5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Monsoon Health Tips: மழைக்காலத்தில் படையெடுக்கும் நோய்கள்.. உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி..?

Monsoon Safety Tips: மழை காலத்தை நீங்கள் எதிர்கொள்ளும்போது எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். மழைக்காலத்தில் நீங்கள் நடப்பது முதல் தண்ணீர் குடிப்பது வரை அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது முக்கியம். பருவ மழை நம் உடலில் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகளை தரும். அந்தவகையில், இன்று பருவ மழைக்காலத்தில் நாம் எப்படி ஆரோக்கியமாக நமது உடலை பாதுக்காத்து கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Monsoon Health Tips: மழைக்காலத்தில் படையெடுக்கும் நோய்கள்.. உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி..?
மழைக்காலம் (Image: iiievgeniy/E+/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 26 Sep 2024 19:31 PM

மழைக்கு பிறகு வரும் மண்ணின் வாசனை இனிமையானது. ஆனால், கோடை வெயிலுக்கு பிறகு வரும் பருவமழை பல உடல்நல பிரச்சனைகளை நமக்கு தருகிறது. இது மண்ணில் ஈரப்பதத்தை அதிகரிக்க செய்வது மட்டுமின்றி தண்ணீரால் பல நோய்களும் பரவும் பருவமாகும். இந்த மழை காலத்தை நீங்கள் எதிர்கொள்ளும்போது எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம். மழைக்காலத்தில் நீங்கள் நடப்பது முதல் தண்ணீர் குடிப்பது வரை அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருப்பது முக்கியம். பருவ மழை நம் உடலில் வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகளை தரும். அந்தவகையில், இன்று பருவ மழைக்காலத்தில் நாம் எப்படி ஆரோக்கியமாக நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Manu Bhaker: நிகழ்ச்சிக்கு ஏன் ஒலிம்பிக் பதக்கம்..? நெட்டிசன்கள் ட்ரோல்.. மனு பாக்கர் பதிலடி!

கொதிக்க வைத்த தண்ணீர்:

மழைக்காலத்தில் நமக்கு தண்ணீர் தரும் நீ ஆதாரங்கள் மாடுபடுவதற்கான அதிக ஆபத்து உள்ளது. இது நீர்வழி நோய்களை அதிகரிக்க செய்யும். அதன்படி மழைக்காலத்தில் நீங்கள் சுத்தமான தண்ணீரை குடிப்பது மிக மிக முக்கியம். தண்ணீரை கொதிக்க வைக்கும்போது அதில் இருக்கும் பெரும்பாலான பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை கொல்லும். எனவே, நீங்கள் தண்ணீரை எப்போதும் வடிகட்டிய மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. அதேபோல், பயணத்தின்போது சொந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். எப்போது மூடிய மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீரை மட்டுமே குடித்து பழகுங்கள்.

வைட்டமின் சி:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மழைக்காலத்தில் மிக முக்கியமான ஆரோக்கிய குறிப்புகளில் ஒன்று. இது உங்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் வராமல் உங்களை காக்கும். அதன்படி, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துகொள்வது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, தொற்றுநோயை எதிர்த்து போராட உதவி செய்யும்.

பாகற்காய் போன்ற உணவுகள்:

பாகற்காய், வெந்தயம், வேப்பம்பூ போன்ற கசப்பான உணவுகளை, உங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்வது மழைக்காலத்தில் காக்கும். இந்த கசப்பான உணவுகள் உங்களது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதிகளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இந்த வகை உணவுகளில் இயற்கையான ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உங்கள் குடலை சுத்தப்படுத்தி, தொற்றுநோய்களை தடுக்க உதவி செய்கின்றன. பாகற்காய் போன்ற உணவுகளை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பேணவும், பருவகால நோய்களை தடுக்கவும் பெரிதும் உதவி செய்யும்.

புரோபயாடிக் உணவுகள்:

மழை காலத்தில் குடல் ஆரோக்கியத்தை பேணுவது மிக முக்கியம். அதன்படி, தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளை உட்கொள்வது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் ஆரோக்கியத்தை சமநிலையில் பராமரிக்க உதவி செய்யும். மேலும், புரோபயாடிக் உணவுகள் குடல் நோய் எதிர்ப்பு சக்தியை பெரிதும் மேம்படுத்த உதவுகிறது.

துரித உணவுகளை தவிருங்கள்:

மழைக்காலத்தில் துரித மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருந்து விலகி இருப்பது மிக முக்கியம். துரித மற்றும் காரமான உணவுகள் வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்கிறது. மழைக்காலத்தில் இத்தகைய உணவுகளை உட்கொள்வதைக் குறைப்பது நல்லது, ஏனெனில் இது உங்கள் செரிமானத்தை சிறிது பலவீனப்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

ALSO READ: Food Recipes: சுவைமிக்க தேங்காய் பால் ரசம் செய்ய ஆசையா..? உங்களுக்கான ரெசிபி இதோ..!

காய், கால்களை கழுவுங்கள்:

மழைக்காலத்தில் சுகாதார குறிப்புகளில் ஒன்று. கை, கால்களை பராமரிப்பது மிக முக்கியம். இது மட்டுமே பெரும்பாலான மழைக்கால நோய்களில் இருந்து உங்களை தடுக்கும். உங்கள் கைகளை சோப்பினால் குறைந்தது 20 வினாடிகள் நன்றாக தேய்த்து கழுவவும். அதேபோல், வெளியே சென்று வந்தவுடன் முழு கால்களை நன்றாக கழுவுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

போதுமான தூக்கம்:

மழைக்காலத்தில் போதுமான அளவு தூங்குவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்கள் உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. 7-9 மணிநேரம் நிம்மதியான உறக்கம் ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியுடன் தொடர்புடைய சவால்களைச் சமாளிப்பதை எளிதாக்குகிறது.

Latest News