Health Tips: சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 4 விஷயங்கள்.. இந்த பிரச்சனைகளை உண்டாக்கும்! - Tamil News | Here are 4 things that should not be done immediately after eating; health tips in tamil | TV9 Tamil

Health Tips: சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 4 விஷயங்கள்.. இந்த பிரச்சனைகளை உண்டாக்கும்!

Water After Meals: சாப்பிட்டவுடன் எந்த விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. இது அவர்களுக்கு அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தந்துவிடுகிறது. இந்தநிலையில், சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Health Tips: சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 4 விஷயங்கள்.. இந்த பிரச்சனைகளை உண்டாக்கும்!

உணவு அருந்துதல் (Image: freepik)

Published: 

18 Oct 2024 16:03 PM

உணவு உடலுக்கு தேவையான ஆற்றலை தினசரி வழங்குகிறது. உணவில் இருந்தும் நாம் பெறும் ஊட்டசத்துக்கள் நமது உடலை ஆரோக்கியமாக வைத்து உடல் மற்றும் மனதினை சரியாக இயங்க உதவி செய்கிறது. எனவே, நாம் சரிவிகித உணவை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்துவது மிக முக்கியம்.

அதேபோல், சாப்பிட்டவுடன் எந்த விஷயங்களை செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று பெரும்பாலானோருக்கு தெரிவது இல்லை. இது அவர்களுக்கு அஜீரணம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தந்துவிடுகிறது. இந்தநிலையில், சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Diwali Sweet: தீபாவளிக்கு சூப்பர் ஸ்வீட் செய்ய ஆசையா..? முந்திரி கேக், லட்டு செய்து அசத்துங்க..!

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது:

தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இருப்பினும், சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்ல பழக்கம் கிடையாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால், செரிமானம் குறைந்து நாம் சாப்பிடும் உணவை செரிமானம் ஆகாமல் தடுக்கிறது. இதனால், நமக்கு வயிற்று வலி, அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமான நொதிகள் மற்றும் அமிலங்களை நீர்த்துப்போகச் செய்கிறது, இதன் காரணமாக உணவு சரியாக ஜீரணமாகாது. இதனால் வாய்வு, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பதன் மூலம், உணவு விரைவில் குடலை சென்றடைவதோடு, உணவில் உள்ள சத்துக்களின் முழுப் பலனையும் உடலுக்குக் கிடைக்காது. மேலும், உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் அதிகப்படியான மற்றும் அடிக்கடி பசி ஏற்படும். இது நமது உடலின் எடையை அதிகரிக்க செய்யும்.

சாப்பிட்ட உடனே குளிக்கக்கூடாது:

சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது எப்படி தவறோ, அதே போல் சாப்பிட்ட உடனே குளிப்பதும் தவறு. சாப்பிட்ட பிறகு குளித்தால் உடல் வெப்பநிலை குறைத்து செரிமானத்தை சீர்குலைக்கிறது. அதாவது, உணவை சாப்பிட்ட பிறகு, உடல் செரிமானத்தில் கவனம் செலுத்துகிறது, இந்த செயல்முறைக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் குளித்தால், உடலின் ஆற்றல் குளிப்பதில் மும்முரமாகி, செரிமானம் தொடர்பான விஷயத்தை குறைத்து விடுகிறது.

சாப்பிட்ட உடனே உடனடியாக குளித்தால் செரிமான அமைப்புக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, உடல் குழப்பமடைந்து, ஹைபர்தெர்மிக் நடவடிக்கைக்கு செல்லலாம்.

உணவு சரியாக ஜீரணமாகாததால், உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும். சாப்பிட்ட பிறகு குளிப்பதும் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கும். மேலும், சாப்பிட்ட பின் குளித்தால் வயிற்று வலி, வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

சாப்பிட்ட பிறகு படுக்கவோ, உட்காரவோ கூடாது:

சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்ளும் அல்லது உட்காரும் பழக்கம் இருந்தால், இந்தப் பழக்கத்தை முதலில் நிறுத்துங்கள். இது மோசமான செரிமானத்திற்கு வழிவகுத்து உடல் பருமன் ஆபத்தை அதிகரிக்கிறது. சாப்பிட்ட பின் சிறிது நேரம் வஜ்ராசனம் செய்யவும் அல்லது நடக்கவும்.

மேலும், சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால் வயிற்றில் அமிலம் அதிகரித்து பிரச்சனைகள் ஏற்படும். உணவு உண்ட உடனேயே படுத்துக்கொள்வதால் செரிமானம் பாதிக்கப்படுவதோடு, உணவு சரியாக ஜீரணமாகாது. இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை குறைத்து, ஊட்டச்சத்து பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ALSO READ: Monsoon Health Tips: மழைக்காலத்தில் இந்த 5 நோய்களால் அதிக ஆபத்து..! இவற்றை தடுப்பது எப்படி?

அதேபோல், சாப்பிட்ட உடனேயே படுத்துக்கொள்வதால் உடலில் கொழுப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகரிக்கும். இது வளர்சிதை மாற்றத்தை பலவீனப்படுத்தி நீரிழிவு, உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிக்கக் கூடாது:

சாப்பிட்ட பிறகு டீ அல்லது காபி குடிப்பதால் அதில் உள்ள காஃபின் வயிற்றின் உட்புறத்தை எரிச்சலூட்டுகிறது, இது அமிலத்தன்மை, வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

டீ மற்றும் காபியில் உள்ள டானின்கள் வயிற்றிலேயே இரும்புச்சத்தை உடைக்கிறது. இது உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

என்ன செய்யலாம்..?

பொதுவாக, சாப்பிட்ட பிறகு குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் பழக்கம் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது செரிமான செயல்முறைக்கு உதவுகிறது.

வைரல் நாயகிதான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்