Health Tips: தம்பதிக்குள் உடல் நெருக்கம் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க!

Physical Intimacy: உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் போன்று, பாலியல் ஆரோக்கியமும் ஒரு மனிதனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சில தம்பதிகள் திருமணம் ஆகி சிறிது காலம் மட்டுமே, ஒன்றாக இருப்பார்கள். அதன்பின், தனித்தனியே பிரிந்து விடுகிறார்கள். இதற்கு பாலியல் பிரச்சனைகளும் ஒரு முக்கிய காரணம். இதற்கு நீங்கள் சில ஆயுர்வேத சிகிச்சையை முயற்சி செய்யலாம், இது உங்கள் லிபிடோ என்று அழைக்கப்படும் பாலியல் ஆசையை அதிகரிக்க செய்யும்.

Health Tips: தம்பதிக்குள் உடல் நெருக்கம் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க!

பாலியல் ஆரோக்கியம் (Image: Freepik)

Published: 

05 Sep 2024 20:17 PM

பாலியல் ஆரோக்கியம்: தம்பதிகளிடையே பாலியல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் போன்று, பாலியல் ஆரோக்கியமும் ஒரு மனிதனுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சில தம்பதிகள் திருமணம் ஆகி சிறிது காலம் மட்டுமே, ஒன்றாக இருப்பார்கள். அதன்பின், தனித்தனியே பிரிந்து விடுகிறார்கள். இதற்கு பாலியல் பிரச்சனைகளும் ஒரு முக்கிய காரணம். இதற்கு நீங்கள் சில ஆயுர்வேத சிகிச்சையை முயற்சி செய்யலாம், இது உங்கள் லிபிடோ என்று அழைக்கப்படும் பாலியல் ஆசையை அதிகரிக்க செய்யும். அந்தவகையில் இன்று பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சில உணவுகள் இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Health tips: ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே!

பேரிச்சம்பழம்:

பேரிச்சம்பழம் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. இவை உங்கள் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிக நன்மை தரும். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, லிபிடோவை அதிகரிக்க வேலை செய்கின்றன.

மாதுளை:

மாதுளையில் பாலிபினால்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. எனவே, தினமும் மாதுளை அல்லது மாதுளை ஜூஸாக எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

முருங்கைக்காய்:

நாம் சிறு வயது முதலே முருங்கைக்காயை பற்றி பல விஷயங்களை கேள்வி பட்டு இருப்போம். இது பாலியல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கைக்காயில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் பல சத்துக்கள் உள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான ஹார்மோன்களின் உற்பத்திக்கு இது மிகவும் முக்கியமானது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, லிபிடோவையும் அதிகரிக்க செய்கிறது.

ALSO READ: Health Tips: பாலியல் ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!

பூண்டு:

பெண்கள் கருவுறுதலுக்கு பூண்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள அல்லிசின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, பாலியல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.

பார்லி சூப்:

பார்லி சூப்பில் பல வகையான வைட்டமின்கள் உள்ளன. இதில், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன. பார்லியில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளும், நார்ச்சத்துகளும் உங்கள் பாலியல் உணர்வுகளை அதிகரிக்க செய்யும்.

அத்திப்பழம்:

அத்திப்பழம் விறைப்புச் செயலிழப்பைக் குணப்படுத்தும் மருந்தாக அறியப்படுகிறது. இது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அத்திப்பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் கருவுறுதலை மேம்படுத்த உதவும்.

அவகேடோ:

அவகேடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய் பழம் பாலுணர்வை அதிகரிக்கும் பழம் என்றும் அழைக்கப்படுகிறது. முட்டை வடிவத்தில் இருக்கும் இந்த பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை பாலியல் ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன.

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்