5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tomato Benefits: இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் தக்காளி.. பல நன்மைகளை கொடுக்கும்!

Health Tips: வீட்டு உணவு முதல் வெளியில் உள்ள பர்கர்கள் மற்றும் சாட் வரை அனைத்து உணவுகளிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், நியாசின் மற்றும் பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது. அந்தவகையில் தினமும் தக்காளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Tomato Benefits: இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும் தக்காளி.. பல நன்மைகளை கொடுக்கும்!
தக்காளி (Image: freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 13 Sep 2024 20:13 PM

தக்காளியின் நன்மைகள்: காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இவை ஊட்டச்சத்து பண்புகள் நிறைந்தவை. அதேபோல், ஒவ்வொரு வீட்டிலும் தினமும் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியில் பல நன்மைகள் உண்டு. மற்ற காய்கறிகளுடன் தக்காளியை பயன்படுத்தும்போது இது உணவுக்கு சுவையை மட்டும் தராமல், உடலுக்கு பல சத்துகளையும் வாரி வழங்குகிறது. வீட்டு உணவு முதல் வெளியில் உள்ள பர்கர்கள் மற்றும் சாட் வரை அனைத்து உணவுகளிலும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ, நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், நியாசின் மற்றும் பல சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. இது பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவி செய்கிறது. அந்தவகையில் தினமும் தக்காளி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

ALSO READ: Skin Care With Potato: சருமத்திற்கு பொலிவு தரும் உருளைக்கிழங்கு.. இப்படி பயன்படுத்துங்க முகம் பளபளக்கும்!

தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

தசை வலிமை:

தக்காளியை உட்கொள்வது தசை ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். தக்காளியில் உள்ள பொட்டாசியம் மற்றும் சோடியம் உடலில் எலக்ட்ரோலைட்டுகளாக செயல்படும். தக்காளியை சீரான அளவில் உட்கொள்வது தசைகளை வலுப்படுத்த உதவும்.

எலும்புகள்:

தக்காளியில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் உடலின் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவி செய்யும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தக்காளியில் காணப்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் தக்காளியில் காணப்படுகின்றன. இது நமது செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. செல் தொற்றுக்கு எதிராக பாதுகாக்கவும் உதவுகிறது. எனவே, நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, தினமும் தக்காளி சாப்பிடுங்கள். சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களிலிருந்தும் காக்க தக்காளி உதவுகிறது.

எடை இழப்பு:

உடல் எடை அதிகமானோர் அதை குறைக்க பல வழிகளில் தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடல் எடையை குறைக்க உதவி செய்வது மட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. தக்காளியில் நார்ச்சத்து உள்ளதால் குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தக்காளியை சாலட்டில் சேர்த்து சாப்பிட்டு, சூப், ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

கண்களுக்கு நன்மை:

கண்களுக்கு நன்மை பயக்கும் தக்காளியில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பண்புகள் காரணமாக, தக்காளி உட்கொள்வது கண்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதயம்:

தக்காளியில் உள்ள பண்புகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்யும். தக்காளியில் லைகோபீன் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்க்கு மிகவும் நல்லது. இது இதய நோய் அபாயத்தை 14 சதவீதம் குறைக்கிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கிறது. மேலும் உடலில் HDL கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

நீரிழிவு நோய்:

சர்க்கரை நோயாளிகள் தினமும் 1 தக்காளியை பச்சையாக சாப்பிட வேண்டும். தக்காளியில் உள்ள லைகோபீன் இன்சுலின் செல்களை மேம்படுத்தி, டலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது. தக்காளி உங்கள் உடலின் நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, சர்க்கரை அளவை குறைக்கும்.

ALSO READ: Health Tips: மூளைக்கு புத்துணர்ச்சி தரும் கத்திரிக்காய்.. புற்றுநோய்க்கு சூப்பர் ஃபுட்..!

தக்காளி அதிகளவு எடுத்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள்:

சிறுநீரக கல் பிரச்சனை:

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் தக்காளியை தவிர்ப்பது முற்றிலும் நல்லது. தக்காளியை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் அபாயத்தை அதிகரிக்கும். தக்காளியில் உள்ள கால்சியம் ஆக்சலேட் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனால் கற்களால் அவதிப்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக கற்களின் அறிகுறிகள் உள்ளவர்கள், தக்காளியை சாப்பிட வேண்டாம்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது:

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தக்காளியை அதிகமாக சாப்பிடுவது பிரச்சனையை அதிகரிக்கும். சால்மோனெல்லா என்ற பாக்டீரியா தக்காளியில் காணப்படுகிறது. இது வயிற்றுப்போக்கை அதிகரிக்கிறது.

அமிலத்தன்மை:

தக்காளியில் அதிக அளவு அமிலத்தன்மை உள்ளது. எனவே, தக்காளியை அதிகமாக உட்கொள்வது அமிலத்தன்மை பிரச்சனைகளை ஏற்படுத்தும். சிலருக்கு தக்காளி சாப்பிட்ட பிறகு நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News