Mental Health Tips: பிஸியான வாழ்க்கையில் அதிகரிக்கும் மன அழுத்தம்.. எளிதாக போக்க சில வழிகள் இதோ!

lifestyle: மக்கள் தங்கள் படுபிஸியான வாழ்க்கையில் தனக்கென சில நேரம் ஒதுக்குவது கிடையாது. இது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி, மனநலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்த வழிவகுக்கும். தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை என அனைவரும் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுடன் போராடி வருகின்றன. வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

Mental Health Tips: பிஸியான வாழ்க்கையில் அதிகரிக்கும் மன அழுத்தம்.. எளிதாக போக்க சில வழிகள் இதோ!

மன அழுத்தம் (Pic: freepik)

Published: 

22 Aug 2024 10:48 AM

மனநலம்: காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை தினம் தினம் மக்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால், இவர்களது உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மனநலமும் பாதிக்கப்படுகிறது. மக்கள் தங்கள் படுபிஸியான வாழ்க்கையில் தனக்கென சில நேரம் ஒதுக்குவது கிடையாது. இது மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தி, மனநலம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்த வழிவகுக்கும். தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை என அனைவரும் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுடன் போராடி வருகின்றன. வேலை செய்பவர்கள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் எல்லாரும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்கள் தினசரி வாழ்க்கையில் சிலவற்றை மாற்றுவதன் மூலம் உங்கள் மனநலத்தை மேம்படுத்தினால் உங்கள் மனம் ஆரோக்கியமாக மாறலாம். இதன்மூலம், உங்களது உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

ALSO READ: Health Tips: சிறிய விஷயத்தை மறந்துவிடுகிறீர்களா? இதுதான் அம்னீஷியாவா..? என்ன செய்யலாம்?

உடற்பயிற்சி:

உங்கள் மன நலத்தை மேம்படுத்த தினமும் குறைந்தது 20 முதல் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இதை தினமூம் செய்வதன்மூலம், உங்கள் மனநலம் மற்றும் உடல்நலம் என இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும். இதனால், உங்கள் தசைகளும் வலுவடையும், இரவில் நல்ல தூக்கமும் கிடைக்கும். இது உங்கள் மனதை அமைதிக்கலாம்.

படித்தல்:

புத்தகம் உங்கள் மனதை காக்க ஒரு சிறப்பான பொருள். தினமும் உங்களுக்கு 5 நிமிடம் கிடைக்குமானால் அதில் இரண்டு பக்கங்களையாவது படித்து பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்களிடம் புத்தகம் இல்லையென்றால், பத்திரிகைகள், செய்திதாள்கள் போன்றவற்றையும் படிக்கலாம். இன்னும் நேரம் இருந்தால், டைரி எழுதுதல், கவிதை, ஓவியம் போன்ற உங்களுக்கு பிடித்த ஒன்றை செய்யுங்கள்.

ஆரோக்கியமான காலை உணவு:

சிலர் காலை உணவை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். காலை உணவு அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியது. இது உங்களுக்கு ஆற்றலை தருவது மட்டுமின்றி, உங்கள் மனநிலையை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. இதன் காரணமாக, நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

தியானம்:

தியானம் மற்றும் யோகா போன்றவற்றை பெரும்பாலான மக்கள் இருப்பதையே மறந்துவிட்டார்கள். தினமும் காலை தியானம் அல்லது யோகாவை 15 முதல் 20 நினிடங்கள் செய்து பழகி கொள்ளுங்கள். புதிதாக தியானம் செய்வோர் சென்றால் 5 நிமிடமே போதுமானது. அதன்பின், நிமிடங்களை அதிகரிக்க தொடங்கி கொள்ளுங்கள். இது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

ALSO READ: Health Tips: காய்ச்சலின்போது எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது தெரியுமா..? இந்த தவறுகளை செய்யாதீங்க!

பிறரிடம் பேசுங்கள்:

உங்களுக்கு எப்போதாவது மனசு கஷ்டமாக இருந்தாலோ, தவறுதலாக தோன்றினாலோ அதை குறித்து, உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கே வைத்து கொண்டிருக்கும்போது, மேலும் மேலும் அழுத்தத்தை அதிகரிக்க செய்யும். உங்களுக்குள் ஏதாவது தவறாக தோன்றினால் அதை கண்டிப்பாக உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!