5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: பெண்கள் தலையில் பூ வைப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?

Flower Benefits: நம்முடைய வாழ்க்கையில் பூக்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. பிறப்பு முதல் இறப்பு வரை பூக்களின் பந்தமானது தொடர்ந்து கொண்டே இருக்கும். விதவிதமான வண்ணங்களில், வடிவங்களில், மணங்களில் நாம் பூக்களை பார்த்திருப்போம். இத்தகைய பூக்கள் மருத்துவத்திலும் பயன்படுகிறது.

Health Tips: பெண்கள் தலையில் பூ வைப்பதில் இவ்வளவு விஷயம்  இருக்கா?
கோப்புப் படம் (Photo Credit: Pinterest)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 13 Oct 2024 22:08 PM

பூக்கள் சூடுவதால் கிடைக்கும் நன்மைகள்: இயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள் என்று பல கவிஞர்கள் கவி பாடி சென்றிருக்கிறார்கள். இந்த அழகானவர்களின் தலையில் பூவை வைத்தால் அந்த அழகு இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களின் தலையில் இருக்கும் பூ அவர்களின் முகத்தின் அழகை அதிகரிக்கும். முன் காலத்தில் ஒவ்வொரு பெண்களும் தன் தலையில் பூவை சூடி கொள்வார்கள். ஆனால் தற்பொழுது உள்ள ஃபேஷன் மற்றும் உடல்நல பாதிப்புகளால் தினசரி பூச்சூடுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் தலையில் பூக்களை வைப்பதால் நேர்மறை ஆற்றல் உண்டாகும் என சொல்லப்படுகிறது. மலர்கள் அழகை மட்டுமல்ல நேர்மறை ஆற்றலையும் தருவதாக நம்பப்படுகிறது. பூக்களை சூடுவதால் என்னென்ன ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஃபேஷன் மாறிக்கொண்டே இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் பூக்களின் பங்கு என்பது மிக முக்கியமானது. பிறப்பு முதல் இறப்பு வரை பூக்களின் பந்தமானது தொடர்ந்து கொண்டே இருக்கும். விதவிதமான வண்ணங்களில், வடிவங்களில், மணங்களில் நாம் பூக்களை பார்த்திருப்போம். இத்தகைய பூக்கள் மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் சரும அழகு தொடங்கி புறத்தோற்ற அழகு வரை அனைத்திலும் பூக்கள் பங்கு மகத்தானது. இப்படியான நிலையில் கீழ்காணும் பூக்கள் பற்றியும், அவை தரும் நன்மைகளையும் காணலாம்.

ரோஜா:

ரோஜா காதல் மற்றும் அன்பின் அடையாளமாக உள்ளது. மனம் கொண்ட மல்லிகை பூ போன்ற பூக்களை அணிவதால் சில பெண்களுக்கு தலை வலி ஏற்படும். அத்தை அவர்கள் தினமும் ரோஜாவை சூடிக் கொள்ளலாம். ரோஜாவின் வாசனை தலையில் உள்ள கணத்தை குறைக்கிறது மேலும் தலைசுற்றலை தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மல்லிகை:

இது செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். மல்லிகை பூவை சூடுவதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மல்லிகைப்பூ மணத்தால் பெண்கள் மன அமைதி அடைகிறார்கள். இது மன அழுத்தத்தை குறைக்கிறது என்கிறார்கள். சிலருக்கு இந்த பூக்களால் ஒவ்வாமை ஏற்படும். அதன் அதன் மணம் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தலைச்சுற்றதை ஏற்படுத்தும். அத்தகையவர்கள் இவற்றுக்கு பதிலாக வேறு பூக்களை வைக்கலாம்.

Also Read: Cardamom Benefits: தினமும் இரண்டு ஏலக்காய் சாப்பிடுங்க.. கிடைக்கும் பலன்கள் ஏராளம்..!

சம்பங்கி:

இந்தப் பூக்களின் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருப்பதால் கண் பார்வை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் சோர்வாக இருக்கும் போது சம்பங்கி பூக்களை சூடுவதால் சுறுசுறுப்புக்கான தேவையான ஆற்றலை அதன் மணம்  நிரப்பும் என நம்பப்படுகிறது.

சாமந்தி:

இந்த  பூக்கள் மகிழ்ச்சியின் சின்னங்களாக பார்க்கப்படுகிறது. எனவே  தலையில் இந்த பூவை சூடுவதால்  அல்லது வழிபாட்டில் வைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கையாகும்.

செம்பருத்தி:

சக்தியின் மற்றொரு வடிவமான காளி தேவியை வழிபட பயன்படுத்துவதால், செம்பருத்தி மலர் சக்தியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. செம்பருத்தி பூவை தலையில் வைப்பது நன்மை தரும் என்பது நம்பிக்கை.

பந்து பூக்கள்:

இந்த பூக்கள் பெரும்பாலும் கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. இந்தப் பூவுக்கு வாசனை இல்லை எனினும் இது பார்க்க அழகாக இருக்கும். வாசனை இல்லாததால் தலைவலி‌ வர வாய்ப்பு குறைவு. பெண்களுக்கு இந்த பூவை தலையில் வைத்தால் தலைவலி வராது என்பது ஐதீகம்.

மல்லிகை பூக்கள் மற்றும் ரோஜாக்களை தலையில் வைத்தால் லட்சுமி தேவியின் அருள் கிட்டும் என்பது ஆன்மீகம். லட்சுமி தேவி அருள் பெற்றவர்களுக்கு சகல பாக்கியங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. எனவே பெண்கள் முடிந்தவரை பூக்களை தலையில் சூடுவதை பழக்கப்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றங்கள் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றன.

Also Read: Lip Care: ரோஜா இதழை போன்ற உதடு வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..

(குறிப்பு: இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. உள்ளடக்கங்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. TV9 Tamil  எதற்கும் பொறுப்பாகாது.)

Latest News