Health Tips: சிறிய விஷயத்தை மறந்துவிடுகிறீர்களா? இதுதான் அம்னீஷியாவா..? என்ன செய்யலாம்?
Amnesia: மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, நிதி சிக்கல்கள் போன்றவற்றால் பலருக்கு மனநல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனை ஞாபக மறதி. கடந்த காலத்தில் நடந்தவற்றை மறப்பது பழக்கம்தான். ஆனால், இன்று காலை என்ன உணவு சாப்பிட்டாய் என்பதை உங்களால் நினைவில் கொள்ள முடியாவிட்டாலும் அல்லது மறந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஞாபக மறதி: முதிர்ச்சியை தொடும்போது உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறைய தொடங்குவது பொதுவான இயல்புதான். ஆனால், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகள் காரணமாக 35 வயதிற்குள்ளாகவே பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும், மிக முக்கியமாக மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, நிதி சிக்கல்கள் போன்றவற்றால் பலருக்கு மனநல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய பிரச்சனைகளில் மிக முக்கியமான பிரச்சனை ஞாபக மறதி. கடந்த காலத்தில் நடந்தவற்றை மறப்பது பழக்கம்தான். ஆனால், இன்று காலை என்ன உணவு சாப்பிட்டாய் என்பதை உங்களால் நினைவில் கொள்ள முடியாவிட்டாலும் அல்லது மறந்துவிட்டதாக நீங்கள் உணர்ந்தாலும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ALSO READ: Health Tips: காய்ச்சலின்போது எந்த உணவுகளை சாப்பிடக் கூடாது தெரியுமா..? இந்த தவறுகளை செய்யாதீங்க!
ஞாபக மறதி என்றால் என்ன..?
ஞாபக மறதி (அம்னீஷியா) என்பது ஒரு வகையான மன நிலையாகும். இந்த ஞாபக மறதி தலைக் காயம், மூளை அதிர்ச்சி, அதிகபடியான மன அழுத்தம் அல்லது நரம்பியல் கோளாறுகள் போன்றவற்றால் அடிக்கடி ஏற்படும் நினைவாற்றலை இழப்பது ஆகும். இது இரண்டு வகைப்படும்.
1. ரெட்ரோகிரேட் அம்னீஷியா
ரெட்ரோகிரேட் அம்னீஷியா என்பது ஒருவரது கடந்த கால நினைவுகளை நினைவுபடுத்த முடியாதபோது ஏற்படுகிறது.
2. ஆன்டிரோகிரேட் அம்னீசியா
பழைய நினைவுகளை ஞாபகம் வைத்துக்கொண்டு, சமீபத்தில் நடந்த விஷயங்களை மறந்துவிடுவது.
மறதி நோயின் அறிகுறிகள் என்ன?
மறதி நோயின் அறிகுறிகள் அதன் வகை மற்றும் அடிப்படை காரணத்தைப் பொறுத்து மாறுபடும். சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- நினைவாற்றல் இழப்பு
- குழப்பம்
- தெரிந்த முகங்கள் அல்லது இடங்களை அடையாளம் காண்பதில் சிரமம்
- புதிய தகவல்களைக் கற்றுக்கொள்வதில் பிரச்சனை
அதிக மன அழுத்தம், பதட்டம் அல்லது பிற மருத்துவ பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளால் பலர் இந்த பிரச்சனையை அனுபவிக்கின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட, இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படாமல் இருக்க, வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த பிரச்சனையை சரி செய்வது எப்படி..?
- சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான மூளைக்கு சுறுசுறுப்பான வாழ்க்கை முறை தேவை. அதன்படி, மூளைக்கு சிறு சிறு வேலைகள் கொடுப்பது நல்லது. உதாரணத்திற்கு, சிறிய கணக்குகள் என்றால், கால்குலேட்டரை பயன்படுத்தாமல், நம்மால் முடிந்த கணக்குகளை போட்டு தீர்வு காண வேண்டும். அதேபோல், செஸ் உள்ளிட்ட அறிவு சார்ந்த விளையாட்டுகளை விளையாடலாம்.
- அம்னீசியா சிகிச்சையானது, அவர்களின் ஞாபக மறதியை பொறுத்தது. முதலில் மறதி எப்படி ஏற்பட்டது என்பதை பொறுத்து அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- எந்த வயதினராக இருந்தாலும் யோகா மற்றும் நடைப்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது மூளையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மூளை செல்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
மறதி பிரச்சனை வராமல் எப்படி தடுக்கலாம்..?
- உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் திடீரென அதிகரிக்க ஆரம்பித்தால், அது மூளையை சீர்குலைக்கும். இது டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, உடல் எடையை பராமரிப்பதும் நல்லது.
- நினைவாற்றல் குறைபாடுகளைத் தவிர்க்க மது மற்றும் போதைப்பொருள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துங்கள்.
- அதிக ஆபத்துள்ள விளையாட்டுகளை விளையாடும்போது தலையில் காயங்களைத் தடுக்க ஹெல்மெட் அணியுங்கள்.
- தலையில் காயம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, வாகனங்களில் பயணிக்கும் போது எப்போதும் சீட் பெல்ட்டைப் பயன்படுத்தவும்.