Onion Benefits: வெங்காயத்தில் இத்தனை சத்துக்களா? புற்றுநோயை புறம்தள்ளும் வல்லமை!
Health Tips: வெங்காயத்தை உணவில் பயன்படுத்துவதால் அதன் சுவை இரட்டிப்பாகும் என்பது மட்டுமின்றி, உடலுக்கும் இரண்டு மடங்கு நன்மைகளை தருகிறது. வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெங்காயத்தில் வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9), பைரிடாக்சின் (பி6) நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு, இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கின்றன.
வெங்காயத்தின் பயன்கள்: உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் மிகவும் முக்கியமானது வெங்காயம். இது இல்லாமல் சமைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அதனால்தான், வெங்காயத்தின் விலை அதிரடியாக உயரும்போது மக்கள் அச்சமடைகின்றன. அன்றாட சமையல், பிரியாணி, ஸ்நாக்ஸ் என எதைச் செய்தாலும் வெங்காயத்தைப் பயன்படுத்துகிறோம். எனவே இவை அனைத்திலும் வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயத்தை உணவில் பயன்படுத்துவதால் அதன் சுவை இரட்டிப்பாகும் என்பது மட்டுமின்றி, உடலுக்கும் இரண்டு மடங்கு நன்மைகளை தருகிறது. வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. வெங்காயத்தில் வைட்டமின்-பி, ஃபோலேட் (பி9), பைரிடாக்சின் (பி6) நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம், நரம்பு செயல்பாடு, இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்கின்றன. இந்தநிலையில், வெங்காயம் எடுத்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உள்ளது என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Monsoon Bike Tips: மழைக்காலத்தில் உங்கள் பைக்கை பாதுகாப்பது எப்படி? இதை செய்வது மிக முக்கியம்!
உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்:
வெங்காயத்தில் குளிர்ச்சியூட்டும் சத்துகள் நிறைந்துள்ளன. இதை எடுத்து கொள்வதன்மூலம் உடலில் அதிகரிக்கும் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தருகிறது. மேலும், உடலில் உள்ள வெப்பநிலையை சமநிலையில் வைக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரை:
வெங்காயம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. வெங்காயம் உட்கொள்வது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது என்று ஒரு ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், அவை உடலில் இரத்தச் சர்க்கரைக் குறைத்து, நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு நிரப்பியாக செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது:
வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும், இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைகின்றன. கூடுதலாக, இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:
வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை உட்கொள்வது புற்றுநோய்க்கான வாய்ப்புகளை பெருமளவில் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இவற்றை சாப்பிடுபவர்கள் புற்றுநோயில் இருந்து விரைவில் குணமடைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ALSO READ: Cashew Nuts Benefits: தினசரி ஒரு கையளவு முந்திரி போதும்.. உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி தரும்!
ஒரு மாதம் வெங்காயம் சாப்பிடாமல் இருந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..?
ஒரு மாதத்திற்கு வெங்காயத்தை முற்றிலுமாகத் தவிர்த்தால் மலச்சிக்கல் முதல் பார்வைக் குறைபாடு வரை பல பிரச்சனைகள் வரலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஏனெனில் வெங்காயத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு இது அவசியம். இவற்றை தவிர்ப்பதன்மூலம் ஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
- வெங்காயம் சாப்பிடாமல் விட்டால் வைட்டமின்-சி, வைட்டமின்-பி6, ஃபோலேட் குறைபாடு மற்றும் மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் கிடைக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.
- வெங்காயத்தின் பண்புகள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கிறது. இதை சாப்பிடுவதை நிறுத்தினால், இரத்த ஓட்டம் சீராக ஓடுவது தடை படலாம்.
- வெங்காயம் பல் சொத்தை மற்றும் பல் தொற்றைத் தடுக்க உதவுகிறது. வெங்காயத்தை பச்சையாக மென்று தின்றால் வாயில் உள்ள பூச்சிகள், கிருமிகள் அழிந்துவிடும். இதை தவிர்த்தால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படலாம்.