Heart Attack Symptoms: திடீரென முகத்தின் நிறம் மாறுகிறதா..? மாரடைப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்!
Heart Attack: நெஞ்சு பகுதியில் வலி எடுக்கும்போது சிலர் வாயு தொடர்பான பிரச்சனைகள் என்று பெரிதாக கண்டு கொள்வதில்லை. இதுவே, சில நேரத்தில் பெரிய அளவிலான ஆபத்தை கொடுத்து விடுகிறது. மாரடைப்பு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்தால் ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மாரடைப்பு வருவதற்கு முன்பே, சிலருக்கு சில அறிகுறிகள் காமிக்க தொடங்கும்.
மாரடைப்பு: கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பு என்ற வார்த்தையை நம் வாழ்வில் அடிக்கடி கேட்டு வருகிறோம். இது முதியவர்களுக்கு மட்டுமே வரும் என்ற காலம் மாறி இப்போது 30 முதல் 40 வயது இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுகிறது. இதனால் ஒரு சில பேருக்கு உயிர் போகின்ற ஆபத்தும் ஏற்படுகிறது. நெஞ்சு பகுதியில் வலி எடுக்கும்போது சிலர் வாயு தொடர்பான பிரச்சனைகள் என்று பெரிதாக கண்டு கொள்வதில்லை. இதுவே, சில நேரத்தில் பெரிய அளவிலான ஆபத்தை கொடுத்து விடுகிறது. மாரடைப்பு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்தால் ஆபத்தில் இருந்து காப்பாற்றலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் மாரடைப்பு வருவதற்கு முன்பே, சிலருக்கு சில அறிகுறிகள் காமிக்க தொடங்கும். மருத்துவர்கள் அறிவுரையின்படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் சில வகையான அறிகுறிகள் உடலில் தோன்றும். அது என்னவென்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ALSO READ: Healthy Sleep Habits: தூக்கம் உடலில் இதையெல்லாம் சரி செய்யும்.. இவ்வளவு நேரம் தூங்குங்க!
முகத்தில் வீக்கம்:
காரணமே இல்லாமல் ஒருவரின் முகம் வீங்கியிருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதயம் இரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியாமல் போகும் போது, உடலில் திரவம் குவிந்து, முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
கண்களுக்கு அருகில் கொழுப்புகள் படிதல்:
கண்களுக்கு அடியிலும், இமைகளுக்கு அருகிலும் கொழுப்புகள் படிந்திருந்தால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். வெளிர் மஞ்சள் நிற பொருட்கள் கண்களைச் சுற்றி குவியத் தொடங்கும். இது சாந்தெலஸ்மா என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் இதயம், மூளை மற்றும் பல உறுப்புகளுக்கு ரத்தம் செல்வதைத் தடுக்கலாம். இது பக்கவாதம் மற்றும் இதயத்தின் அபாயத்தை அதிகரிக்கிறது.
முகத்தின் இடது பக்கத்தில் வலி:
முகத்தின் இடது பக்கத்தில் உள்ள வலியோ, உணர்வுகள் இல்லாமல் இருந்தாகோ அது மாரடைப்புக்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். உங்கள் முகத்தின் இடது பக்கத்தில் நீண்ட காலமாக வலி, உணர்வின்மை இருந்தால், அப்போது உடனே நீங்கள் மருத்துவரை தொடர்பு கொள்வது நல்லது.
முகத்தின் நிறம் மாறுதல்:
முகத்தின் நிறம் திடீரென்று நீலம் அல்லது மஞ்சள் நிறமாக மாறினால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் சரியாகச் செயல்படாதபோது, போதுமான ஆக்ஸிஜன் உள்ள இரத்தம் உடலின் சில பகுதிகளைச் சென்றடையாது. இதனால் தோலின் நிறம் மாற தொடங்கும். அப்படியான சூழல் உங்களுக்கு ஆரம்பிக்கும்போது நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது நல்லது.
ALSO READ: Relationship Advice: தம்பதிக்குள் காதலை குறைக்கும் ஸ்மார்ட்ஃபோன்.. நீங்களும் இந்த தப்பு பண்ணாதீங்க!
மேலும் சில..
- அசிடிட்டி போன்ற பிரச்னை இல்லாமல் நெஞ்சுவலி வந்தால் உடனே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மில் பெரும்பாலோர் நெஞ்சு வலியை லேசாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் சில சமயங்களில் நெஞ்சு வலியை மாரடைப்பின் முதன்மை அறிகுறி.
- மாரடைப்பின் மற்றொரு முக்கிய அறிகுறி வியர்வை. உடல் உழைப்பு இல்லாமல் கூட அதிக அளவில் வியர்த்தால் மருத்துவரை அணுக வேண்டும்.
- திடீரென தலைசுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டாலும் உடனடியாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவையும் மாரடைப்புக்கான முதன்மை அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.