Health Tips: மலச்சிக்கலுக்கு மகத்தான மருந்து வெற்றிலை தண்ணீர்! எளிதாக தயாரிப்பது எப்படி..?

Health Benefits: வெற்றிலை சாப்பிட்ட பிறகு, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவும் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களுக்கு லிபிடோவை (பாலியல் ஆசை) அதிகரிக்கச் செய்கிறது. இந்தநிலையில், வெற்றிலையை நேரடியாக சாப்பிடுவதை காட்டிலும், வெற்றிலையை கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது அதிக பலன் தரும். அந்த தண்ணீரை எப்படி குடிப்பது, அந்த தண்ணீர் எந்த மாதிரியான பலன்களை உடலுக்கு தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Health Tips: மலச்சிக்கலுக்கு மகத்தான மருந்து வெற்றிலை தண்ணீர்! எளிதாக தயாரிப்பது எப்படி..?

வெற்றிலை தண்ணீர்

Published: 

26 Aug 2024 12:46 PM

வெற்றிலை தண்ணீரின் பயன்கள்: வெற்றிலை பல ஆரோக்கிய நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது. வெற்றிலையில் வைட்டமின் சி, தியாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின் மற்றும் கால்சியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். வெற்றிலையில் உள்ள் டோபமைன் மற்றும் எபிநெஃப்ரின் போன்ற ஹார்மோன்களின் அளவு மூளையில் அதிகரிக்கிறது. டோபமைன் ஒரு இன்ப ஹார்மோனை நம் உடலுக்கு வழங்குகிறது. மேலும், வெற்றிலை சாப்பிடுவதால் சோகம், மன அழுத்தம், உடலுறவில் ஆர்வமின்மை, மனச்சோர்வு போன்றவற்றை குறைக்கும்.

ALSO READ: Health Tips: உடலுக்கு அற்புத பலன் தரும் திராட்சை தண்ணீர்.. ஒரு மாதம் உட்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

வெற்றிலை சாப்பிட்ட பிறகு, ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவும் அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் ஆண்களுக்கு லிபிடோவை (பாலியல் ஆசை) அதிகரிக்கச் செய்கிறது. இந்தநிலையில், வெற்றிலையை நேரடியாக சாப்பிடுவதை காட்டிலும், வெற்றிலையை கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது அதிக பலன் தரும். அந்த தண்ணீரை எப்படி குடிப்பது, அந்த தண்ணீர் எந்த மாதிரியான பலன்களை உடலுக்கு தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.

வெற்றிலை தண்ணீரின் பயன்கள்:

  • மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த வெற்றிலை தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்கும். மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்க வெற்றிலை உதவியாக இருக்கும். ஒருவேளை வெற்றிலை நிவாரணம் அளிக்கவில்லை என்றால், உங்கள் மலச்சிக்கலுக்கு வேறு காரணங்கள் இருக்கலாம். நீங்கள் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
  • வெற்றிலையில் அழற்சி எதிர்ப்பு தன்மை அதிகமாக உள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சி பிரச்சனையை சரி செய்கிறது.
  • வெற்றிலையை கசக்கி அதன் சாற்றை சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதன்மூலம், இருமல் மற்றும் சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், குழந்தைகளுக்கு மட்டுமின்றி சளி, இருமல், தொண்டை வலி போன்றவற்றை நீக்குகிறது.
  • சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் வெற்றிலை தண்ணீர் உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி நீரிழிவு நோய் தீவிரமடைவதையும் தடுக்கிறது.
  • வெற்றிலை தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவையும் கட்டுப்படுத்துகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது.
  • வெற்றிலை அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • வெற்றிலை வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது. மேலும், இது வாயை புத்துணர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.

ALSO READ: Benefits of Chili: மிளகாய் ஆரோக்கியத்தின் வரப்பிரசாதம்.. எந்தெந்த உடல்நல பிரச்சனைகளை சரிசெய்யும் தெரியுமா?

வெற்றிலை தண்ணீரை எப்படி தயாரிப்பது..?

வெற்றிலை தண்ணீர் தயாரிக்க முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதன் பின், வெற்றிலையை துண்டு துண்டுகளாக வெட்டி அதில் போடவும். அந்த தண்ணீரை 5 முதல் 7 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு குடிக்கவும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!