Health Tips: உடலுக்கு அற்புத பலன் தரும் திராட்சை தண்ணீர்.. ஒரு மாதம் உட்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

Raisin water: திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரை தினமும் தொடர்ந்து குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். மேலும், அதிலுள்ள திராட்சையை சாப்பிடுவது உடலுக்கு இரட்டிப்பு பலனை தருகிறது. பெரும்பாலான மக்கள் ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறார்கள். இந்த தண்ணீர் ஆரோக்கியத்திற்கு அமிர்தமாக மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

Health Tips: உடலுக்கு அற்புத பலன் தரும் திராட்சை தண்ணீர்.. ஒரு மாதம் உட்கொண்டால் இவ்வளவு நன்மைகளா?

உலர் திராட்சை தண்ணீர்

Published: 

25 Aug 2024 13:56 PM

திராட்சை தண்ணீரின் பயன்கள்: மற்ற உலர் பழங்களை போலவே திராட்சையும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இது மற்ற ட்ரை ஃப்ரூட்களை விட விலையும் குறைவு, அதிக பலனும் தரக்கூடியது. திராட்சையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. எனவே தினமும் உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரை தினமும் தொடர்ந்து குடித்தால் ஆரோக்கியம் மேம்படும். மேலும், அதிலுள்ள திராட்சையை சாப்பிடுவது உடலுக்கு இரட்டிப்பு பலனை தருகிறது. பெரும்பாலான மக்கள் ஊறவைத்த தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறார்கள். இந்த தண்ணீர் ஆரோக்கியத்திற்கு அமிர்தமாக மாறும் என்பது உங்களுக்கு தெரியுமா..? உலர் திராட்சை தண்ணீர் நம் உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் மிகவும் நன்மை பயக்கும். எனவே, இந்த செய்தியில் ஒரு மாதம் திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Health Tips: ஓடிய பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

நோய் எதிர்ப்பு சக்தி:

ஊறவைத்த திராட்சை தண்ணீர் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. திராட்சை தண்ணீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.

எடை இழப்பு:

நீங்கள் உடல் பருமனை குறைக்க விரும்பினால், திராட்சை ஊறவைத்த தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம். இதை தினமும் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள கூடுதல் கலோரிகள் குறைய தொடங்கும். மேலும், இந்த நீரில் இயற்கையாகவே குளுக்கோஸ் உள்ளது. இது உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

தூக்கம்:

பெரும்பாலான மக்கள் தற்போதைய நவீன காலத்தில் மன உளைச்சல் மற்றும் வேலை பளு காரணமாக ஒழுங்காக தூங்குவது கிடையாது. இதனால், இவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட திராட்சை தண்ணீர் சிறந்த தீர்வாகும். திராட்சையில் மெலடோனின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது உங்களுக்கு விரைவான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும்.

நச்சுகளை வெளியேற்றும்:

திராட்சை தண்ணீர் குடிப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, கல்லீரல் சரியாக செய்யாமல் போகும். இப்படியான சூழ்நிலையில், திராட்சை தண்ணீரை எடுத்துக்கொள்வதன்மூலம், இது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற உதவுகிறது.

வயிற்றுப் பிரச்சனையை சரிசெய்யும்:

திராட்சை தண்ணீரில் இரும்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகமாக உள்ளது. அஜீரணம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த தண்ணீரை குடிப்பதால் உங்கள் வயிற்றில் உள்ள அமிலம் சீராகும். நார்ச்சத்து நிறைந்த திராட்சை நீரைக் குடிப்பதால், மலச்சிக்கலைப் போக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ALSO READ: Bone Health Tips: சிறுவயதிலேயே எலும்பு பலவீன பிரச்சனையா..? இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!

இதய ஆரோக்கியம்:

திராட்சையில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. தினமும் திராட்சை தண்ணீர் குடிப்பதன்மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!