Food Recipes: பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..? எளிதாக செய்யக்கூடிய சூப்பர் ரெசிபி!

Dates Halwa: பேரிச்சம் பழத்தில் உள்ள மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உடலை ஆரோக்கியமான வைத்திருக்க உதவி செய்யும். மேலும் பேரிச்சம் பழத்தில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்கின்றன. இந்தநிலையில், பேரிச்சம் பழத்தை கொண்டு எவ்வாறு அல்வா செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

Food Recipes: பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..? எளிதாக செய்யக்கூடிய சூப்பர் ரெசிபி!

பேரிச்சம்பழ அல்வா (Image: FREEPIK)

Updated On: 

11 Oct 2024 15:37 PM

பேரிச்சம் பழம் ஒரு உலர் பழமாகும். இது வேரில் இருந்து பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. பேரிச்சம் பழத்தில் உள்ள மக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உடலை ஆரோக்கியமான வைத்திருக்க உதவி செய்யும். மேலும் பேரிச்சம் பழத்தில் உள்ள பாலிஃபீனால்கள் உடலில் செரிமானத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்கின்றன. இந்தநிலையில், பேரிச்சம் பழத்தை கொண்டு எவ்வாறு அல்வா செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ALSO READ: Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!

பேரிச்சம்பழ அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

  1. விதை நீக்கி பொடி பொடியாக நறுக்கிய பேரிச்சம் பழம் – 250 கிராம்
  2. வெள்ளை சர்க்கரை –  250 கிராம்
  3. பாதாம் பருப்பு – தேவையான அளவு
  4. குங்குமப்பூ – தேவையான அளவு
  5. பால் – 1/2 கப் அல்லது 125 கிராம்
  6. முந்திரி பருப்பு – தேவையான அளவு
  7. நெய் – 1 கப் அல்லது 250 கிராம்
  8. சுடுதண்ணீர்  – 1 கப்

பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..?

  • முதலில் மேலே குறிப்பிட்டதை போன்று பேரிச்சம் பழத்தில் இருந்து கொட்டைகளை எடுத்து பொடி பொடியாக வெட்டிக்கொள்ளவும். பின், அல்வா செய்வதற்கு முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் பேரிச்சம்பழத்தை அதனுடன் சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக ஊற வைக்கவும்.
  • பேரிச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு அதிகமாக சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக ஊறவிடவும். அதாவது பேரிச்சம்பழம் முழுவதும் சுடுதண்ணீருக்கு கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
  • தொடர்ந்து, அடுத்த நாள் காலை பேரிச்சம்பழம் எடுத்து கொள்ளவும். மிக்ஸியில் ஊறிய பேரிச்சம்பழம், பால் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • தட்டில் அல்வா ஒட்டாதப்படி, ஒரு பெரிய தட்டு முழுவதும் சிறிதளவு வெண்ணெய் அல்லது நெய்யை பூசி வைத்து கொள்ளவும்.
  • பின்பு, கேஸை ஆன் செய்து அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும், அதில் சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாகு காய்ச்சி கொள்ளவும்.
  • சர்க்கரை மெல்ல கரைந்து இளம்பாகு பதத்தை அடைந்ததும் அதனுள் அரைத்து வைத்திருக்கும் பேரிச்சம்பழ விழுது, நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  • அதன் பின்பு இந்த கலவையில் வறுத்து வைத்திருந்த முந்திரி, பாதாம் பருப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கிளறவும். தொடர்ந்து, அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்க்கவும்.
  • இவை நன்றாக கலந்து விட்டபின் பாத்திரத்தில் ஒட்டாத பதத்தை இந்த கலவை அடைந்ததும் பேரிச்சம்பழ அல்வா தயாராகிவிடும்.
  • தயாரான பேரிச்சம்பழ அல்வா உள்ள கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கிய பாத்திரத்தில் உள்ள பேரிச்சம்பழ அல்வாவை வெண்ணெய் அல்லது நெய் பூசிய தயார் செய்திருந்த தட்டில் கொட்டவும்.
  • தட்டில் போட்ட பின்பு பேரிச்சம்பழ அல்வாவை நன்றாக பரப்பி விட்டு கொள்ளவும்.
  • தொடர்ந்து, கொட்டப்பட்ட பேரிச்சம்பழ அல்வாவை கத்தியை கொண்டு சதுர வடிவில் உங்களுக்கு தேவையான அளவில் வெட்டி கொள்ளவும்.
  • இவை அனைத்தையும் சூடாக இருக்கும்போது செய்வது நல்லது.
  • இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு போட்ட இடங்களில் மீண்டும் கத்தியால் வெட்டி எடுக்கவும்.
  • இப்போது தேவையான அளவு வெட்டி எடுத்த பேரிச்சம்பழ அல்வா துண்டுகளை ஒருதட்டில் எடுத்து வைத்து, உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு பரிமாறி மகிழ்ச்சியை கொடுங்கள்.

ALSO READ: Food Recipes: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ​​சிக்கன் வெள்ளை பிரியாணி.. 15 நிமிடத்தில் சூப்பர் டிஸ் தயார்..!

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்:

  • பிரவசத்திற்கு பிறகு சில பெண்களுக்கு மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்படும். இவற்றில் இருந்து நிவாரணம் பெற பேரிச்சம் பழத்தை எடுத்து கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம் பழத்தை டஹ்ண்ணீரில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கி செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • பேரிச்சம்பழம் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை போக்க தாராளமாக பேரிச்சம் பழத்தை எடுத்து கொள்ளலாம். பேரிச்சம்பழத்தில் உள்ள அதிக இரும்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் கலவை ஆற்றலை அதிகரிக்க செய்யும். இதில் உள்ள கால்சியம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!