின்றி, அதிக வலி, பிடிப்புகள், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

6 / 6

சோம்பு மற்றும் வெல்லம் ஒன்றாக எடுத்துகொள்வதன் மூலம் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வை தரும். சோம்பில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. வெல்லத்தில் வெப்பமயமாதல் விளைவைக் கொண்டுள்ளது.

தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?
சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!