Health Tips: உங்களுக்குள் உடலுறவு இல்லையா..? இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்!

Health Tips: உங்கள் பார்ட்னரிடம் உடலுறவு கொள்ளும்போது, அவர்களது ஆசைகள், எல்லைகள் மற்றும் எந்தவொரு கவலையையும் வெளிப்படையாக உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். இருப்பினும், உடலுறவு நீண்ட நாட்களாக கணவன் - மனைவி இடையே இல்லையென்றால், இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்றால் உங்கள் நம்ப முடியுமா..?

Health Tips: உங்களுக்குள் உடலுறவு இல்லையா..? இந்த பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்!

கோப்பு புகைப்படம்

Published: 

19 Aug 2024 20:24 PM

உடலுறவு: உடலுறவில் ஈடுபடுவது உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவது மட்டுமின்றி, மனத்திற்கும் புத்துணர்ச்சியை தருகிறது. தினமும் உடலுறவில் ஈடுபட முடியவில்லை என்றாலும் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உடலுறவு கொள்வது உங்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். உங்கள் பார்ட்னரிடம் உடலுறவு கொள்ளும்போது, அவர்களது ஆசைகள், எல்லைகள் மற்றும் எந்தவொரு கவலையையும் வெளிப்படையாக உங்களிடம் வெளிப்படுத்துவார்கள். இருப்பினும், உடலுறவு நீண்ட நாட்களாக கணவன் – மனைவி இடையே இல்லையென்றால், இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்றால் உங்கள் நம்ப முடியுமா..? இந்த செய்தி தொகுப்பில் உடலுறவு கொள்ளாததால் ஏற்படும் பிரச்சனைகள் என்னவென்று இங்கே பார்ப்போம்.

ALSO READ: Health Tips: காய்ச்சலின்போது எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது தெரியுமா..? இந்த தவறுகளை செய்யாதீங்க!

மன அழுத்தம் அதிகரிக்கும்:

உடலுறவு என்பதும் ஒரு வகையான உடற்பயிற்சிதான். ஒவ்வொரு நாளும் உங்கள் பார்ட்னரிடம் உடல் ரீதியாக தொடர்பில் இருக்கும்போது, நீங்கள் தினம் தினம் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். நீங்கள் உடலுறவில் நீண்ட நாட்களாக ஈடுபடாதபோது, மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக, உங்களுக்குள் சிறிய விஷயத்திற்கு கூட பெரிய அளவிலான சண்டைகளாக மாரும். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கும்:

நீங்கள் பார்ட்னரிடம் உடலுறவு கொள்ளும் போதெல்லாம், இம்யூனோகுளோபுலின் என்ற ரசாயனம் உங்கள் உடலில் அதிகரிக்கும். இது, உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, பல தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சூழலில், நீங்கள் நீண்ட காலமாக உடலுறவு கொள்ளவில்லை என்றால், இது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமடைய செய்கிறது.

பிறப்புறுப்புகளில் நோய்வாய்ப்படலாம்:

உடலுறவின்போது, இருவரின் பிறப்புறுப்புகளிலும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உங்களுக்குள் உடலுறவு குறையும்போது, இரத்த ஓட்டம் தடைப்படும். உங்கள் பிறப்புறுப்புகளில் பால்வினை நோய்கள் ஏற்படலாம்.

மூளை நன்றாக வேலை செய்யும்:

அடிக்கடி உடலுறவு மூலம் மூளையில் நல்ல ஹார்மோன்கள் உருவாகும் என ஆய்வில் கூறப்படுகிறது. இதன் காரணமாக மன அழுத்தத்தை குறைகிறது. உடலுறவு உங்களுக்குள் குறையும்போது, கோபம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளால் உங்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பதை தடுக்கும்.

ALSO READ: Women’s Health: கருப்பை நீர்க்கட்டி பிரச்சனையா..? இந்த விதைகள் நல்ல தீர்வை தரும்..!

சருமம் பாதுகாப்பாக இருக்கும்:

நீங்கள் உடலுறவு தவிர்க்கும்போது, உங்கள் தோல் சுருக்கங்கள் ஏற்படலாம். நீங்கள் உடலுறவு செய்வதால் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, உங்களுக்கு ஒரு சில நல்ல ஹார்மோன்கள் உற்பத்தியாகி தோல் இளமையுடனும் பளபளப்பாக காட்சியளிக்கும். நீங்கள் திடீரென்று உடலுறவு கொள்வதை நிறுத்தினால், உங்கள் தோல் கரடுமுரடானதாக மாறும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

தலையணை உறையை மாற்றாமல் இருந்தால் என்னாகும்?
30 வயதுக்கு பிறகும் முகத்தில் முகப்பரு எதனால் ஏற்படுகிறது..?
பெற்றோரிடம் குழந்தைகள் ரகசியமாக தெரிந்து கொள்ளும் விஷயங்கள்!
நீங்கள் வேலை பார்க்கும் இடம் சரியானதா? - அறிய டிப்ஸ் இதோ!