5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Bathroom Cleaner: டாய்லெட்டை இதை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.. கண்ணாடி போல் சூப்பராக மின்னும்..!

Toilet Cleaner: வீட்டில் திடீரென யாரேனும் விருந்தாளிகள் வந்து, ரெஸ்ட் ரூம் எங்கே என்று கேட்டால் இங்கே இருக்கிறது என சொல்லவே சங்கடமாக இருக்கும். எவ்வளவுதான் டாய்லெட்களை சுத்தம் செய்தும், உங்களால் அந்த கறைகளை நீக்க முடியவில்லை என்று கவலை இருந்தால், அதற்கான தீர்வுகளை உங்களுக்கு இங்கே சொல்கிறோம்.

Bathroom Cleaner: டாய்லெட்டை இதை கொண்டு சுத்தம் செய்யுங்கள்.. கண்ணாடி போல் சூப்பராக மின்னும்..!
டாய்லெட் (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 03 Nov 2024 18:43 PM

வீட்டை என்னதான் விழுந்து விழுந்து கூட்டி, தண்ணீர் விட்டு துடைத்து சுத்தம் செய்தாலும், நம் வீட்டின் கழிவறை எப்போதும் உப்புக்கறை படிந்தும், வெளியே செல்லும் டாய்லெட்டில் மஞ்சள் கறை படிந்து அசுத்தமாக இருக்கும். இதன் காரணமாக, வீட்டில் திடீரென யாரேனும் விருந்தாளிகள் வந்து, ரெஸ்ட் ரூம் எங்கே என்று கேட்டால் இங்கே இருக்கிறது என சொல்லவே சங்கடமாக இருக்கும். எவ்வளவுதான் டாய்லெட்களை சுத்தம் செய்தும், உங்களால் அந்த கறைகளை நீக்க முடியவில்லை என்று கவலை இருந்தால், அதற்கான தீர்வுகளை உங்களுக்கு இங்கே சொல்கிறோம். இது உங்களுக்கு அதிக செலவையும் தராது, டாய்லெட்டையும் பளபளக்க செய்யும்.

ALSO READ: Chalazion: கண் இமை மீது சிவப்பு நிற கட்டியா..? இது ஏன் உருவாகிறது தெரியுமா..?

சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்:

  • எலுமிச்சை சாறு
  • சமையல் சோடா
  • டிஷ் வாஷ்
  • நல்லெண்ணெய்

இதை எப்படி தயாரிப்பது..?

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் 2 டீஸ்பூன் சமையல் சோடாவை எடுத்துக்கொள்ளவும். அதில், எடுத்து வைத்துள்ள எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளவும். இதை நன்றாக கலந்து கொண்டபின், ஒரு ஸ்பூன் பாத்திரம் கழுவும் டிஷ் வாஷை சேர்த்து ஒரு ஸ்பூனை கொண்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.

இதன்பின், ஒரு 5 துளிகள் நல்லெண்ணெயை சேர்த்து கலக்கி கொள்ளவும். இப்போது, டாய்லெட் மற்றும் குளியலறையில் இருக்கு உப்பு கறை, மஞ்சள் கறை மீது ஊற்றி நன்றாக அழுத்தி தேய்க்கவும். எப்போதும்போல், கழுவிய பின் தண்ணீரை ஊற்றி அலசினால் அனைத்தும் புதியதும் போலவும், பளபளப்பாக மின்னும்.

தேவையான பொருட்கள்:

சோப்பு தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா – 1 டேபிள் ஸ்பூன்
ஹார்பிக் (அ) குளியலறை கிளீனர் – 1 டேபிள் ஸ்பூன்

முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் சோப்பு தூள் போட்டு கொள்ளவும். அதில், 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து சிறிது கிளறிய பின், 1 டேபிள் ஸ்பூன் ஹார்பிக் சேர்த்து கொள்ளவும்.

ALSO READ: Uric Acid Control: உடலில் பல பிரச்சனை தரும் யூரிக் அமிலம்.. இதை எப்படி கட்டுப்படுத்தலாம்…?

இப்படி சுத்தம் செய்யுங்கள்..

முதலில் டாய்லெட் மற்றும் குளியலறையில் உள்ள கறை படிந்த இடங்களில் தண்ணீரை நன்றாக ஊற்றி ஈரப்பதம் ஆக்குங்கள். அதன்பின், மேலே தயாரித்து வைத்துள்ள கலவையை சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக நுரை பொங்க கலக்கி கொள்ளவும். அதன்பின், இந்த தண்ணீரை டைல் மீது ஊற்றி ஊற விடவும். 5 நிமிடங்கள் நன்றாக ஊறியபின், டைல்ஸ் மற்றும் டைல்ஸ்கள் மீது பிரஸ் கொண்டு நன்றாக சுத்தம் செய்யவும். இது உங்கள் டாய்லெட்டை பளபளப்பாக மின்ன செய்யும்.

இது போன்ற கலவைகளை பயன்படுத்தும்போது முடிந்தவரை கைகளுக்கு கையுறையும், முகத்தில் மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள். இதில் இருந்து பாக்டீரியா மற்றும் அமிலதன்மை உங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் தடுக்கும்.

தேயிலை கழிவுகள்:

உங்கள் வீட்டு டாய்லெட்களை சுத்தம் செய்ய, நீங்கள் தேயிலை கழிவுகளையும் பயன்படுத்தலாம். இது சூப்பராக டாய்லெட்களை சுத்தம் செய்யவும்.

தேவையான பொருட்கள்:

  • தேயிலை கழிவுகள்
  • சர்ப் (அ) பேக்கிங் சோடா

டீ தயாரித்த பிறகு தேயிலை கழிவுகளை தூக்கி எறிந்து பெரிய தவறுகளை செய்யாதீர்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும், அதில், டீயில் இருந்து வடிகட்டிய தேயிலை கழிவுகள், சர்ப் அல்லது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை சிறிது நேரம் தனியாக எடுத்துவைத்து குளிர வைக்கவும். இதை டாய்லெட்டில் ஊற்றி பிரஷ் மூலம் ஸ்க்ரப் செய்தால் மஞ்சள் கறைகள் நீங்கும்.

Latest News