Travel Tips: அசர வைக்கும் தமிழகத்தின் 6 மலை பிரதேசங்கள்…
Tourist Spots: காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வர இருப்பதால் குடும்பத்துடன் எங்கே சுற்றுலா செல்வது என்று தேட தொடங்கி இருப்பீர்கள். இது செப்டம்பர் மாதமாக இருந்தாலும் மே மாதத்திற்கு சமமாக வெயில் கொளுத்துகிறது. இந்த வெயிலில் இருந்து சமாளிக்க பெரும்பாலும் மலை பிரதேசம் என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் தான் பலரின் தேர்வாக இருக்கும்.
காலாண்டு விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை வர இருப்பதால் குடும்பத்துடன் எங்கே சுற்றுலா செல்வது என்று தேட தொடங்கி இருப்பீர்கள். இது செப்டம்பர் மாதமாக இருந்தாலும் மே மாதத்திற்கு சமமாக வெயில் கொளுத்துகிறது. இந்த வெயிலில் இருந்து சமாளிக்க பெரும்பாலும் மலை பிரதேசம் என்றால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்கள் தான் பலரின் தேர்வாக இருக்கும். ஆனால் அதிகம் வெளியே தெரியாத பல குளு குளு இடங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 6 மலை ஸ்தலங்கள் பற்றி தெரிந்து கொண்டு அதில் உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு விசிட் அடியுங்கள்.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொல்லிமலை. இது கடல் மட்டத்திலிருந்து 4663 அடி உயரத்தில் இருக்கிறது. வேட்டைக்காரன் மலை என்று அழைக்கப்படும் இந்தக் கொல்லிமலை சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற பழந்தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த மலை 400 மில்லியன் பழமை வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் மலைகளில் அதிக ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள் இங்கு உள்ளது.
சாகச விரும்பிகளுக்கு ஏற்ற ஒரு இடம் இந்த கொல்லிமலை. ஆகாய கங்கை அருவி, கொள்ளிப் பாவை கோயில், அறப்பளீஸ்வரர் கோயில், முருகன் கோயில், பல்வேறு காட்சி முனைகள் மற்றும் படகு சவாரி இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
ஏலகிரி:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி திருப்பத்தூர் மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 4630 அடி உயரத்தில் இருக்கிறது. திகிலூட்டும் விதத்தில் டென்ட் அமைத்து தங்குவதற்கு அருமையான ஒரு மலைப்பிரதேசம். ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி, பூங்கனூர் ஏரி, குழந்தைகள் பூங்கா, அரசு மூலிகை பண்ணை, தொலைநோக்கி இல்லம், நிலாவூர் ஏரி, சுவாமிமலை மலையேற்றம் ஆகியவற்றை கண்டு களிக்கலாம்.
மேலும் கோடை காலத்தில் தமிழக சுற்றுலா துறையின் சார்பில் கோடை விழாக்கள் நடைபெறும்.
கல்வராயன் மலை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இந்த கல்வராயன் மலை. இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோமுகி அணை, கரிய கோயில் நீர்த்தேக்கம், அதை ஒட்டிய அழகிய பூங்கா, மான் கொம்பு நீர்வீழ்ச்சி, மேக அருவி, பெரியார் அருவி, பண்ணிய பாடி அருவி போன்றவை காணப்படுகின்றன.
குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளது. இங்கு படகு சவாரி செய்யலாம். காட்டுப்பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளை காணும் வாய்ப்பு கிடைக்கும்.
Also Read: Sleeping Tips: படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
ஜவ்வாது மலை:
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது இந்த ஜவ்வாது மலை. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் இருக்கிறது. இது மலையேற்றத்திற்கு சிறந்த ஒரு இடம். நிறைய வழிபாடு தினங்கள் நிறைந்திருக்கும் ஒரு மலைப் பிரதேசம். இந்த மழை இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த காடுகள், அருவிகள், நீரோடையில் என சுற்றுலா பயணிகளை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இந்த மலையில் பீமன் அருவி, அமிர்தி அருவி போன்ற அறிவியல் இருக்கிறது. இந்த மலையிலிருந்து செய்யாறு, நாக நதி, கமண்டல நதி, மிருகண்டா நதி ஆகிய நதிகள் உற்பத்தி ஆகின்றன. செண்பகத் தோப்பு அணை, மேல் சோழங்குப்பம் அணை, கூமுட்டேரி படகு குழாம், ஆசியாவின் மிகப்பெரிய தொலை நோக்கியான வைனு பாப்பு வான் ஆய்வகம் ஆகியவை இங்கு பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள்.
கொழுக்குமலை:
உலகத்தில் உயரமான மலையில் தேயிலை பயிரிடக்கூடிய மலைப் பிரதேசம் தான் இந்த கொழுக்கு மலை. தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கொழுக்குமலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,130 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. மீசை புலி மலை, ஜீப் சஃபாரி, மலையேற்றம் போன்றவை செய்யலாம்.
இங்கு சுற்றுலா தளங்கள் அதிகம் இல்லை என்றாலும் கம்பம், தேனி, தேக்கடி, இடுக்கி, மூணார், தேவிகுளம் போன்ற இடங்கள் அருகில் உள்ளதால் அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு மகிழலாம்.
பச்சை மலை:
திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது இந்த பச்சை மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,517 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. சின்னாறு, கல்லாறு, வெள்ளாறு, மருதையாறு போன்ற நதிகள் இங்கு உற்பத்தி ஆகிறது.
இங்கு 135 வகையான பட்டாம் பூச்சிகளை கண்டு ரசிக்கலாம். மேலும் மங்களம் அருவி, கோரையாறு அருவி போன்ற அருவிகள் உள்ளன. இங்கு வாழும் பழங்குடி மக்களிடம் நேரம் செலவழிக்கலாம்.
Also Read: Travel Tips: மலைகளின் இளவரசி.. கொடைக்கானலில் ஒரே நாளில் என்னவெல்லாம் பார்க்கலாம்?