Benefits of kohlrabi: மழை சீசனில் கிடைத்த மகத்துவம் நூக்கல்.. பக்கவாதம் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் அதிசய மருந்து!

Health Tips: நூக்கலில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க செய்கிறது. நீங்கள் நூக்கல் எடுத்துக்கொண்டால், உங்கள் உடலுக்கு குளுக்கோஸ், இரும்பு, மெக்னீசியம் ஆகியவற்றுடன் பொட்டாசியம் மற்றும் கால்சியம் சம அளவு கிடைக்கும். இது குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேகமாக வளர்கின்றனர். ஐரோக்கிய நாடுகளில் பிரபலாமான இந்த நூக்கல் காய்கறி தற்போது இந்தியாவின் காய்கறியாகவும் உருவெடுத்துள்ளது.

Benefits of kohlrabi: மழை சீசனில் கிடைத்த மகத்துவம் நூக்கல்.. பக்கவாதம் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் அதிசய மருந்து!

நூக்கல்

Published: 

19 Sep 2024 13:51 PM

இந்தியாவில் வெயில் காலம் குறைந்து படிப்படியாக மழைக்காலம் அடியெடுத்து வைத்து வருகிறது. அதேபோல், புரட்டாசி மாசம் என்பதால் சைவ உணவை எடுத்துக்கொள்ளும் நபர்களுக்கு இந்த பருவம் சொர்க்கம் என்றே சொல்லலாம். இதற்கு காரணம், இந்த பருவத்தில்தான் அதிகபடியான கீரைகள், இலை காய்கறிகள் அதிகம் வளரும். அந்தவகையில் நூல்கோல் என்று அழைக்கப்படும் நூக்கல் இந்த பருவத்தில் அதிகம் காணப்படும் ஒரு காய்கறி வகையாகும். நூக்கல் என்பது முட்டைக்கோஸ் குடும்பத்தின் ஒரு பகுதியாகும். இதில், புரொட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. அதேசமயம் இதில் கொழுப்பு என்பது கிடையாது.

நூக்கலில் அதிக அளவு வைட்டமின்கள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிக்க செய்கிறது. நீங்கள் நூக்கல் எடுத்துக்கொண்டால், உங்கள் உடலுக்கு குளுக்கோஸ், இரும்பு, மெக்னீசியம் ஆகியவற்றுடன் பொட்டாசியம் மற்றும் கால்சியம் சம அளவு கிடைக்கும். இது குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம், குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேகமாக வளர்கின்றனர். ஐரோக்கிய நாடுகளில் பிரபலாமான இந்த நூக்கல் காய்கறி தற்போது இந்தியாவின் காய்கறியாகவும் உருவெடுத்துள்ளது. அந்தவகையில், இன்று நூக்கல் சாப்பிடுவதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Exclusive: சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்..? என்ன சாப்பிடக்கூடாது..? டாக்டர் அட்வைஸ்!

செரிமானம்:

பல காய்கறிகளை போலவே நூக்கலிலும் செரிமான அமைப்பை ஆரோக்கியமான வைக்கும் திறனை பெற்றுள்ளது. இதில், அதிகளவிலான நல்ல நார்ச்சத்து உள்ளது. இது வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும் சூப்பர் மருந்தாக செயல்படும். எனவே குடல் பராமரிப்பு, மலச்சிக்கல் பிரச்சனை மற்றும் வயிறு வீக்கம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த நூக்கலை சாப்பிடலாம்.

எடையை குறைக்கும்:

ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க மிகவும் பயனுள்ள காய்கறிகளில் ஒன்றாக நூக்கல் உள்ளது. இதில் கலோரிகள் மிக குறைவு, அதே நேரத்தில் நன்மை பயக்கும் சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில் காணப்படும் நார்ச்சத்து உங்கள் உடலில் கொழுப்பை சேரவிடாமல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும். நூக்கலை நீங்கள் காலை உணவு, மதிய உணவு அல்லது இரவு உணவு என எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதை எடுத்துக்கொள்ள கால நேரம் கிடையாது.

உடலுக்கு சுறுசுறுப்பு:

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. அந்த வகையில், நூக்கலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவி செய்யும். உங்களுக்கு நடைப்பயிற்சியின்போது அல்லது ஓடும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் என்றால், இதை சரிசெய்ய நூக்கலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:

நூக்கலில் உள்ள பொட்டாசியம் நம் உடலில் ஒரு வாசோடைலேட்டாராக செயல்படுகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் தமனிகளை ஆரோக்கியமான வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவி செய்கிறது. மேலும், நூக்கலில் உள்ள் பொட்டாசியம் மற்றும் சோடியம் செல்களுக்கு இடையே உள்ள திரவத்தை சீராக்கும்.

இரத்த சோகையை குணப்படுத்தும்:

நூக்கலில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதை போன்ற நல்ல அளவிலான இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பொதுவாக, உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க இரும்புச்சத்து அவசியம். இதுதான் உடலில் இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கும். உங்கள் உடலில் இரத்த சோகை ஏற்பட்டால் பலவீனம், சோர்வு, தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். நூக்கலில் காணப்படும் கால்சியம், உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. எனவே, நூக்கல் நோயெதிர்ப்பு மற்றும் இருதய அமைப்புகளுக்கு ஒரு சிறந்த ஊக்கியாக செயல்படுகிறது.

எலும்பு வலிமை:

சிறுவயது முதல் நமது எலும்புகளும் வளர்ச்சி பெறும். நாம் குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும்போது நமது எலும்புகள் பலவீனமடையும். நூக்கலை உட்கொள்வதன் மூலம் உங்கள் பலவீனமான எலும்புகளை வலுப்படுத்தலாம். இதில் உள்ள கால்சியம் மற்றும் மாங்கனீசு உங்கள் எலும்புகள் வளர்ச்சியடைவதற்கு வலுவடைவதற்கும் உதவும்.

கண் ஆரோக்கியம்:

நூக்கல் பீட்டா கரோட்டின் சிறந்த மூலமாகும். இது உடலின் ஒரு ஆக்ஸிஜனேற்ற கலவை போல் செயல்படுகிறது. இது கண்களை கூர்மையாக்கவும், கண்புரை பிரச்சனையை குறைக்கவும் உதவி செய்யும். மேலும், நூக்கல் கண்களில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்க உதவி செய்கிறது.

ALSO READ: Egg Veg or Nonveg: முட்டை சைவமா? அசைவமா? புரட்டாசி மாதம் சாப்பிடலாமா..?

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்:

நூக்கல் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதில் ஐசோதியோசயனேட்ஸ், சல்போபன் மற்றும் இண்டோல் – 3 கார்பினோல் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இது புற்றுநோயை எதிர்த்து போராட உதவு செய்கிறது. எந்த வகையான தொற்று அல்லது பாக்டீரியாவிலிருந்தும் பாதுகாக்கிறது.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்