5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: ஓடிய பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!

Running: உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஓடுதல் என்பது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. உது உடல் எடையை குறைப்பதோடு, எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் பலர் பெரும்பாலான நேரத்தை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்து கழிக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், உங்களுக்கு ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லையென்றால், காலையில் வேகமாக நடப்பது அல்லது ஓடுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Health Tips: ஓடிய பிறகு இந்த தவறுகளை செய்யாதீங்க.. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்!
ரன்னிங் (Image Credit source: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Aug 2024 11:44 AM

ஓடுதல்: இன்றைய காலக்கட்டத்தில் மக்கள் தங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அதன் அடிப்படையில் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ஓடுதல் என்பது மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. உது உடல் எடையை குறைப்பதோடு, எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்த பெரிதும் உதவுகிறது. இன்றைய சூழ்நிலையில் பலர் பெரும்பாலான நேரத்தை ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்து கழிக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், உங்களுக்கு ஜிம்மிற்கு செல்ல நேரம் இல்லையென்றால், காலையில் வேகமாக நடப்பது அல்லது ஓடுவது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், சிலர் ஓடிய பிறகு ஒரு குறிப்பிட்ட விஷயங்களை தவறுதலாக செய்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இந்தநிலையில், ஓடிய பிறகு நீங்கள் செய்யக்கூடாத தவறுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: On This day: 53 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள்! இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றி.. கலக்கிய இந்திய அணி!

ஓடிய பிறகு உட்காராதீர்கள்:

காலை எழுந்தவுடன் நீண்ட நேரம் ஓடிய பிறகு மக்கள் சோர்வாக உணர தொடங்குகின்றனர். இதன் காரணமாக, மக்கள் உடனடியாக உட்கார்ந்தும் அல்லது படுக்கையில் படுத்துவிடுகிறார்கள். இப்படி செய்வதை முதலில் தவிர்க்க வேண்டும். ஓடியவுடன் உடனடியாக ஓய்வெடுக்கவோ, தூங்கவோ கூடாது. ஓடுதல் என்பது ஒரு வகையான அதி தீவிர உடற்பயிற்சியாகும். எனவே, ஓடிய பிறகு உடலில் இரத்த ஓட்டம் மற்றும் இதய துடிப்பு இயல்பாக்குவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். நீங்கள் உடனடியாக உர்காரும்போதோ அல்லது படுக்கும்போதோ தலைச்சுற்றல் வரலாம். எனவே, ஓடியபின் சிறிதுநேரம் நடக்கலாம் அல்லது லேசான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

காலை உணவு முக்கியம்:

மக்கள் ஓடிய பிறகு வெறும் தண்ணீர் மற்றும் ஜூஸ் ஏதாவது குடித்துவிட்டு வேலைக்கு சென்று விடுகிறார்கள். இதையும் தவிர்க்க வேண்டியது முக்கியமானது. ஓடும்போதும் மற்ற பணிகளில் ஈடுபடும்போதும் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் முக்கியம். அதேபோல், ஓடிய பிறகும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். வொர்க் அவுட்டிற்கு பிந்தையை உணவு உடற்பயிற்சிக்கு பிறகு உங்கள் உடலை மீண்டும் ஆற்றல் கொடுப்பது அவசியம். எனவே, ஓடிய பிறகு அதிகமாக புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

தண்ணீர்:

ஓடிய பிறகு உடலுக்கு ஆற்றல் மற்றும் நீரேற்றம் என இரண்டும் தேவை. எனவே, ஓடுவதற்கு முன்னும் பின்னும் போதுமான அளவிலான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். இருப்பினும், ஓடிய பிறகு உடனடியாக தண்ணீரை குடிக்காதீர்கள். இது ஆபத்தை ஏற்படுத்தலாம். குறைந்தது அரை மணிநேரத்திற்கு பிறகு தண்ணீர் குடிப்பது நல்லது. இது தவிர குளுக்கோஸ், இளநீர் போன்ற எலக்ட்ரோலைட் பானங்களை எடுத்து கொள்ளலாம். இது உங்கள் தசைகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை விரைவாக வழங்கும்.

ALSO READ: Onion Benefits: வெங்காயத்தில் இத்தனை சத்துக்களா? புற்றுநோயை புறம்தள்ளும் வல்லமை!

சிறிது சிறிதாக உடற்பயிற்சியை அதிகரிக்க செய்யுங்கள்:

திடீரென ஓடும்போதும், அதிவேகமாக இயக்கும்போது மூட்டுகளை கவனித்துக்கொள்வது முக்கியம். ஒரு சிறிய தவறு அல்லது கவனக்குறைவு எலும்பு முறிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, முழங்கால், கணுக்கால் மற்றும் கணுக்கால் வலி பிரச்சனை அதிகரிக்கலாம். ஓடுவதற்கு முன்பு, சிறிது நேரம் வார்ம் அப் செய்து ஓடுங்கள்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News