5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Turmeric: மஞ்சள் மகிமை.. வீட்டு கிச்சனில் இருக்கும் சூப்பர் மருந்து.. இவ்வளவு விஷயம் இருக்கா?

Benefits of Turmeric: வயது முதிர்வு ஏற்படும்போது இருதயம், தசைகள், சிறுநீரகம், தோல் மற்றும் வயிறு உள்ளிட்ட உறுப்புகள் வீக் ஆகும். இதற்கு காரணம் free radicals நம் உடலை ஆக்கிரமிப்பதால்தான். மஞ்சள் எடுத்துகொள்வதன் மூலம் free radicals-ன் செயல்பாடுகளை குறைக்கிறது. மேலும், ஆக்ஸிஜனேற்றதையும் சரி செய்கிறது.

Turmeric: மஞ்சள் மகிமை.. வீட்டு கிச்சனில் இருக்கும் சூப்பர் மருந்து.. இவ்வளவு விஷயம் இருக்கா?
Image Credit source: TV9 Digital
mukesh-kannan
Mukesh Kannan | Published: 17 Jul 2024 19:03 PM

மஞ்சளின் பயன்கள்: ஏழு வண்ணங்களில் மஞ்சள் நிறத்தைதான் மங்களம் என்று சொல்கிறோம். மஞ்சளின் சிறப்பு அம்சமே நமது உடலில் உட்புறமாகவும், வெளிபுறமாகவும் பயன்படுத்தி கொள்ளலாம். மஞ்சள் பூசி குளிப்பது முதல் மஞ்சள் போட்டு சாம்பாரும் வைப்போம். இதன்மூலமே தெரியும் மஞ்சள் எப்படியான அபூர்வமான பொருள் என்று. அக்காலம் தொன்றுதொட்டு இக்காலம் வரை பெண்கள் ஏன் தாலி கயிற்றில் மஞ்சளை பூசிக்கொண்டோ அல்லது மஞ்சள் கிழங்கை கட்டி கொள்கிறார்கள் என்று தெரியுமா..? இந்த மஞ்சள் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தடுக்கும் என்று முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து மஞ்சளானது மங்களகரமானது மட்டுமல்ல. மருத்துவ தன்மை கொண்டது என்று புரிந்துகொள்ள வேண்டும். இப்படி எத்தகைய மருத்துவ தன்மையை மஞ்சள் கொண்டு இருக்கிறது என்று இங்கே பார்ப்போம்.

ALSO READ: Dhammika Niroshana: இலங்கை முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை.. அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

மஞ்சளின் மருத்துவ குணத்திற்கு காரணம் குர்குமின் என்ற வேதிப்பொருள் இருப்பதுதான். பொதுவாக, 100 கிராம் மஞ்சள் எடுத்துகொண்டால் அதில் 3 கிராம் குர்குமின் இருக்கும்.

வீக்க அணுக்களை சரிசெய்யும்:

சிறு வயதில் நாம் விளையாடும்போதே அல்லது சைக்கிஸ் ஓட்டி கீழே விழும்போதோ அடிப்பட்டால் நம் வீட்டில் உள்ளவர்கள் முதலில் மஞ்சளை எடுத்தே பூசுவார்கள். இதற்கு காரணம், கையிலோ, கால்களிலோ இரத்தம் உறைதலுக்கும், வீக்கம் ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த மஞ்சள் சரி செய்கிறது.

ஆக்ஸிஜனேற்றதை மேம்படுத்தும்:

வயது முதிர்வு ஏற்படும்போது இருதயம், தசைகள், சிறுநீரகம், தோல் மற்றும் வயிறு உள்ளிட்ட உறுப்புகள் வீக் ஆகும். இதற்கு காரணம் free radicals நம் உடலை ஆக்கிரமிப்பதால்தான். மஞ்சள் எடுத்துகொள்வதன் மூலம் free radicals-ன் செயல்பாடுகளை குறைக்கிறது. மேலும், ஆக்ஸிஜனேற்றதையும் சரி செய்கிறது. மேலும், மஞ்சள் மனழுத்தம், மனச்சோர்வு, மூட்டுவலி பிரச்சனைகளை சரி செய்கிறது.

ALSO READ: Fridge Tips : மீதமான உணவை ஃப்ரிட்ஜில் வைக்க பிளாஸ்டிக் டப்பா யூஸ் பன்றீங்களா? உஷார்.. இவ்வளவு சிக்கல் இருக்கு!

மேலும் சில..

  • மஞ்சளை உணவில் நாள்தோறும் எடுத்து கொள்பவர்களுக்கு இதய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு என்றும், கொழுப்பை குறைக்கவும், தமனிகள் குறுவதை தடுக்கவும் பயன்படுகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • மஞ்சளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பெருங்குடல் அழற்சி பிரச்சனையை குணமாக்கும்.
  • மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலையில் நீர்கோர்த்தல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.
  • மஞ்சள் கட்டைகள் கிடைத்தால் அதனை இடித்து பொடி பொடியாக்கி பாலில் ஊறவைத்து தோல் நோய்கள் இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சரியாகும்.
  • உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து பூசி உடல் முழுவதும் பூசி வந்தால் உடல் சூடு குறையும்.
  • உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சளை எடுத்துகொள்வது சிறந்தது. இது கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைக்கும்.
  • வயிற்றில் பூச்சித் தொல்லை, வாயு, மலச்சிக்கல் மற்றும் பிடிப்பு ஆகியவற்றிற்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
  • மஞ்சள் பல்வேறு செரிமான பிரச்சினைகளை சரி செய்வதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  • கருப்பை, வயிறு மற்றும் பிற வகையான புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை வராமல் தடுப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Latest News