5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Heart Blockage: இதய அடைப்பு என்றால் என்ன..? இவற்றை எவ்வாறு கண்டறிவது..?

Health Tips: இதய அடைப்பு என்பது என்பது நரம்புகளில் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனையை உடனடியாக கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

Heart Blockage: இதய அடைப்பு என்றால் என்ன..? இவற்றை எவ்வாறு கண்டறிவது..?
இதய அடைப்பு (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Nov 2024 13:54 PM

நமது உடல் ஆரோக்கியத்தின் மிக முக்கியமான பகுதிகளில் இதயமும் ஒன்று. இது தினசரி சரியாக இயங்குவதற்கு சுத்தமான இரத்த ஓட்டம் அவசியம். இதய அடைப்பு என்பது என்பது நரம்புகளில் இரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனையை உடனடியாக கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில், இந்த செய்தி குறிப்பில் இதய அடைப்பின் அறிகுறிகள் மற்றும் அது எப்படி உண்டாகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

இதய அடைப்பு என்றால் என்ன..?

இதய அடைப்பு என்பதை ஹார்ட் பிளாக் என்று மருத்துவ முறையில் சொல்வார்கள். அதாவது, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை தடுக்கும் பொருள்களால் தமனி அல்லது நரம்புகளில் அடைப்பு உண்டாகும். இதன் விளைவாக, இரத்த ஓட்டம் குறைந்து இதயத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சரியான அளவு இரத்தம் செல்வதில் சிரமம் ஏற்படும்.

ALSO READ: Health Tips: தினமும் ஒரு பச்சை ஆப்பிள்.. உடலுக்கு கிடைக்கும் இரட்டிப்பு பலன்கள்..!

இதய அடைப்பின் வகைகள்:

ஹார்ட் பிளாக் என்பது இதய துடிப்பு செயல்பாட்டில் குறுக்கீடு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல வகைகளாக உள்ளது. அவை:

முழுமையான ஹார்ட் பிளாக்:

முழுமையான ஹார்ட் பிளாக் என்பது இதயத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளுக்கு இடையேயான செயல்பாட்டில் முழுமையான தடங்கல் ஏற்படும். இது இதயத்தின் மேல் மற்றும் கீழ் அறைகளுக்கு இடையேயான தொடர்பை உடைத்து, இதயத்தின் முக்கிய செயல்பாடுகளை கடத்துவதை தடுக்கும்.

இரண்டாம் நிலை இதய அடைப்பு:

இந்த வகை இதய அடைப்புகளில் சில தடங்கல் ஏற்படும். இது ஒரு பக்க மார்பு வலி, தோள்பட்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் என இதில் ஏதேனும் ஒன்றை கொடுக்கும். இதையே இரண்டாம் நிலை இதய அடைப்பு என்று அழைக்கிறோம்.

மூன்றாம் நிலை இதய அடைப்பு:

இந்த வகை இதய அடைப்பில், இதயத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பில் தடங்கல் மட்டும் ஏற்படாமல், முற்றிலும் இணைப்பு துண்டிக்கப்படும். இது இதயத்தின் தொடர்புடைய செயல்பாடுகளில் முழுமையான குறுக்கீட்டை ஏற்படுத்தும்.

இதய அடைப்பின் அறிகுறிகள்:

மார்பு வலி:

இதய அடைப்பின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் மார்பு வலி தோன்றும். இதை தொடர்ந்து, இது போன்ற வலியை நீங்கள் கைகள், தோள்கள் மற்றும் கணுக்கால்களிலும் உணரலாம்.

சுவாசிப்பதில் சிரமம்:

அடைப்பு காரணமாக இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் செல்வதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக, உங்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் உண்டாகும்.

சோர்வு:

பெரிய அளவில் இல்லாமல் சிறிய செயல்களை மேற்கொண்டாலும், நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் இதுவும் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

வாந்தி:

இதய அடைப்பு காரணமாக உடலின் சில பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை சரியாக செல்வதில் சிரமம் உண்டாகும். இது வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

தலைச்சுற்றல்:

இதய பிரச்சனைகள் திடீர் தலைச்சுற்றலை அடிக்கடி உண்டாக்கும். இதை எப்போதும் அலட்சியமாக எடுத்து கொள்ளக்கூடாது.

இதய துடிப்பில் மாற்றங்கள்:

இதய அடைப்பால் இதய துடிப்பில் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்தும்.

இதய அடைப்புக்கான காரணங்கள்:

வயது அதிகரிப்பு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய், புகைபிடித்தல், உடல் பருமன் போன்ற காரணங்களால் இதய அடைப்பு உண்டாகலாம்.

பெருந்தமனி அடைப்பு:

இதய தமனிகளின் சுவர்களில் கொழுப்பு, கால்சியம் மற்றும் பிற பொருட்களின் குவிப்பு ஆகும். இது பெருந்தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும்.

இரத்த உறைவு:

சில நேரங்களில் தமனிகளில் கட்டிகள் உருவாகி இரத்த உறைவு ஏற்படலாம். இது தமனியை அடைத்து இரத்த ஓட்டத்தை தடுக்கலாம்.

ALSO READ: Health Tips: போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு தூங்குவது நல்லதா? இந்த பிரச்சனைகள் வரலாம்!

வீக்கம்:

உடலில் உள்ள கழிவு பொருட்களால் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு, தமனிகளில் அடைப்பு அதிகரிக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

இதய அடைப்பு ஏற்படும்போது, ஒரு நபர் அடிக்கடி மாரடைப்பால் பாதிக்கப்படலாம். இது உயிருக்கு மிகவும் ஆபத்து. எனவே, இதை சரியான் நேரத்தில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது மிக முக்கியம்.

Latest News