Fridge Tips : மீதமான உணவை ஃப்ரிட்ஜில் வைக்க பிளாஸ்டிக் டப்பா யூஸ் பன்றீங்களா? உஷார்.. இவ்வளவு சிக்கல் இருக்கு!

Plastic Container : மீதமுள்ள உணவை குளிர்சாதன பெட்டியில் எந்த பிளாஸ்டிக் பாத்திரத்திலும், பிளாஸ்டிக் டப்பாகளிலும் வைக்கக்கூடாது. அதேபோல், இந்த வகை பாத்திரங்களில் உணவை சமைத்தவுடனும், சூடுபடுத்தியவுடனும், மீதமான பிறகு குளிர்சாதன பெட்டியிலும் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

Fridge Tips : மீதமான உணவை ஃப்ரிட்ஜில் வைக்க பிளாஸ்டிக் டப்பா யூஸ் பன்றீங்களா? உஷார்.. இவ்வளவு சிக்கல் இருக்கு!

Source : Freepik

Updated On: 

17 Jul 2024 18:51 PM

பிளாஸ்டிக் பாத்திரங்கள்: இந்த உலகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது இது உணவகங்கள் முதல் கழிப்பறை வரை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு காலத்தில் வீடுகளில் உள்ள சமையலறையில் பாத்திரங்களால் நிரம்பி இருந்தது. தற்போது அதிலும் பிளாஸ்டிக்கின் ஆதிக்கமே அதிகளவு இருந்து வருகிறது. இந்தநிலையில், வீடுகள் முதல் பெரிய பெரிய உணவகங்கள் வரை ஒரு சிலர் எஞ்சிய உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரங்களில் சேமித்து வைத்து கொள்கிறார்கள். அவ்வபோது, அந்த உணவுகளை எடுத்து பயன்படுத்தியும் கொள்கிறார்கள். பிளாஸ்டிக் டப்பாக்கள் முடிந்தவரை சமையலறையில் இருந்து விலக்கி வைத்துகொள்வதே நல்லது. ஏனென்றால், இவை ஆரோக்கியத்தை கெடுப்பது மட்டுமின்றி மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்தநிலையில், எஞ்சிய உணவை பிளாஸ்டிக் டப்பாகளில் வைத்து ஏன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க கூடாது..? அதற்கு பதிலாக எதை பயன்படுத்தலாம் என்று இங்கே பார்ப்போம்.

ALSO READ: Cholesterol : கொலஸ்ட்ரால் சர்ரென குறையும்.. சூப்பரான 7 உணவுகள்

இன்றைய காலக்கட்டத்தில் எஞ்சியிருக்கும் உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பது ஒரு நல்ல வழி என்று பலர் கருதுகின்றனர். இதை தினமும் பலரும் செய்கின்றனர். ஆனால் பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் (Plastic Container Side Effects) என்றும், முடிந்தவரை அதைத் தவிர்க்கவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எஞ்சிய உணவை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கலாமா?

நிபுணர்களின் கூற்றுப்படி, மீதமுள்ள உணவை குளிர்சாதன பெட்டியில் எந்த பிளாஸ்டிக் பாத்திரத்திலும், பிளாஸ்டிக் டப்பாகளிலும் வைக்கக்கூடாது. அதேபோல், இந்த வகை பாத்திரங்களில் உணவை சமைத்தவுடனும், சூடுபடுத்தியவுடனும், மீதமான பிறகு குளிர்சாதன பெட்டியிலும் வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே அதை தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு மாற்றாக என்ன செய்யலாம்..?

பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதைத் தெரிந்தும் மக்கள் அதைப் பயன்படுத்த விரும்பினால், அவர்கள் குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பாத்திரங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அதன்படி, பாலிஎதிலீன் டெரெப்தாலேட் பிளாஸ்டிக் டப்பாக்களின் பயன்பாடு மற்ற பிளாஸ்டிக் பொருட்களை விட சிறந்தது. இவை பொதுவான பிளாஸ்டிக் பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை.

ALSO READ: Mathi Fish: நினைவாற்றலை அதிகரிக்கும் மத்தி மீன்.. எத்தனை நாளைக்கு ஒருமுறை சாப்பிடலாம்?

பிளாஸ்டிக் பாத்திரங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா..?

ஒரு சில காலம் பயன்படுத்திய பிறகு பிளாஸ்டிக் பாத்திரங்கள் மாற்றப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றன. ஏனெனில் அவற்றைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவதாலும், கழுவுவதாலும் இவற்றின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் மற்றும் ரசாயனங்கள் உணவோடு உடலுக்குச் சென்று உணவை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் கெடுக்கும். எனவே, இந்த பாத்திரங்களையும் அவ்வபோது மாற்ற வேண்டும்.

குளிர்சாதன பெட்டியில் கண்ணாடி பாத்திரங்கள் நீண்ட காலமாக உணவு சேமிப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கண்ணாடி கொள்கலன்கள் குறைந்த வெப்பநிலையை தாங்கக்கூடிய உயர்தர கண்ணாடியால் செய்யப்பட்டால், குளிர்சாதன பெட்டியில் உணவை சேமிப்பதற்கு பாதுகாப்பானது. அடுத்த முறை குளிர்சாதனப்பெட்டியில் உங்கள் உணவைச் சேமிப்பதற்கான வழியைத் தேடும் போது, கண்ணாடி பாத்திரத்தை மறக்காமல் தேர்வு செய்யுங்கள்.

ABC ஜூஸில் இவ்வளவு பிரச்னைகள் உள்ளதா?
பாதாம் பருப்பை எவ்வாறு உட்கொள்வது சரியானது?
தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ